Thursday, August 11, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (201-300) - பாகம் 3

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (201-300) - பாகம் 3

(101-200) பாகம் 2  ஐப் படிக்க ..  http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html
(1-100) பாகம்  1  ஐப் படிக்க ..     http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html 

(ஈ)பொதுமக்களுக்கு எதிராகக் கண்மூடித்தனமான மற்றும் அளவுமீறிய தாக்குதல்கள் மீதான தடை


201.
பின்வருமாறு கருதப்படுபவை மீதான வகைதொகையற்ற தாக்குதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது: (70)

குறிப்பானதொரு இராணுவ இலக்குக்கு எதிராக மேற்கொள்ளப்படாத (ஆ) ஒரு குறிப்பிட்ட இராணுவ இலக்குக்கு எதிராகச் செலுத்த டியாத யுத்த றையை அல்லது வழியைப் பிரயோகிக்கும் ஒன்று, அல்லது (இ) சர்வதேச மனிதாபிமான சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுவதற்கேற்ப விளைவுகளை மட்டுப்படுத்த டியாத யுத்த றையை அல்லது வழியைப் பிரயோகிக்கும் ஒன்று மற்றும் அதன் விளைவாக பாகுபாடின்றி இராணுவ இலக் குகளையும் பொதுமக்களையும் அல்லது பொது இடங்களையும் தாக்கும் சுபாவத் தைக் கொண்டதொன்று. (விதி 11 13, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

202.
தன்னால் பிரகடனப்படுத்தபட்ட யுத்த சூன்ய வலயங்களில் அமைந்துள்ள மற்றும் ஆஸ்பத்திகள் உணவு விநியோக வசைகளை உள்ளிட்ட வித்தி யாசமின்றிப் பொதுமக்களைத் தாக்கக் கூடிய ஆனால் குறிப்பிட்ட இராணுவ இலக்குகளை மாத்திரம் குறி வைக்காத விதத் தில் இலங்கை இராணுவம் பீரங்கிகளைப் பிரயோகிப்பதன் லம் மீறல் ஒன்றைச் செய்ததாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

அதிகமாகப் பொதுமக்கள் உள்ள இலக்குப் பார்த்த பிரதேசங்களுக்கு எதிராக கன ரக ஆயுதங்களைப் பாவித்ததாக அல்லது அவ்விடங்களில் பரவலாக பீரங்கிகளைப் பாவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தாமாகவே அவை கண்டித்தனமானவையாகும் என்பதைக் குறிப்பிடுபனவாக உள்ளது.

203.
"எதிர்பார்க்கப்படும் உறுதியான மற்றும் நேரடி இராணுவ பயனை விஞ்சக் கூடிய, தற்செயலாக பொதுமக்கள் உயிரிழப்பை, பொதுமக்கள் காயமடைவதை, பொது இடங்களைச் சேதப்படுத்துவதை அல்லது அவை இணைந்தவற்றை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதையும் சட்டம் தடை செய்கிறது. (விதி 14, ஐ.சி.ஆர்.சி.) எதிர்பார்க் கப்படும் அளவுக்கதிகமான பொதுமக்கள் மரணத்தை மற்றும் காயத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அளவுக்கதிகமான பலத்தைப் பிரயோகிப்பதையும் இவ்விதி முறை தடை செய்கிறது.

சகல சம்பவங்கள் பற்றிய தகவலும் குழுவிடம் இல்லாத அதே வேளையில், யுத்த சூன்ய வலயங்கள் மீதான தாக்குதல்கள் அத்தகைய தாக்குதல்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் இராணுவப் பயனை விட அதிகமாக இருந்ததால் இவ்வேற்பாடு பலமுறை மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. யுத்த சூன்ய வலயங்களில் கன ரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்தியுள்ளதாக பலதடவை அரசாங்கம் தெவித்துள்ளதைக் கொண்டு அவற்றின் பிரயோகம் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பது பற்றி அது அறிந்திருந்தது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.


(உ)தாக்குதல்களுக்கு முன்பும் அவற்றின் போதும் முன்னேற்பாடுகளின் தேவை

204.
இலக்குகள் இராணுவம் சம்பந்தப் பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது, பொதுமக்கள் இறப்பு மற்றும் காயமடைவதைக் குறைப்பதற்கான யுத்த முறைகளையும் வழிகளையும் தேர்ந்தெடுப்பது மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இடமளிப்பின் பயனுறு முன்னெச்சரிக்கை ஆகியவற்றை உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்படுவதை அல்லது காயமடைவதைக் குறைப்பதற்கான முடியுமான சகல தற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரப்பினர் மேற்கொள்வதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத் துகிறது (விதி 1520, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

(71)

205.
பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற் படுத்தக் கூடிய விதத்தில் இராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட தாக்குதல்கள் பற்றிப் பொதுமக்களுக்கு எந்தவித அல்லது போதிய முன்னெச்சரிக்கையை இராணுவத்தினர் வழங்கவில்லை என்பதாக இவ்வேற்பாடு மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடு கின்றன. வன்னியில் இடைக்கிடையே விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் குறிப்பான தாக்குதல்கள் பற்றிப் போதிய முன்னேற்பாடக அமையவில்லை.

மேலும், பொதுமக்களைச் செல்லுமாறு அரசாங்கம் பணித்த யுத்த சூன்ய வலயங்களை, இவ்விதியைக் கவனிக்காது இலங்கை இராணுவம் பின்னர் செல் வீசித் தாக்கியது காரியம் சாதிப்பதற்காக மேற் கொள்ளப்பட்ட சாதுர்யமான செயலாகவே இருக்கிறது.

2. ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான இலக்குகள் மீதான செல் வீச்சு (அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 206. அவை தெளிவாக அடையாளமிடப்பட்டு அவற்றின் அமைவிடங்கள் அரசாங்கத்திற்குத் தெந்திருந்த போதி லும், மேலே குறிப்பிட்ட ஆஸ்பத்திகள் மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய நம்பகமான குற்றச் சாட்டுக்கள், உறுப்புரை 3 இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ள "நோயாளர் மற்றும் காயற்றோருக்குப் பராமரிப்பு வழங்குதல்' என்ற கடப்பாட்டின் மீறலாக அமைகிறது.

அறிந்திருந்தும் மக்கள் அதிகமாக உள்ள ஆஸ்பத்திரி அமைவிடங்கள் மற்றும் மனிதாபிமான தலங்களை நேரடியாகவோ அல்லது கண்மூடித்தனமாகவோ குறி வைப்பது அத்தாக்குதல் மரணத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை தாக்குதல் நடத்தியவர்கள் அறிந்துள்ளார்கள் என்பதைக் குறிப்பதாகவுள்ளதோடு அவை பொது உறுப்புரை 3 இனை மீறிய கொலை என்பதாகவும் உள்ளது.

(ஆ)மருத்துவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தலங்களுக்கான விசேட பாதுகாப்புக்கான தேவை

207.
தரப்பினர் சகல மருத்துவ ஆளணியினர், மருத்துவ அலகுகள், மருத்துவப் போக்குவரத்துக்கள், மனிதாபிமான உதவியாட்கள் அத்துடன் மனிதாபிமான உதவித் தலங்கள் ஆகியவற்றை மதித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது.

(விதிகள் 25, 28, 31 மற்றும் 32, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). குறிப்பான ஜெனீவா உடன்படிக்கைகளின் சின்னங்கள், இலங்கையைப் பொறுத்த வரை, செஞ்சிலுவை அல்லது ஐ.சி.ஆர்.சி. கொடியினை தெளிவாகக் காட்டும் வைத்திய ஆளணியினர் மற்றும் தலங்களை தரப்பினரைத் தாக்கலாகாது (விதி 30, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

நேர காலத்தோடு இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட தெளிவான சின்னங்கள் அல்லது அறிவிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட பல்வேறு ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான செல் தாக்குதல் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இவ்விதியின் மீறலைக் குறிக்கின்றன.

அதே போன்று, ஐக்கிய நாடுகள் கொடி தெளிவாகப் பறக்கவிடப்பட்டிருந்த முதலாவது யுத்த சூன்ய வலயம் போன்ற ஐக்கிய நாடுகள் வளாகம் மீதான தாக்குதல்களும் இதே தீர்மானத்தையே குறிக்கின்றன.

(72)
(இ)பொதுமக்கள் மீது அல்லது பொதுமக்கள் தலங்கள் மீதான தாக்குதலுக்கான தடை

208.
ஆஸ்பத்திரிகள் மற்றும் மனிதாபிமானத் தலங்கள் மீதான தாக்குதல்களும் பொதுமக்கள் தலங்கள் மீதான சட்ட விரோதத் தாக்குதலைக் குறிக்கின்றன.

சில ஆஸ்பத்திரிகளில் (புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால்) காயமடைந்த எல்...ஈ.
உறுப்பினர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேறொரு பிவு இருந்தது என்பது இத்தளங்களின் பொதுமக்கள் சுபாவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆயினும், இவ் வாஸ்பத்திரிகள் பலமுறை தாக்கப்பட்டன அவை வேண்டுமென்றே குறிபார்க்கப்பட்டன என்ற ஊகத்தை ஏற்படுத்துகிறது.

3.மனிதாபிமான உதவியை மறுத்தல்.

(அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3

209.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் "நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக் கும் பராமரிப்பை வழங்குதல்' என்ற கடமை தொடர்பாக, ஐ.நா. ஒழுங்கு செய்த வாகனத் தொடர்கள் அல்லது ஐ.சி.ஆர்.சி.

கப்பல்கள் மூலமான அடிப்படை மருந்துப் பொருட்கள், குறிப்பாக அறுவைச் சிகிச்சைக்கான பொருட்கள், யுத்த வலயத்தைச் சென்றடைவதை அரசாங்கம் அதிகமாகக் கட்டுப்படுத்தியது. உயிர் காப்பதற்கான சத்திர சிகிச்சைக்குத் தேவையான மருந் துப் பொருட்களை பிரதேச மாவட்ட வைத் திய அத்தியட்சகர் பலமுறை வேண்டிய போதும் அது அதனைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அது கப்பல் மூலமாக அனுப்பும் மருந்துப் பொருட்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தும் காய டைந்தவர்கள் எடுத்துச் செல்வதற்காக வந்த கப்பல்களுக்கு அருகில் துப்பாக்கியால் சுட்டும் செல் வெடிகளைச் செலுத்தியும் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவுவதில், பாரபட்சமான முறையில் மனிதாபிமான உதவியை அது வழங்குகிறது என சர்வதேச விதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதலும், ஐ.சி.ஆர்.சி.க்குக் கடுமையான தடைகள் ஏற்படுத்தப்பட் டன.

(ஆ) மருத்துவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் தளங்களுக்குமான விசேட பாதுகாப்புக்கான தேவைப்படுத்தல்கள் 210. மேலே 2இல் கலந்துரையாடப் பட்ட ஆஸ்பத்திரிகள் மீதான செல் தாக்குதலுக்குப் புறம்பாக, இலங்கை இராணு வத்தினால் பல மனிதாபிமான தளங்கள், குறிப்பாக வாகனத்தொடர் 11, புதுமாத்தளனுக்கு அருகில் ஐக்கிய நாடுகள் வளாகம், முதலாவது யுத்த சூன்ய வலயத்தில் மற்றும் அம்பலவன் பொக்கணையில் உணவு விநியோக பாதை மற்றும் ஐ.சி.ஆர்.சி. கப்பல்களுக்கு அருகே செல் தாக்குதலை மேற்கொள்ளல் இந்த விதியின் மீறலைக் குறிக்கின்றன.

பாலியல் சார்ந்த வன்றைக்கு சாதகமான முகாம்களின் சூழலை மாற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 12

(73)

(இ) பொதுமக்களின் பட்டினிச் சாவு மற்றும் மனிதாபிமான நிவாரண நிராகரிப்பு மீதான தடை 211. பட்டினிச் சாவை யுத்த முறையாகப் பாவிப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

"பாரபட்சமற்ற முறையிலும் மற்றும் எதுவித பாதகமான வித்தியாசமின்றி, கட்டுப்படுத்தும் அவர்களின் உரிமைக்கு ஏற்ப தேவையை எதிர்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கான மனிதாபிமான நிவாரணம் சென்றடைவதை அனுமதித்து மற்றும் தீவிரமாகவும் தடையின்றியும் செல்வதற்கான வசதியை வழங்குவதை' தரப்பினர் மீது சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது. (விதிகள் 53 மற்றும் 55, ஐ.சி.ஆர்.சி ஆய்வு)

212.
(டி) குறைந்த அளவிலான உணவு நிவாரணத்தை நியாயப்படுத்துவதற்காக வேண்டுமென்றே மற்றும் பகிரங்கமாக பொதுமக்கள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டு, (டிடி) மனிதாபிமான வாகனத்தொடர்கள் மற்றும் கப்பல்கள் யுத்த வலயத்தைச் சென்றடைவதற்கு இடையூறு விளைவித்து, மற்றும் (டிடிடி) தெந்து கொண்டே மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோருக்கு அருகில் செல் தாக்குதலை நடாத்தி இந்த ஏற்பாட்டை அரசாங்கம் மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

அதன் விளைவாக குறிப்பாக இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் கிட்டாமற் செய்யப்பட்டது. குறிப்பாக அதன் உதவி அரசாங்க அதிபரிடம் இருந்து அதற்குக் கிடைத்த அறிக்கைகள் அரசாங்கம் இந்த விளைவுகளை அறிந்திருந்தது எனக் குற்றம் சாட்டலாம்.

4. பாதிக்கப்பட்டோர் மற்றும் யுத்தத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் அனுபவித்த மனித உரிமைகள் மீறல்கள்

213.
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இவ்வகையான அரசாங்க நடவடிக்கைகள் நடைபெற்றதால், அவற்றை சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உமைகள் சட்டம் ஆகிய இரண்டின் கீழும் குழு ஆராய்கிறது.

(அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் 3ஆவது பொதுவான உறுப்புரை

214.
"சுய மரியாதை, குறிப்பாக அவமானப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துவதைக் கொண்ட அட்டூழியங்கள்' தடை தொடர்பாக, கொலை செய்யப்படுமுன் அல்லது தடுத்து வைக்கப்படுமுன், இராணுவத் தடுப்புக் காவலில் இருக்கும் போது பெண்கள் மற்றும் சிறுமிகள், குறிப்பாக எல்...ஈ. சந்தேக நபர்கள், மீது இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட கற்பழிப்பு அல்லது பாலியல் குற்றங்கள் மூலம் இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளதற்கான நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வேண்டுமென்றே நிர்வாணமாக்கப்பட்ட பெண்களின் உடம்புகளைக் கொண்ட குறிப்பாக சனல் 4 வீடியோ மற்றும் புகைப்படங்களை உள்ளிட்ட இறந்த ஒரு பெண் உறுப்பினர் எனக் காணப்படும் ஒருவன் புகைப்படம் அதனோடு வரும் இலங்கை இராணுவ வீரர்களின் மோசமான குறிப்புக்களும் கொலை செய்ய ப்படுவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ கற்பழிப்பு அல்லது பாலியல் வன்றை நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கான உறுதியான ஊகத்தை வழங்குகிறது.

புதுப்பித்தெடுக்கும் செயற்பாட்டின் போது இடம் பெயர்ந்த பெண்கள் மிக இழிவாக நடாத்தப்படுவதையும் நம்பகமான குற்றச்சாட்டுகள் எடுத்தியம்புகின்றன.

(74)

(ஆ) வலுக்கட்டாயமாக காணாமப்போதல்கள் மீதான தடை

215.
வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல்களை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

(விதி 98, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). இலங்கை இராணுவ மற்றும் துணைப் படைப் பிவுகள் பல்வேறு அமைவிடங்களில் இருந்து, பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் போது மற்றும் சரணடையும் இடங்களில், நபர்களை எடுத்துச் சென்று அதன் பின்னர் அவர்கள் காணப்படவில்லை மற்றும் அவர்கள் பற்றிய தகவல் இல்லை என்பதற்கேற்ப நம்பகமான குற்றச்சாட்டுக்களின் படி இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளது.

கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் அமர்வுகளின் போதும் இந்த விடயம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

(இ) தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு குறைந்த பட்சத்திலான பராமரிப்புக்கான தேவைப்படுத்தல்கள்

216.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதியளவு உணவு, நீர், உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியினை தரப்பினர் வழங்க வேண்டும் என்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தேவைப்படுத்துகிறது (விதி 118, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தவர் களை குறைந்த பட்ச நிலைமைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தடுத்து வைத்ததைக் கொண்டு ஆயுதந்தாங்கிய மோதலின் போது இந்த ஏற்பாடுகள் மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

(ஈ) இறந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான தேவைப்படுத்தல்கள்

217.
இறந்தவர்களைத் தேடி, அவர்களுக்குத் தக்க மரியாதையை வழங்கி, புதைகுழிகளின் அமைவிடங்கள் பற்றிப் பதிந்து, காணாமற் போனவர்களுக்கு நேர்ந்த கதி பற்றிக் குடும்பத்தினர்களுக்கு அறிவிப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தரப்பினரைத் தேவைப்படுத்துகிறது (விதிகள் 112, 113, 115, 116 மற்றும் 117, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு)

218.
இறந்த பொதுமக்கள் அல்லது போராளிகள் பற்றித் தேடுவதற்காக அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்வில்லை என்பதால் இந்த ஏற்பாடுகளை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இவர்களுள் அநேகர் வன்னியில் அடையாளமிடப்படாத புதை குழிகளில் புதைக்கப்பட்டார்கள்.

கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டது போன்று சரணடைபவர்களை மீட்பிக்கும் செயற்பாட்டின் போது சிலர் காணாமற் போயிருக்கலாம், கணிசமான எண்ணிக்கையிலான முன்னாள் போராளிகளையும் பொதுமக்களையும் புறத் தொடர்பற்ற முகாம்களில், அவர்களுக்கு நேர்ந்தது பற்றிக் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல் அல்லது குடும்பங்களை ஒன்று சேர்ப்பதற்கு தேடுதல் திட்டம் ஒன்றை ஏற்படுத்தாமல் அது அடைத்து வைத்தது.

"இறந்தவர்கள் மரியாதையுடன் புதைக்கப்பட்டு புதை குழிகளுக்கு மரியாதை வழங்கி அவை பேணப்பட வேண்டும்' என்ற சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் விதியை குழு நினைவூட்டுகிறது.
(விதி 115, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு).

நிர்வாணமான பெண்களின் சடலங்கள் உள்ளிட்ட சடலங்களை மிகவும் மரியாதைக் குறைவாக இலங்கை இராணுவத்தினர் போன்று தென்படுவோர் நடாத்துவதைக் காட்டும் வீடியோ சுருள்களையும் புகைப்படங்களையும் குழு கண்டது.

(75)

(உ) உயிர் வாழ்வதற்கான, பௌதிகப் பாதுகாப்பு மற்றும் ஆட்களின் உரிமை

219.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் உயிர் வாழ்வதற்கான உரிமையை சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் இருந்து பாதுகாத்து மனிதர்களின் பௌதிக பாதுகாப்புக்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 6 மற்றும் 9). சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, இரக்கமற்ற அல்லது இழிவாக்கும் விதத்தில் நடாத்துதல் அல்லது தண்டனை வழங்குதல் ஆகியவற்றுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் இவற்றோடு நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. (சி.சி.பி.ஆர்.

உறுப்புரை 7 மற்றும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை).

பாலியல் மற்றும் ஆண்பெண் வித்தியாசத்தின் அடிப்படையிலான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பையும் இவ்வுரிமைகள் உள்ளடக்குகின்றன.

(76)

220.
வரவேற்றுத் தடுத்து வைக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களில், போதியளவு உணவு, நீர் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதற்கு அது தவறிய காரணத்தினால், மெனிக் பாமில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கத்துக்குள் தடுக்க முடிந்த மரணங்கள் காரணமாக இந்த ஏற்பாடு மீறப்பட்டுள்ளதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

துணைப்படைகள் முகாம்களுக்கு நுழைய வழிவிட்டு தொடர்ந்தும் மக்களை எடுத்துச் செல்ல அதிகாரத்தை வழங்குவதன் மூலம் இடம்பெயர்ந்தோன் பௌதிகப் பாதுகாப்பை அரசாங்கம் உத்தரவாதம் செய்யவில்லை.

சிஐடி மற்றும் ஐடியினால் விசாரணை செய்யப்படும் போது கொடூரமான, இரக்கமற்ற மற்றும் இழிவு படுத்தும் விதத்தில் நடாத்தப்படுதல், கற்பழிப்பு அல்லது சித்திரவதை நேர்ந்திருக்கலாம்.

(ஊ) விசாரணை இன்றித் தடுத்து வைத்தலைத் தடை செய்தல்

221. விசாரணை இன்றி தடுத்து வைத்தல் மற்றும் சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சுதந்திரத்தைச் சகலருக்கும் சர்வதேச மனித உமைகள் சட்டம் உறுதிப்படுத்துகிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரை 9 இனைப் பார்க்கவும்).

எவரும் கைது செய்யப்பட்டால் அவன் கைதுக்கான காரணங்கள் மற்றும் ஏதும் குற்றங்கள் பற்றி அவருக்கு அறிவிக்கப்படல் வேண்டும். சட்டத்தை மீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட எவரும் உடனடியான சட்ட அதிகாரி ஒருவர் முன்னிலைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு நியாயமானதொரு காலப்பகுதிக்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட அல்லது விடுதலை செய்யப்பட உரித்துடையாவார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவரை பொதுவாக தடுப்புக் காவலில் வைக்கப்படலாகாது.

222.
பாரிய எண்ணிக்கையில் நீண்ட காலங்களுக்கு மற்றும் வழக்கறிஞர் அல்லது நீதி மன்றங்களுக்கான பிரவேசம் இன்றி விசாரணை இல்லாமல் திட்டமிட்டுத் தடுத்து வைப்பது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.



மெனிக் பாம் போன்ற புறத் தொடர்பற்ற முகாம்களில் பாரிய எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்தோரை அடைத்து வைப்பது குறிப்பாக இதனுள் அடங்கும். ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை, 290,000 வரையிலானவர்கள் அடைக்கப்பட்டு கட்டுப்பாடுகளை அனுபவிக்க நேட்டது.

இடம் பெயர்ந்தோர் அனைவரும் விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டனர்.

மேலும், முன்னாள் எல்...ஈ. இனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 12,000 பேர்கள் நடைமுறைப் பாதுகாப்பு மற்றும் ஐ.சி.ஆர்.சி. இனால் சந்திக்க முடியாதவாறு வேறான இடங்களில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

இவ்விடங்களில் தடுத்து வைக்கப்பட்ட பெரும்பாலோர் மீது எந்தவொரு குற்றம் சுமத்தப்படவில்லை என்பதோடு, குற்றம் சாட்டப்பட்டோரை வழக்கு நடைபெறும் வரை தடுத்து வைப்பது பொதுவானதொரு விதியாகவே இருந்தது.

(எ) உணவு மற்றும் நீர், உடை மற்றும் தங்குமிடம் அத்துடன் சுகாதாரம் ஆகியவற்றைப் பெறுவதற்கான உரிமைகள்

 223.
சகலருக்கும் போதியளவு உணவு, உடை மற்றும் இருப்பிட வசதி ஆகியவற்றுக்கு சர்வதேச மனித உமைகள் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது (பொருளாதார, சக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர்.

உறுப்புரை 11). "சுய விருப்பின் அடிப்படையில் அவசியமான சர்வதேச ஒத்துழைப்புக்கான இதன் விளைவுகளை இனங்கண்டு, இவ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கு தோதான நடவடிக்கைகளை எடுப்பதற்கு' அரசாங்கங்கள் தம்மை அர்ப்பணித்துள்ளன. மேலும், (77)

அடைய முடிந்த ஆகக் கூடிய பௌதிக மற்றும் மனம் சார்ந்த சுகாதாரத்தை அனுபவிப்பதற்கான உரிமை சகலருக்கும் உண்டு (ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர். உறுப்புரை 12). சுத்த நிலைமைகள், நோய் தடுப்பு மற்றும் பரிகாரம் அத்துடன் போதிய மருத்துவக் கவனிப்பு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக அரசாங்கங்கள் தோதான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

224.
தான் பகிரங்கமாக அறிவித்ததை விட மிக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உண்மையிலேயே யுத்த வலயத்தில் இருந்து வெளியேறுவார்கள் மற்றும் அவர்களுக்குப் போதிய பராமரிப்பை வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறிந்திருந்தது அல்லது அறிந்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்காக முற்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்ய அல்லது தேவை தெளிவாகியதும் நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தவறியது என்பதால் இந்த ஏற்பாடு மீறப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களைப் புறத் தொடர்புகள் இன்றி வைத்து இடம் பெயர்ந்தவர்களை விடுவிக்காததோடு, இடம் பெயர்ந்தோர் தம் உறவுகளுடன் இருப்பதற்கும் அது அவர்களை அனுமதிக்கவில்லை.

யுத்தத்தின் பின் மெனிக்பாமில் தடுக்கக் கூடிய மரணங்கள் நேர்ந்ததோடு நோய் மற்றும் மனிதர்களுக்கு ஒவ்வாத நிலை இருந்ததைக் கொண்டான மீறல்கள் பற்றிக் குற்றச் சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(ஏ) ஒன்று கூடுவதற்கும் ஒன்று சேர்ந்து பழகுவதற்குமான சுதந்திரங்கள்

225.
ஒன்று கூடுவதற்கும் சேர்ந்து பழகுவதற்குமான சுதந்திரத்தையும் சர்வதேச மனித உமைகள் சட்டம் உறுதிப்படுத்துகிறது (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 21 மற்றும் 22).

சட்டத்தினால் விதிக்கப்பட்டால் மற்றும் தேசிய பாதுகாப்பு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது நல்லொழுக்கத்தைப் பாதுகாத்தல் அல்லது ஏனையோன் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் தேவைகள் ஆகியவற்றுக்காக இவ்வுரிமைகள் கட்டுப்படுத்தப்படலாம்.

எந்தவொரு கட்டுப்பாடும் அளவின் பொருத்தத்தை திருப்திப் படுத்த வேண்டும்.

226.
பிரித்தெடுக்கும் இடங்களில் அல்லது மெனிக்பாமில் இடம்பெயர்ந்தோர் சர்வதேச அமைப்புக்களுடன் அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதை உள்ளிட்ட கூட்டங்கள் மற்றும் ஒன்று சேர்ந்து பழகுவதைத் தடுப்பதற்காக தொடர்ச்சியாக அவசரகால அதிகாரங்கள் மற்றும் இராணுவத்தின் தேவை முன்வைக்கப்பட்டதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக்கான எந்தவொரு நியாயமான மதிப்பீட்டையும் விட அளவில் இக்கட்டுப்பாடுகள் அதிகமாகவுள்ளதோடு, யுத்தத்தில் உயிர் தப்பியவர்களுடன் புறத் தொடர்புகளைத் தடுப்பதற்காகவும் அவை ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாகத் தென்படுகிறது.

(78)

(ஐ) பெண்களின் உரிமைகள்
227.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், எந்தவொரு பாகுபாடுமின்றி சகல சிவில், அரசியல், பொருளாதார, சக மற்றும் கலாசார உரிமைகளை அனுபவிக்கும் சம உரிமைகளை பெண்களுக்கு உறுதிப்படுத்துவது அரசாங்கங்களின் கடப்பாடாகும். (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 2(1), உறுப்புரை 3 பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை). பெண்களுக்கு எதிரான சகல விதமான பாரபட்சங்களையும் அகற்றுவதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் கடமையை இக்கடப்பாடு உள்ளடக்குகிறது. மீறல்களைத் தடுப்பதற்கு, புலனாய்வு செய்வதற்கு மற்றும் மீறல்களைத் தண்டிப்பதற்கு அத்துடன் நஷ்டஈடு வழங்குவதற்கு, அவை பொது அல்லது தனிப் பாத்திரம் மேற்கொண்டிருந்த போதிலும், அரசாங்கத்துக்கு ஒரு கடப்பாடு உண்டு.

228.
புலனாய்வு செய்யப்படாத, மெனிக்பாமில் நடந்தேறிய பாரதூரமான கற்பழிப்புச் சம்பவங்கள் உள்ளிட்ட முகாம்களில் மற்றும் மீள்குடியமர்த்தல் செயற்பாட்டின் போது, பெண்கள் பாலியல் தொடர்பான வன்றைக்கு ஆளாக்கப் பட்டனர் என்பதால் இவ்வுரிமைகள் மீறப்பட்டதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பாலியல் சார்ந்த வன்முறைக்குச் சாதகமான முகாம்களின் சூழலை மாற்றுவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது.

விதவைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், இளம் தாய்மார்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் மனைவிமார் மற்றும் தாய்மார்கள் ஆகியவர்களை உள்ளிட்ட இலகுவில் தாக்கமுறக் கூடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் மற்றும் பாலியல் வேற்றுமை காரணமாக வன்முறைக்கு ஆளானவர்கள், சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. மற்றும் முன்னாள் பெண் போராளிகள் ஆகியோரின் தேவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக எந்தவொரு விசேட ஏற்பாடுகளும் இருக்கவில்லை.

(ஒ) குடும்பங்களுக்கான விசேட பாதுகாப்பு 229. சர்வதேச மனித உமைகள் சட்டம் குடும்ப அலகுக்கு விசேட கத்துவத்தை வழங்குகிறது என்பதோடு.

அதனைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான கடப்பாடு அரசுக்கு உண்டு (ஐ.சி.சி.பி.ஆர், உறுப்புரைகள் 17 மற்றும் 23, ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர், உறுப்புரை 10) யுத்த வலயத்தில் இருந்து தப்பியபோது, மீட்பிக்கும் செயற்பாட்டின் போது மற்றும் ஆஸ்பத்திரிகள் மற்றும் முகாம்களுக்கு மாற்றும் போது, குடும்ப அலகைப் பேணுவதற்கு, பிந்த குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலை வழங்குவதற்குக் கிஞ்சித்தேனும் கவனம் செலுத்தாது அரச பராமரிப்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் மீட்பிக்கப்பட்டனர் என்பதால் இக்கடமைகள் மீறப்பட்டமைக்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. போதியதொரு மாற்றுவழியை ஏற்படுத்தாமல் குடும்பங்களைக் கண்டு பிடிப்பதில் மிகத் திறமையுடன் கூடிய ஐ.சி.ஆர்.சி. இனை அரசாங்கம் காரணமின்றி புறம் தள்ளியது.

(79)

(ஓ) குழந்தைகளுக்கான விசேட பாதுகாப்பு

230.
அவர்கள் இலகுவில் தாக்கமுறக் கூடியவர்கள் என்பதைக் கவனத்திற் கொண்டு, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தேவைப்படுத்துகிறது.

(ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 4.

ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர். உறுப்புரை

10, குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை).

பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத நிலையில் தனியாக உள்ள குழந்தைகள் விடயத்தில் இக்கடப்பாடு தீவிரத் தன்மையைக் கொள்கிறது, மீட்பிக்கும் இடங்களில் அல்லது ஆரம்பக் கட்டத்தில் மெனிக்பாமில் அத்தகைய விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது மீறல் என்பதை குறிக்கும் நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும் புனர்வாழ்வு என்ற சாட்டில் சரணடையும் சிறுவர்கள் வழக்கின்றி அரசாங்கத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் புனரமைப்பு மத்திகளுக்கிடையே மாற்றப்பட்டதோடு, அதனால் அவர்கள் இருக்கும் இடங்களைக் கண்டு பிடிப்பது மற்றும் குடும்பத்தினர் அவர்களைச் சந்திப்பது சிரமமாகவிருந்தது.

பொதுமக்கள் மீது பரவலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 13

(80)
(ஒள) நீதி மன்றங்களுக்கான பிரவேசத்தை உள்ளிட்ட பயனுறு உபகாரத்துக்கான உரிமை

231.
சர்வதேச சட்டத்தின் கீழ், வாதிடக்கூடிய மீறலைக் கொண்ட மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கான பயனுறு உபகாரத்தை வழங்க அரசாங்கம் தேவைப்படுத்தப்படுகிறது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை. 2).

 உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதீகப் பாதுகாப்பு மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்து பொறுப்பானவர்களுக்கெதிராக வழக்குத் தொடர்வதை இப்பரிகாரம் உள்ளடக்குகிறது. தடுத்து வைத்தலின் சட்டபூர்வமான தன்மையைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக மற்றும் மீறல்கள் தொடர்பில் பரிகாரம் வழங்குவதற்காக நியாயமானதும் பாரபட்சமற்றதுமான நீதிமன்றங்களுக்கான பிரவேசம் பாதுகாப்புச் சட்டகத்தின் அடித்தளமாக அமைகிறது (ஐ.சி.சி.பி.ஆர்., உறுப்புரைகள் 2, 9, 14 மற்றும் 26).

இக்கடப்பாடு அத்தியாயத்தில் மேலும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளது.

232. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களில் ஒரு சில மாத்திரமே புலனாய்வு செய்யப்பட்டு அத்தோடு அப்படி மேற்கொள்ளப்பட்டவையும் சர்வதேச பயனுறு தன்மை மற்றும் சுயாதீனம் பற்றிய கட்டளைகளை நிறைவு செய்யாது என்பதால் இவ்வேற்பாடுகளும் மீறப்பட்டுள்ளதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் நீதி மன்றங்களுக்குச் செல்வது மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு அல்லது சட்டத்தினால் நிறுத்தப்பட்டு மற்றும் பழக்கத்தினால் சுருக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் தமது உத்தியோக அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரச ஊழியர்கள் தொடர்பில் எவரும் நீதி மன்றம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.

இவ்வதிகாரங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தடுத்து வைப்பதற்கான பிரத்தியேகமான நியாயப்படுத்தலை மீளாய்வு செய்வதற்கு நீதி மன்றங்களுக்கு மிகக் குறைந்த அதிகாரமே உள்ளது.

5. யுத்த வலயத்திற்கு வெளியே மனித உமைகள் மீறல்கள்
(அ) காணாமற்போதல் மீதான தடை

233.
 அரச தரப்பொன்றினுள் காணாமல் போதல்களை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தடை செய்கிறது. காணாமல் போதல் ஒருவன் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எதிரான ஒரு மீறல் ஆக உள்ளது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 9)

234.
அரசாங்க முகவர்கள் அரசாங்கத்தின் சார்பில் நடாத்திய காணாமல் போதல்கள் யுத்தத்தின் கடைசிக் கட்டங்களுக்கு முன்பும், அப்போதும் மற்றும் அதற்குப் பின்னரும் இலங்கையில் பரவலாகக் காணப்பட்டதொரு நடவடிக்கை என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. அநேக சந்தர்ப்பங்களில் இப்படித் தாக்கமடைந்தோர் சந்தேகிக்கப்பட்ட எல்...ஈ. உறுப்பினர்கள், சக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் அல்லது மனித உரிமைகள் காப்பாளர்களாவர். சிலர் மீட்பித்தெடுக்கும் செயற்பாட்டின் காணாமற் போனார்கள். இத்தகையவர்கள் கடத்தப்படடு வெள்ளை வான்களில் எடுத்துச் செல்லப்பட்டபின் அவர்களைக் காணவேயில்லை என்ற பொதுவானதொரு வழக்கத்தை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் விபரிக்கின்றன.

(81)

(ஆ) கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம்

235.
தகவலை வெளியிடுவதற்கும் அதனைப் பெறுவதற்கும் மற்றும் கருத்தொன்றைக் கொண்டிருக்கவும் கருத்துக்களை வெளியிடுவதற்குமான சுதந்திரத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டம் பாதுகாக்கிறது (ஐ.சி.சி.பி.ஆர். உறுப்புரை 19).

சட்டத்துக்கிணங்க மற்றும் ஏனையோன் உரிமை அல்லது நற்பெயரை அல்லது தேசியப் பாதுகாப்பை அல்லது பொது அமைதியை, பொதுமக்கள் சுகாதாரத்தை அல்லது நல்லொழுக்கத்தைப் பாதுகாக்க மாத்திரம் இவ்வுரிமைகள் மட்டுப்படுத்தப்படலாம். சம விகித அளவின் பரிசீலனையை எந்த மட்டுப்படுத்தலும் திருப்திப்படுத்த வேண்டும்.

236.
சுயாதீன ஊடகவியலாளர்கள் யுத்தப் பிரதேசத்துக்குச் செல்வதை முழுமையாகத் தடை செய்வது ஏதும் பொதுமக்கள் பாதுகாப்பு நோக்கங்களை விஞ்சியதாக இருப்பதால் இவ்வேற்பாட்டினை மீறியதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

2008இல் விதிக்கப்பட்ட ஊடக வழிகாட்டல்கள் யுத்தம் பற்றி அறிக்கை விடுப்பதைக் கடுமையாக மட்டுப்படுத்தியதோடு, ஊடக சுதந்திரத்தையும் பாதித்தது.

அரசாங்கத்தின் கருத்துக்கு மாறான கருத்துக்களை வெளியிட முனைந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பலவிதமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு சிலர் கொல்லப்பட்டோ, காணாமற்போய் அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டது தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

(உ) தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள்

1. பொதுமக்களைத் தாக்குதலைத் தடுக்கும் பொறியாகப் பாவித்தல்

237.
 ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: ஆயிரக்கணக்கான பொதுமக்களை, அநேகமாகக் கொலை அச்சுறுத்தலை விடுத்து, யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தொடர்ந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தி அப்பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முனைந்தவர்களைச் சுட்டுக் கொலை செய்து இக்கட்டுப்பாட்டை அமல் செய்வதன் மூலம் பணயக் கைதிகளைப் பிடிப்பதைத் தடை செய்யும் பொது உறுப்புரை 3 இனை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எல்...ஈ. பொதுமக்களை யுத்த வலயத்தில் இருந்து செல்ல அனுமதிக்காதது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, அத்தகைய யுத்தக் குற்றம் பற்றிய சம்பிரதாய விளக்கம் தேவைப்படுத்துவதற்கேற்ப இராணுவ இலக்குகளைத் தாக்குவதை விட்டும் பாதுகாப்பதற்காக எல்...ஈ.
பொதுமக்களை அங்கு செலுத்தியதற்கான நம்பகமான சாட்சிகள் கிடைக்காததால், அந்நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரம் பொதுமக்களை தாக்குதலைத் தடுப்பதற்கான பொறியாகப் பாவித்ததாகாது என குழு நம்புகிறது. (விதி 97, ஐசிஆர்சி ஆய்வு)

2. எல்...ஈ. கட்டுப்பாட்டிலிருந்து தப்ப முயன்ற பொதுமக்களை கொலை செய்தல்

238.
ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: குறிப்பாக இராண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்களில், எல்...ஈ. இன் பக்கத்தில் யுத்த முனைகளில் வலுக்கட்டாயமாக பொதுமக்கள் சனத்தொகையைப் பேணும் முயற்சியாக, யுத்த வலயத்தில் இருந்து தப்புவதற்கு முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளிட்ட பொதுமக்களை எல்...ஈ. வேண்டுமேன்றே சுட்டுக் கொலை செய்து பொது உறுப்புரை 3 (கொலை) இனை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(82)
3. பொதுமக்களுக்கு அருகில் இருந்து இராணுவத் தளபாடங்களைப் பாவித்தல்

239.
சனநெருக்கடியுள்ள பகுதிகளுக்கு அருகில் இராணுவ இலக்குகளை அமைத்தல்: சாத்தியமாயின் சன நெருக்கடியுள்ள பொதுமக்கள் பிரதேசங்களில் இராணுவ இலக்குகளை அமைத்தலை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது. (விதி 2324 ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). மோட்டார் செலுத்திகள், ஏனைய கனமற்ற பீரங்கிகள், இராணுவ வாகனங்கள், மோட்டார் குழிகள், பதுங்கு குழிகள் மற்றும் அகழிகள் ஆகியவற்றை எல்...ஈ. வேண்டுமென்றே பொதுமக்கள் பிரதேசங்களுக்கு அருகில் அமைக்கும் அல்லது பிரயோகிக்கும் போக்கினால் இந்த ஏற்பாட்டினை மீறுவதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆஸ்பத்திரிகள் மற்றும் யுத்த சூன்ய வலயத்தை உள்ளிட்ட இடம்பெயர்ந்தோர் கூடியிருக்கும் இடங்களை இவ்வமைவிடங்கள் உள்ளடக்கின. பிரித்தறிவது மற்றும் சரிசம விகிதம் தொடர்பான விதிகளை மதிப்பதை உறுதிப்படுத்துவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இயைவாக இலங்கை இராணுவம் நடப்பதிலிருந்து அவர்கள் பொறுப்பை இச்சட்ட விரோத நடவடிக்கைகள் நீக்காது.

4. வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஆட்சேர்த்தல்

240.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பது மீதான தடை: குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

வயது எல்லை பற்றிய சர்ச்சை இருந்த போதிலும், குறைந்த பட்சம் அது 15 என அரசாங்கங்கள் இணங்கியுள்ளன (விதி 136, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 14 வயது சிறுவர்கள் மற்றும் சிறுமியரைக் கூட எல்...ஈ. வலுக்கட்டாயமாக அணிதிரட்டியதன் மூலம் இவ்வேற்பாட்டை மீறியதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன.

இறுதி யுத்தங்களின் போது மரணிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் போது, இப்படியான வலுக்கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் இளவயதினரை தம் குடும்பங்களில் இருந்து பிரிப்பதும் கொடூரமாக நடாத்துவதான பொது உறுப்புரை 3 இனை மீறுவதாகும்.

5. வலுக்கட்டாய உழைப்பு

241. வலுக்கட்டாய உழைப்பு மீதான தடை: சரி ஈடு செய்யப்படாத அல்லது துஷ்பிரயோகமான வலுக்கட்டாய உழைப்பை சர்வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது (விதி 95, ஐ.சி.ஆர்.சி. ஆய்வு). சில சமயம் ஆபத்தான சூழ்நிலைகளில் மற்றும் அநேகமாக தம் குடும்பங்களில் இருந்து பிரிக்கப்பட்டு அரண்களை அமைப்பதற்காகவும் யுத்த முயற்சிக்கு வேறு பங்களிப்புக்களை வழங்குவதற்காகவும் பல பொது மக்களை எல்...ஈ. வலுக்கட்டாயமாக தேவைப்படுத்தி மீறல் பற்றி நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

யுத்தத்தின் கடைசி கட்டங்கள் போன்ற உயிருக்கு ஆபத்து அல்லது உடம்புக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ள நிலைமைகளில் இவ்வழக்கம் கொடூரமாக நடாத்துவதானது பொது உறுப்புரை 3 இனை மீறுவதாகும்.

(83)

6. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொலை செய்தல்

242.
ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3: பொதுமக்களுக்கு எதிராக யுத்த வலயத்துக்குள்ளும் வெளியேயும் பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எல்...ஈ. மேற்கொண்டுள்ளதான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் பொது உறுப்புரை 3 (கொலை) இனை மீறியதைக் குறிக்கிறது.

2009 பெப்ரவ 09ஆம் திகதி முல்லைத்தீவில் பிரிக்கும் மத்தியொன்றில் அல்லது 2009 மார்ச் 10ஆம் திகதி அமைச்சர் மஹிந்த விஜேசேகர மீதான தாக்குதல் போன்ற பொதுமக்கள் பலரைக் கொன்ற தாக்குதல்கள் உள்ளிட்ட பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் யுத்த வலயத்திற்கு வெளியே எல்...ஈ. மேற்கொண்டது.

மேலே ஆராயப்பட்ட பொதுமக்கள் மீதான வேண்டுமென்றோ அல்லது கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இத்தடையின் தெளிவான மீறல் எனக் குழு கருதுகிறது. தற்கொலைத் தாக்குதல்கள் எல்...ஈ. அதன் காலம் பூராவும் மேற்கொண்டதொரு பொதுவான நடவடிக்கையாகும் என்பதோடு தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய அச்சம் அரசாங்கத்தின் மீறல்களுக்கான பங்களிப்பை அப்படிச் செய்யவில்லை மற்றும் அதனை நியாயப்படுத்த முடியாது வழங்கியிருக்கலாம்.

243.
இறுதியாக, நாடு சாராத பாத்திரங்களின் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகள் தொடர்பான குழுவின் கருத்தின் அடிப்படையில், (மேலே அ 2 இனைப் பார்க்கவும்) சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் என அது குறிப்பிட்டவற்றை விஞ்சிய மனித உரிமைகள் மீறல்களை குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

தம் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அப்பால், நாடு சாராத பாத்திரங்களுக்கு மனித உரிமைகள் பற்றிய கடப்பாடுகள் உண்டா என்பதைச் சூழவுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக யுத்த வலயத்துக்கு வெளியே எல்...ஈ. இன் துஷ்பிரயோகங்களை குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை.

(ஊ) சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான தனிநபர் பொறுப்பு

244.
மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட பல சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் தனி நபர் பொறுப்பினைக் கொண்டுள்ளன. ஆயுதந் தரித்த மோதலில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாராரினதும் குறிப்பிட்டதொரு தனிநபரின் பொறுப்புப் பற்றிக் கவனம் செலுத்துவது குழுவின் ஆணையல்ல. கீழே உள்ள தீர்மானங்கள், நம்பகமான குற்றச்சாட்டுக்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக இருக்குமா என்பதைக் குறிப்பிடுவதற்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றச் செயலுக்குப் பொறுப்பான நபர்களை இனங்காண்பதற்காக மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அவர்களது மனோநிலையை மதிப்பீடு செய்வதற்கு மேலும் புலனாய்வு தேவைப்படும்.

(84)

245.
இலங்கை தரப்பினரான உடன்படிக்கைகளில் விளக்கப்பட்ட குற்றங்கள் அல்லது மரபுவழக்கான சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள் ஆகியவற்றுக்கு குழு அதன் கவனத்தை மட்டுப்படுத்தி, நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குற்றம் ஒன்று நடந்ததைக் குறிக்கிறதா என்ற பகுப்பாய்வில் கவனம் செலுத்துகிறது.

முன்பு போல், மிகவும் பாரதூரமான குற்றங்களை மாத்திரமே குழு கலந்துரையாடுகிறது.

பின்னால் இவ்வறிக்கையில், இலங்கை மீது அவை சுமத்தும் கடமைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட செயல்களின் பின்விளைவுகளை மற்றும் ஏனைய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான பங்கினையும் அது கவனத்துக்கெடுத்துக் கொள்கிறது.

1. போர்க் குற்றங்கள்

246.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் சில ஆனால் எல்லாவற்றையும் உள்ளடக்காத மீறல்களுக்கு தனிநபர் குற்றப் பொறுப்புக்கான ஏற்பாட்டினைச் சர்வதேச சட்டம் வழங்குகிறது. உள்நாட்டு ஆயுதந் தரித்த மோதல்களின் போதான அத்தகைய மீறல்களை ஜெனீவா உடன்படிக்கைகள் வரிசைப்படுத்தவோ அல்லது விளக்கம் அளிக்கவோ இல்லை என்ற போதிலும், ஏனைய அதிகாரபூர்வமான சர்வதேச சட்ட மூலங்கள் இக்குற்றங்கள் பற்றி விளக்கியுள்ளதோடு அவற்றின் குற்றத் தன்மை இப்போது சந்தேகத்திடமற்றதாகவுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம், குறிப்பாக உறுப்புரைகள் 8(2)(இ) மற்றும் 3 இது தொடர்பில் கவனிக்கத்தக்கதாகும்.

அச்சட்டத்துக்கு இலங்கை ஒரு தரப்பினராக இல்லாத போதிலும், சர்வதேசம் சாராத யுத்தங்களின் போர்க் குற்றங்களின் பட்டியல் மற்றும் விளக்கங்கள் மரபுவழக்கான சர்வதேச சட்டத்தினை துல்லியமாகப் பிரதிபலிக்காவிட்டாலும் பொதுவாக அதனை எடுத்துக் காட்டுக்கள் வாயிலாக தெளிவாக்குவதாகவுள்ளது.

ஐ.சி.ஆர்.சி.இன் மரபுவழக்கமான சட்டத்தின் விரிவான ஆய்வின் மீதும் குழு சார்ந்திருக்கிறது.

247.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மீறல்கள் எடுத்தியம்புவதாக குழு நம்புகிறது.

(அ) குறிப்பாக சகல விதமான கொலைகள், உருக்குலைத்தல், கற்பழித்தலை உள்ளிட்ட கொடூரமாக நடாத்தல் மற்றும் சித்திரவதை, சொந்த கௌரவம் மீதான அட்டூழியங்கள், குறிப்பாக இழிவுபடுத்தும் மற்றும் பண்பிழந்த விதத்தில் நடாத்துதல், காயமடைமந்தோரையும் நோயாளிகளையும் சேகரித்துப் பராமரிக்கத் தவறியமை ஆகியவற்றை உள்ளிட்ட பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள் (ஆ) வேண்டுமென்றே பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் (இ) கண்மூடித்தனமான அல்லது ஒவ்வாத தன்மையுடைய பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் (ஈ) மனிதாபிமான வாகனத்தொடர்கள் மற்றும் செஞ்சிலுவை குறித்துரைத்த வசதிகள் ஆகியவற்றை உள்ளிட்ட மருத்துவ மற்றும் மனிதாபிமானத் தலங்கள் மீதான தாக்குதல்கள் (உ) மக்களை பட்டினியில் வைத்தல் மற்றும் மனிதாபிமான நிவாரணத்தை மறுத்தல் மற்றும் (ஊ) வலுக்கட்டாயமாக காணாமல்போதல்கள். (85)

248.
எல்...ஈ.இன் சார்பில் செயற்படும் நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் மற்றும் மீறல்கள் எடுத்தியம்புவதாக குழு நம்புகிறது: (அ) உயிருக்கும் உடலுக்குமான வன்முறைகள் உள்ளிட்ட குறிப்பாக சகல விதமான கொலைகள், உருக்குலைத்தல், கொடூரமாக நடாத்தல் (கட்டாயப் பணி உட்பட) மற்றும் சித்திரவதை அத்துடன் பணயக் கைதிகளைப் பிடித்தல் போன்ற பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள், மற்றும் (ஆ) வலுக்கட்டாயமாக குழந்தைகள் ஆட்சேர்த்தல்.

2. மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள்

249.
பொதுமக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட விதத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதலின் அமைப்பைக் கொண்ட சில துஷ்பிரயோகங்கள் சர்வதேசக் குற்றம் ஆகலாம் எனவும் சர்வதேச சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஐசிவை, ருவண்டா பற்றிய சர்வதேச குற்றவியல் குழு மற்றும் ஐ.சி.சி. சட்டங்கள் உள்ளிட்ட பல சர்வதேச உடன்படிக்கைப் பத்திரங்கள் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை பொருள் வரையறை செய்துள்ளன. தேவைப்படும் அடிப்படைக்கூறு நிறைவேற்றப்பட்டிருப்பின், ஒரு ஆயுதந் தத்த மோதலுடன் தொடர்பு இருந்தாலும் இல்லாவிடினும் அவை குற்றச் செயல்களாகும்.

250.
பொது மக்களுக்கு எதிரான பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று இருப்பதானது மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கான பிரவேசமாகும்.

பொதுமக்கள் என்ற அர்த்தம் தொடர்பில், இராணுவம் சம்பந்தப்பட்டதை அல்லது போராளிகளை பொதுமக்களிடையே உட்புகுத்துவது பொதுமக்கள் என்ற நிலைமையை மாற்றாது. தாக்குதலை மேற்கொள்பவர் அது பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதை ஐ.சி.சி. சட்டம் தேவைப்படுத்துகிறது. ஆயினும், இந்த மனோநிலை தாக்குதலின் சகல விபரங்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை அவசியப்படுத்தவில்லை.

251.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களிலும் அதற்கு முந்தியும் இருக்கலாம், வன்னிப் பொது மக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன. பெரும் அளவிலான இடம்பெயர்ந்தோர் மீதான பரவலான செல் தாக்குதல், யுத்தத்தைத் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் காணாமல் போதல்கள், உணவு மற்றும் மருந்து வகைகளைத் தடுத்தல், பாரிய அளவிலான சிறைப்பிடித்தல், மற்றும் பாரபட்ச அடிப்படையிலானவற்றை உள்ளிட்ட ஏனைய வன்முறைகள் ஆகியவற்றை இத்தாக்குதல் உள்ளடக்கியது. மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவுள்ள குறிப்பிட்ட செயல்கள் தொடர்பாக, நம்பகமான குற்றச்சாட்டுக்களும் வன்முறைகளும் மனித இனத்துக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட பின்வரும் குற்றங்களைக் குறிப்பதாகவுள்ளன: (86)

(அ) கொலை: "குற்றம் சுமத்தப்பட்டவன் செயல்கள் அல்லது புறக்கணிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவன் மரணம் கொலையின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டாதகவுள்ளதோடு, அவ்விடத்தில் குற்றவாளி நடந்து கொண்ட விதம் பாதிக்கப்பட்டவன் மரணத்துக்குக் கணிசமான காரணமாயிருந்தது' என ஐசிவை குறிப்பிடுகிறது.

கொலைக்கான அதற்குத் தேவைப்படும் மனோ நிலை மனித இனத்துக்கு எதிரான குற்றமாகக் கொள்ளப்படுவதற்கு திட்டமிடுவதற்கு மாத்திரம் மட்டுப்பட்டதாயில்லை என்பதோடு, மனித உயிரைத் துச்சமாக மதிப்பதை உள்ளடக்குகிறது. இலங்கை இராணுவம் பரவலான செல் தாக்குதல் மூலம் பொது மக்களைக் கொலை செய்தது மனித இனத்துக்கு எதிரான குற்றமான கொலை என்பதை நம்பகமான குற்றச்சாடடுக்கள் ஆதக்கின்றன.

(ஆ) நிர்மூலமாக்குதல். ஐசிசி இன் சட்டத்தின் கீழ், "சனத்தொகையின் ஒரு பகுதியின் அழிவை ஏற்படுத்துவதற்காக ஏனையவற்றுள் உணவு மற்றும் மருந்து வகைகளுக்கான பிரவேசத்தைத் தடுத்து வேண்டுமென்றே வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்தல்' இனை நிர்மூலமாக்குதல் உள்ளடக்குகிறது (உறுப்புரை 7(2)(ஆ).

நிர்மூலமாக்கப்படுவதற்கான சனத்தொகையின் பகுதி "கணிசமான எண்ணிக்கையாக' இருத்தல் வேண்டும்.

யுத்த சூன்ய வலயத்தில் இறுதி மாதங்களில் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்ட நிலைமைகள் பொதுமக்களின் கணிசமானதொரு பகுதியை அழிப்பதை நோக்காகக் கொண்டிருந்தன என்பதால், நிர்லமாக்கும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் பற்றிய தீர்ப்புக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள ஆதாரமாக இருக்கின்றன.

(இ) சிறை பிடித்தல்:
பொதுமக்கள் நியாயமான காரணங்கள் இன்றி, விசாரணையின்றி அல்லது சட்ட அடிப்படையின்றி தடுத்து வைக்கப்படுவது சிறைபிடித்தலை மனித இனத்துக்கு எதிரானதொரு குற்றமாக்குகிறது.
நியாயமான காரணங்கள் இன்றி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோரை மெனிக் பாமில் தடுத்து வைப்பபது மூலம் சிறை பிடிப்பது தொடர்பான மனித இனத்துக்கு எதிரான குற்றத்தின் தீர்ப்புக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமாக உள்ளன.

(ஈ) துன்புறுத்தல்: தனி நபர் ஒருவரின் அடிப்படை அல்லது அடிப்படை உரிமையினை அனுபவிப்பதை மீறுவதை நோக்காகக் கொண்டு சாதி, மத அல்லது அரசியல் மீதான பாரபட்சமான செயல் அல்லது புறக்கணிப்பு துன்புறுத்தலாகும் என்பதோடு, மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகக் கணிக்கப்படும் ஏனைய செயல்களின் அதே பாரதூரத்தன்மையை அவை கொண்டுள்ளன.

இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய செயல்கள் போன்று எல்...ஈ.
இன் ஆதரவாளர்கள் என அரசாங்கம் நினைக்கும் வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான சாதி அல்லது அரசியல் காரணங்களின் அடிப்படையிலான செயல்கள் மனித இனத்துக்கு எதிரான துன்புறுத்தலாகும் என்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதக்கின்றன.

(உ) காணமற்போதல்:
" அரசாங்கம் ஒன்றின் அல்லது அரசியல் அமைப்பொன்றின் அல்லது அதன் அதிகாரத்துடன், ஆதரவுடன் அதன் உடன்பாட்டுடன் நபர்களை கைது செய்தல், தடுத்து வைத்தல் அல்லது கடத்தல், தொடர்ந்து சுதந்திரம் மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதை நிராகரித்தல் அல்லது அவர்களை நீண்டதொரு காலத்துக்கு சட்டத்தின் பாதுகாப்பில் இருந்து அகற்றுவதற்கான நோக்குடன் அவர்களுக்கு நேர்ந்த கதி அல்லது அவர்கள் பற்றிய தகவலை வழங்க மறுத்தல்' இனை காணாமற்போதலுக்கு ஐசிசி சட்டம் பொருள் வரையறை செய்கிறது.

(உறுப்புரை 7(2)(டி). யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதன் பின்னரும் அரசாங்கத்தின் அணுகுறையினை விமர்சிக்கும் அல்லது எல்...ஈ. க்கு ஆதரவான பலர் காணாமற் போனதைக் கொண்டு மனித இனத்துக்கு எதிரான காணாமற்போதல் குற்றம் பற்றிய கண்டுபிடிப்புக்களுக்கு நம்பகமான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமாகவுள்ளன.

புலிகளும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை புந்துள்ளனர்: (பாகம்) -14

(87)

252.
எல்.ரீ.ரீ.ஈ. இனைப் பொறுத்த வரை, மேற்படி நம்பகமான குற்றச்சாட்டுகளும் மீறல்களும், யுத்தத்தின் கடைசிக் கட்டங்களின் போது பொதுமக்களை அவர்கள் விருப்பத்துக்கு எதிராகத் தடுத்து வைத்தல் மற்றும் தப்பிச் செல்ல முயன்றவர்கள் சிலரைச் சுட்டுக் கொலை செய்வது மூலம் வன்னியில் பொது மக்கள் மீது பரவலான அல்லது திட்டமிடப்பட்ட தாக்குதலைக் குறிக்கின்றன. மனித இனத்துக்கு எதிரான குற்றமாக அமையும் குறிப்பான நடவடிக்கைள் தொடர்பாக, யுத்தத்தின் போது தப்பிகயோட முயற்சித்தவர்களைக் கொலை செய்வது மற்றும் பொதுமக்களுக்கு எதிராக தற்கொலைக் குண்டுதாரிகளைப் பிரயோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி விளக்கத்தின் படி, எல்...ஈ. மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்திருப்பதை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பதாக குழு தீர்மானித்துள்ளது.

3.தனிநபர் பொறுப்பின் நோக்கெல்லை

253.
அத்தகைய செயல்களைப் புரியும் தனி நபர்கள் மற்றும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் மற்றும் சிவிலியன் உயர் அதிகாகள் ஆகிய இரு சாராரையும் குற்றத்துக்கான பொறுப்புதாரிகள் என சர்வதேச சட்டம் இனங்காண்கிறது.

அத்தகைய செயல்களைப் புரியும் தனி நபர்களைப் பொறுத்த வரை, குற்றத்தைப் புரிவது (டி) குற்றச் செயல்களை நேரடியாகச் செய்தல், (டிடி) நேரடியாக ஈடுபடுபவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவது, (டிடிடி) குற்றச் செயலைத் திட்டமிடல் அல்லது அதனைத் தூண்டுதல், (டிதி) குற்றச் செயலைப் புரிய கட்டளையிடுதல் மற்றும் (தி) அவற்றைப் புரிவதற்காக இணைந்த அல்லது கூட்டான முயற்சி அல்லது சதி ஆகியவற்றை மேவுகிறது என சட்டங்களும் சர்வதேச சட்ட ஆய்வுத்துறை மற்றும் சட்ட மன்றங்கள் இனங்கண்டுள்ளன.

254.
இராணுவ கட்டளைத் தளபதிகள் மற்றும் சிவிலியன் மேற்பார் வையாளர்களைப் பொறுத்த மட்டில், பின்வரும் விடயங்களில் குற்றத்துக்கான பொறுப்பையும் சர்வதேச சட்டம் விதிக்கிறது (டி) ஈடுபட்ட குற்றங்கள் அல்லது ஈடுபடவுள்ள குற்றங்கள் பற்றிய நிஜமான அல்லது ஆக்கபூர்வமான அறிவினைக் கொண்ட உயர் அல்லது கீழ்த் தரத்திலான தொடர்பு, (டிடி) நேரடியாக ஈடுபடுபவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவது (டிடிடி) அது நடைபெறுவதைத் தடுக்க, அடக்க அல்லது தண்டனை வழங்க தேவையான மற்றும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்க கட்டளைத் தளபதி அல்லது மேற்பார்வையாளர் தவறுதல்.

255.
இலங்கை இராணுவக் கட்டளைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அத்துடன் இராணுவ மற்றும் சிவிலியன் எல்...ஈ. தலைவர்கள் இவ்வகையான பொறுப்பின் கீழ் சர்வதேச குற்றங்களுக்கான குற்றப் பொறுப்பை சுமந்துள்ளார்கள் என்பதை குழுவுக்கு வழங்கப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள தெவிக்கின்றன.

(எ) இலங்கைச் சட்டத்தின் கீழ் தனி நபர் குற்றப் பொறுப்பு

256.
சுயாதீனமான உள்நாட்டு நீதிமன்றங்களே அச்சட்டத்தை விளக்கிப் பொருள் கூறுவதற்கு சிறந்ததொரு நிலையில் உள்ளன என்பதை இனங்காண்பதோடு, இலங்கைச் சட்டத்தின் கீழ் தனி நபர் குற்றப் பொறுப்பு வரிசையை சுருக்கமாகக் குறிப்பிட குழு விரும்புகிறது. இலங்கையின் குற்றச் சட்டக் கோவை தோதான குற்றச் சட்டத்தின் பிரதான மூலமாகும். ஏனைய சட்டங்கள் குற்றச் சட்டக் கோவையின் குறை நிரப்பும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.

(88)

257.
நம்பகமான குற்றச்சாட்டுக்கள், யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்போ அல்லது இரு தரப்பினருமோ குற்றச் சட்டக் கோவையின் கீழ் பின்வரும் குற்றச் செயல்களைச் செய்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன: அரசுக்கு எதிராக யுத்தம் புரிதல் (எஸ் 114). யுத்தம் புரிவதை நோக்காகக் கொண்டு ஆட்கள் மற்றும் ஆயுதங்களைத திரட்டல் (எஸ் 116). மனஸ்தாபத்தை தூண்டிவிடுதல் (எஸ் 120). சட்ட விரோதமான கூட்டங்கள் மற்றும் கிளர்ச்சி (எஸ் 138155). கொலை மற்றும் தண்டனைக்குள்ளாக்கத்தக்க மனிதக் கொலை (எஸ்எஸ் 293295).

புறக்கணிப்பால் ஏற்படும் மரணம் (எஸ் 298). புறத்தூண்டுதலற்ற நிலையில் காயம் ஏற்படுத்தல் அல்லது படுகாயமேற்படுத்தல் (எஸ்எஸ்310326).

மனித உயிரை அல்லது ஏனையோர் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குதல் (எஸ்327). மூர்க்கமாக மனித உயிரை அல்லது ஏனையோர் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்குவதன் மூலம் காயமேற்படுத்தல் அல்லது படுகாயமேற்படுத்தல் (எஸ்எஸ்328329).

தவறான முறையில் கட்டுப்படுத்தி வைத்தல் அல்லது அடைத்து வைத்தல் (எஸ்எஸ்330333). விசேட பிவில் தவறான முறையில் அடைத்து வைத்தல் (எஸ்எஸ்334339). பலவந்தமாகக் கடத்திச் செல்லல் (எஸ்எஸ்353359).

கற்பழிப்பு (எஸ்எஸ் 363364).தாக்குதல் மற்றும் சட்டவிரோதமான பலத்தைப் பிரயோகித்தல் (எஸ்எஸ்340349).

வலுக்கட்டாயப் பணி, அடிமைத்தனம் மற்றும் யுத்தத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தல் (எஸ் 358ஏ). பாரிய பாலியல் துஷ்பிரயோகம் (எஸ் 365பி).மற்றும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் (எஸ் 372378).

இதே போன்று, சித்திரவதை (கெட் சட்டத்தின் எஸ்2) மற்றும் யுத்த செய்தியைப் பரப்புரை செய்தல் மற்றும் தேசிய சாதி அல்லது சமய வெறுப்பை ஆதரித்து வாதாடல் (கெட் சட்டத்தின் எஸ்2) போன்ற குற்றங்களைக் குறிக்கும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மேலும், இழிவான நடத்தை (எஸ் 107), கொடூரமான, ஒழுக்கக்கேடான அல்லது இயற்கைக்கு மாறான விதத்திலான செயல் ஒன்றைச் செய்தல் (எஸ் 109(உ), தேவையற்றவாறு தடுத்து வைத்தல் (எஸ்112 (அ), மற்றும் நல்ல கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கக் கூடிய நடத்தை ஆகியவற்றை உள்ளிட்ட இராணுவச் சட்டத்தின் கீழான இராணுவக் குற்றங்களை இராணுவத்தினர் புரிந்ததைக் குறிக்கும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் (எஸ்129(1). இப்பட்டியல் மிகவும் பாரதூரமான குற்றங்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

ஏ. தீர்மானங்கள்

258.
 இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் கடைசிக் கட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த காலப்பகுதி சில போர்க்குற்றங்களாக மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகக் கூட இருக்கும்படியாக சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றை பரவலாக இலங்கை அரசாங்கம் எல்ஈயும் மீறியதொரு சுபாவத்தைக் கொண்டிருந்தன. யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினரால் சர்வதேச நியதிகள் மூர்க்கத்தனமாகப் புறக்கணிக்கப்பட்டதால் 300,000 க்கும் அதிகமான மக்கள் அதனால் பாதிக்கப்பட்டனர். யுத்தம் மற்றும் சமாதானம் நிலவும் ஆகிய இரு காலங்களிலும் தனி மனிதர் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக அமைந்த சர்வதேச சட்டத்தின் முழுச் சட்டகத்தையும் உண்மையிலேயே பாரிய முறையில் தாக்குதலுக்குள்ளாக்கியதை அவர்கள் போர் புரிந்த விதம் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் போது இவ்விதிகளை புறக்கணிக்கலாம் எனும் அளவுக்கு யுத்தத்தின் ஒரு தரப்பு அடைந்த வெற்றி சிலருக்கு தைரியமூட்டுவதாயிருந்தது.

(89)
259.
குழுவின் சட்ட மதிப்பீட்டை சுருக்கமாக வழங்குவதற்கு:
(அ) அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல், ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 இன் மீறல்கள், போராளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வித்தியாசத்தைக் காண்பதற்கான தேவை, பொதுமக்கள் அல்லது பொதுமக்கள் தலங்கள் மீதான தாக்குதலுக்கான தடை, கண்மூடித்தனமான அல்லது அளவுக்கு அதிகமான பலத்தை பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலின் போது பிரயோகித்தல், தாக்குதல்களுக்கு முன்பும் அவற்றின் போதும் முன்னெச்சரிக்கைக்கான தேவைப்படுத்தல், மருத்துவ மற்றும் மனிதாபிமான ஈடுபாட்டாளர்களை மற்றும் தலங்களுக்கான விசேட பாதுகாப்புப் பற்றிய தேவைப்படுத்தல், பொதுமக்களைப் பட்டினிக்கு உள்ளாக்குவதற்கான மற்றும் மனிதாபிமான நிவாரணத்தைத் தடுப்பதற்கான தடை, வலுக்கட்டாயமாகக் காணாமற்போதல் மீதான தடை, சுதந்திரம் இழக்கச் செய்யப்பட்டவர்களின் குறைந்த பட்ச நடத்தலுக்கான தேவைப்படுத்தல்கள் அத்துடன் இறந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான தேவைப்படுத்தல்கள் ஆகியவற்றின் மீறல்களை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. மனித உரிமைச் சட்டங்களைப் பொறுத்த வரை, உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதிகப் பாதுகாப்பு மற்றும் ஆட்களின் முழுமை, விசாரணையின்றித் தடுத்து வைத்தல், உணவு, நீர், உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகள், கூடுவதற்காகவும் இணைந்து செயற்படுவதற்குமான சுதந்திரம், பெண்களின் உரிமைகள், குடும்பங்களுக்கான விசேட பாதுகாப்பு, குழந்தைகளுக்கான விசேட பாதுகாப்பு, பயனுறு பகாரத்துக்கான உரிமை, காணாமற்போதல்களுக்கு எதிரான தடை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அரசாங்கம் மீறியுள்ளதாக நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(ஆ) எல்...ஈ. இனைப் பொறுத்த வரை, ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3, பொதுமக்கள் செறிவாக உள்ள இடங்களில் இராணுவ பொருட்களை அமைப்பதற்கான தடை.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்த்தலுக்கு எதிரான தடை, வலுக்கட்டாய பணிக்கெதிரான தடை ஆகிய மீறல்களை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

(இ) அரசாங்கத்தின் சார்பில் செயற்படும் தனி நபர்கள் பின்வரும் போர்க் குற்றங்களைப் புரிந்ததைக் குறிப்பிடுவதாகவும் நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன: ஜெனீவா உடன்படிக்கைகளின் பொது உறுப்புரை 3 இன் பாரிய மீறல்கள், வேண்டுமென்றே பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கண்மூடித்தனமான அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகித்து மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், மனிதாபிமான வாகனத் தொடர்கள் மற்றும் செஞ்சிலுவையினால் குறிப்பிடப்பட்ட வசதிகளை உள்ளிட்ட மருத்துவ மற்றும் மனிதாபிமான தலங்கள் மீதான தாக்குதல்கள், பொது மக்களைப் பட்டினிக்கு ஆளாக்குதல் மற்றும் மனிதாபிமான நிவாரணத்தை மறுத்தல் அத்துடன் வலுக்கட்டாயமான காணாமற்போதல்கள்.

(90)

(ஈ) எல்...ஈ. ஆளணியினர் பின்வரும் போர்க்குற்றங்களைப் புரிந்ததை நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன: பொது உறுப்புரை 3இன் பாரிய மீறல்கள் மற்றும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ஆட்சேர்த்தல்.

(உ) அரசாங்கம் பின்வரும் போர்க்குற்றங்களைப் புரிந்ததை நம்பகமான குற்றச்சாடடுக்கள எடுத்தியம்புகின்றன: கொலை, நிர்மூலமாக்குதல், சிறைபிடித்தல், துன்புறுத்தல் மற்றும் காணாமற்போதல்கள்.

(ஊ) மனித இனத்துக்கு எதிரான குற்றமாகிய கொலையினை எல்...ஈ.
புரிந்ததற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

(எ) போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய இரண்டு விடயத்திலும், தமக்குக் கீழுள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கு உயர் அதிகாரிகளின் பொறுப்புப் பற்றி நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

260.
இந்த நம்பகமான குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்கள், பாரதூரமான புலனாய்வு மற்றும் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை வற்புறுத்துகின்றன.

தி. பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் அணுகுறை

261.
இவ்வத்தியாயத்தில், அத்தியாயங்கள் டிடிடி மற்றும் டிதி இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட மீறல்களின் நோக்கெல்லை மற்றும் சுபாவம் ஆகியவற்றைக் கவனத்துக்கெடுத்து, சர்வதேசத் தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அணுகுமுறையை குழு மதிப்பீடு செய்கிறது.

அ. தோதான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள்

262.
யுத்தத்தில் இருந்து மீண்ட பல நாடுகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதான நிலைச்சக்தியைக் கொண்ட, இலங்கைக்கு ஒத்த மீறல்களை அனுபவித்துள்ளன.

மிகவும் தீவிரமான வேறுபாடுகளைக் கொண்ட நாடுகளின் அவ்வனுபவங்கள், அத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கத் தேவையான சர்வதேசத தரங்களை வெளியிடும் மற்றும் அத்தகைய குற்றங்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கான பலவகையான செயற்படுத்தக் கூடிய அணுகுமுறைகளையும் கொண்ட அத்தரங்களுக்கு ஏற்ற பூலோக எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

263.
இலங்கை தரப்பினராக உள்ள, பல மனித உரிமைகள் ஒப்பந்தங்கள், புலனாய்வு தொடர்பான கடப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஐ.சி.சி.பி.ஆர். இன் உறுப்புரை 2(3), மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் பயனுறு பகாரத்தை வழங்குவதைத் தேவைப்படுத்துகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் விளக்கத்திற்கேற்ப, உடன்படிக்கையின் சகல மீறல்களையும் நாடுகள் புலனாய்வு செய்வதைத் தேவைப்படுத்துவதோடு, பாரிய மீறல்கள் அல்லது சர்வதேசக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வரை, அதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதையும் தேவைப்படுத்துகிறது.

(91)
மேலும், இலங்கை தரப்பினராகவுள்ள சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடாத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான உடன்படிக்கையின் 12ஆம் உறுப்புரை, சித்திரவதையாகிய சர்வதேச குற்றத்தைப் புரிந்த சகலரையும் புலனாய்வு செய்து அவர்கள் மீது வழக்குத் தொடர (அல்லது வழக்குத் தொடருவதற்காகத் தேடிவரும் இன்னொரு நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு) நாடுகளைத் தேவைப்படுத்துகிறது.

264.
பிராந்திய மனித உரிமைகள் உடன்படிக்கைகள் மற்றும் ஐ.சி.சி.சி.பி.ஆருக்கு ஐ.நா. மனித உமைகள் குழு அளித்துள்ள விளக்கத்தின் கீழ், பிராந்திய மனித உரிமைகள் நீதி மன்றங்களின் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் சபைக்கு சுயாதீன நிபுணர்கள் அண்மையில் வழங்கிய அறிக்கை புலனாய்வுக்கான பிரயோசனமிக்க சட்டத் தரங்களை முன் வைக்கிறது. சுயாதீனம், பக்கச்சார்பற்றதன்மை, முழுநிறைவான, பயனுறு மற்றும் உடனடியான என்பவற்றை இக்கட்டளைகள் உள்ளடக்குகின்றன.

265.
இவ்வுடன்படிக்கைகளின் கடப்பாடுகளுக்குப் புறம்பாக, புலனாய்வு செய்வதற்கான கடமை வேறு பல சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தீர்மானங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.

பொதுச் சபையும், புலனாய்வு செய்வதற்கான கடமையை மனித உரிமைகள் சட்டம் உள்ளடக்குவதாக அதன் சர்வதேச மனித உரிமைகள மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் மற்றும் நஷ்டஈடு பெறுவதற்கான உரிமை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் என்ற அதன் 2006 ஆம் ஆண்டின் 60/147 தீர்மானததில் விளக்கியுள்ளது. பாதுகாப்புச் சபையும் போர்க்குற்றங்களுக்கு மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தலை உள்ளிட்ட மனித கௌரவத்துக்கு எதிரான பாரிய துஷ்பிரயோகங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை அப்புறப்படுத்துவதன் முக்கியத்துவத்தை, யுத்தத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பு பற்றிய அதன் 1674 (2006) தீர்மானத்தை உள்ளிட்டவாறு பலமுறை வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு யுத்தம் ஒன்று சம்பந்தப்பட்ட நாட்டு நிலைமைகளில் பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை அப்புறப்படுத்தும் விடயத்தில் அதே அணுகுறையை அது கடைப்பிடித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் பங்குபற்றிய வேர்ல்ட் சம்மிட் அவுட்கம் மாநாட்டில் 2005 இல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 60/1 யுத்தம், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனத்துவச் சுத்திகரிப்பு மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து தமது மக்களைப் பாதுகாப்பதற்கான நாடுகளின் பொறுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

266.
மேலும், பொறுப்புக்கூறல் பற்றி முக்கியமான தரங்களையும் சட்டகங்களையும் ஐக்கிய நாடுகள் செயற்பாடுகள் தொகுத்துள்ளன. 2005இன் தண்டனையிலிருந்து விலக்கீட்டுமையை எதிர்ப்பதற்கான செயற்பாடு மூலம் மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கோட்பாட்டுத் தொகுதி குறிப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஐ.நா.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கட்டளைப் பிரகாரம் நிபுணர்களால் தொகுக்கப்பட்ட இந்த ஆவணம் சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று அடிப்படை உரிமைகள் உண்டு என்ற உள்ளார்ந்த அறிவினை வழங்குகிறது: உண்மையை அறிவதற்கான உரிமை, நீதியைப் பெறுவதற்கான உரிமை மற்றும் மீண்டும் ஏற்படாது என்ற நிறுவக தியிலான உத்தரவாதத்தை உள்ளிட்ட நஷ்டஈட்டுக்கான உரிமை.

(92)

267.
ஐக்கிய நாடுகளின் உறுப்புக்களின் இந்நடவடிக்கைகளுக்கு அப்பால், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையிலிருந்து விலக்கீடு அளிப்பதை விட்டும் அநேகமான நாடுகள் தவிர்ந்து கொண்டுள்ளன அல்லது முன்னர் வழங்கப்பட்ட விலக்கீடுகளை இரத்து செய்வதற்கு நீதி அல்லது சட்டவாக்க ரீதியிலான நடவடிக்கைகளைப் பயன்படுத்தியுள்ளன. சர்வதேச நீதி மன்றங்கள் அத்தகைய குற்றங்களுக்கான மன்னிப்புக்கள் வழங்கமுடியாதவை என அதே போன்று தீர்ப்பு வழங்கியுள்ளன.

இதுவே ஐக்கிய நாடுகளின் கொள்கை நிலையாகவும் உள்ளது. இலங்கை அரசாங்கம் கூட, "மன்னிப்புக்கள் உள்ளார்ந்தவாறு விலக்கீட்டுக் கலாசாரமொன்றை ஊக்குவிக்கிறது என்பது எமது நன்காய்ந்த கருத்தாகும் என்பதோடு எனவே அவை உகந்ததல்ல' எனக் குறிப்பிட்டுள்ளது.

268.
உள்நாட்டு ஆயுதந்தரித்த மோதல் ஒன்றில் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக, பாரிய மீறல்களை புலனாய்வு செய்து, ஆதாரம் இருப்பின், அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை உறுதியாக ஆதரிப்பதற்கான சர்வதேச வழக்கம் அரசாங்கங்கள் மீது சட்டப்படியிலான கடமையொன்றுக்கான நீதித்துறையிலான எடுத்துக்காட்டான முன்னோடி நிகழ்வும் தற்போது உள்ளன. குறிப்பாக, அத்தகைய மீறல்களை சர்வதேச யுத்தங்களில் புலனாய்வு செய்வதற்கான கடமையினை ஏற்று ஆனால் உள்நாட்டு ஆயுதந்தாங்கிய மோதலில் அப்படியில்லை என்ற விளக்கம் தொடர்ந்தும் வழக்கில் இல்லை.

ஐ.சி..வை இன் கூற்றுப்படி, "எந்தவொரு யுத்த நடவடிக்கையிலும் கட்டாயக் குறைந்த பட்சமாக பொதுவாக இனங்காணப்பட்டுள்ள மனிதாபிமானத்தின் அடிப்படைக்கூறின் ஆய்வுகளை மனிதாபிமான சட்டத்தின் கோட்பாடுகளும் விதிகளும் பிரதிபலிக்கின்றன. சம்பந்தப்பட்ட செயல்களின் பாரதூரமான தன்மையையோ அவற்றைத் தடை செய்வதில் சர்வதேச சமூகத்தின் அக்கறையையோ ஒருவரும் சந்தேகிக்க முடியாது.' உள்நாட்டு யுத்தத்தில் பாரிய மீறல்களை புலனாய்வு செய்வதற்கான கடப்பாட்டினை பொதுச் சபையும் ஏகமனதாக தீர்மானம் 60/147 இல் உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்ட விளக்கத்தில் விசேட இடத்தை வகிக்கும் ஐசிஆர்சி, நாடுகளின் பழக்கங்கள் பற்றிய விவான மீளாய்வின் அடிப்படையில், உள்நாட்டு யுத்தத்தின் போதான போர்க் குற்றங்களை புலனாய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதை மரபுவழக்கான சர்வதேச சட்டம் அரசாங்கங்கள் மீது கடமையாக்குகிறது எனக் கண்டுள்ளது.

269.
சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் குறிப்பான பொறித்தொகுதிகளை ஏற்படுத்தும் தற்போதுள்ள அரச வழக்கம் மேலே விளக்கப்பட்ட சட்ட கடப்பாடுகளையும் தரங்களையும் ஊக்குவிப்பதாகவுள்ளது.

பாரிய அளவிலான மீறல்களில் இருந்து மீண்டு நிலைத்தாகவுள்ள சமாதானத்தையும் சிறந்ததொரு எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப முனையும் நாடுகள் கடந்த காலத்துக்குப் புறமுதுகு காட்டாமல் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அத்தகைய வழக்கம் குறிக்கிறது.

மோதலுக்குப் பிந்திய அல்லது மாற்றமடைந்து வரும் நிலைமைகளில், "பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, நீதியை வழங்கி மீளிணக்கப்பாட்டை அடைவதற்காக சமூகத்தின் கடந்த கால பாரிய துஷ்பிரயோகங்கள் பற்றி உடன்பாட்டுக்கு வருவது தொடர்பான முழுமையான செயற்பாடுகளையும் பொறித்தொகுதிகளையும்' அமைப்பதில் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இச்செயற்பாடுகளும் பொறித்தொகுதிகளும் கூட்டாக இடைக்காலத்திற்குரிய நீதி என அழைக்கப்படுகிறது.

இலங்கை தூதுக்குழு சட்டமா அதிபர் தலைமையில் விளக்கமளித்தது: (பாகம்) - 15

270.
கடந்த கால மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட நடவடிக்கைத் தொகுதியான இடைக்கால நீதி மனவுரு இப்போது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இடைக்கால நீதி தனிப்பட்ட மீறல்களை ஆராய்வதோடு, அவற்றுக்கு அப்பாலும் சென்று உருமாதிரிகளை மற்றும் சிக்கலான அமைப்பு முறையிலான அநீதிகளினால் விளையும் வன்முறையின் கடந்தகாலத் தொடர்பு ஆகியவற்றையும் பகுப்பாய்வு செய்கிறது. மீண்டும், செயலாளர் நாயகம் கூறுவதன் பிரகாரம், " ஒன்றிணைந்த மற்றும் சுயாதீன ரீதியில் மீறல்களின் முழுமையான அமைப்பு பற்றிய நடவடிக்கை எடுக்க முயல்வதனால், மேலும் மோதலைத் தடுத்து சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மீளிணக்கப் பாட்டுக்குமான விசாலமான நோக்கங் களுக்கான பங்களிப்பை இடைக்கால நீதி வழங்கும்.

271.
கடந்த காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிராமல் அல்லது பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றிராமல் இருப்பது இடைக்கால நீதியின் விவேகமாகும். மாறாக, வன்முறைச் சக்கரத்தை நிறுத்தி, தண்டனை விலக்களிப்பீட்டுக்கு மற்றும் நிராகரிப்புக்கு எதிராகச் செயற்பட்டு கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை ஏற்றுக் கொள்வதை இடைக்கால நீதி நோக்காகக் கொண்டுள்ளது. மோதலுக்கு முன்பிருந்த அல்லது அதற்குப் புறம்பாகவுள்ள காரணிகள் மற்றும் அநீதிகளை அதிக விசாலமாக கவனத்துக்கெடுத்து பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை உள்ளிட்ட ஆனால் மீறல்களின் சுபாவம் மேல் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் மோதலின் அனுபவங்கள் ஆகியவற்றின் மீதும் அது கவனம் செலுத்த நாடுகிறது.

பிரஜைகள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையில் விசுவாசத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் நல்லாட்சியை பலப்படுத்தி, அதன் மூலம் எதிர்காலத்தில் மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பங்களிப்பை அது வழங்குகிறது. இவ்வாறாக, தென் ஆபிக்காவில் நிகழ்ந்தது போன்று ஆழ்ந்த இனவாத அரசில் இருந்து "ஜனநாயக பெறுமானங்களை, சக நீதியை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட' ஒரு சமூகமாக மாறியது போன்று இடைக்கால நீதி முக்கியமாக எதிர்காலத்தை நோக்கியதாகவுள்ளது.

272.
இலங்கை பொறுப்புக் கூறல் பற்றிய அதன் அணுகுமுறையை கூர்ந்து நோக்கக் கூடியதொரு பிரயோசனமிக்க கண்ணாடி வில்லையாக இடைக்கால நீதி உள்ளது.

உதாரணமாக பெரு நாட்டைப் போன்று அரசாங்கம் கிளாச்சியொன்றை முறியடித்துள்ளதை உள்ளிட்ட ஏதும் மோதலுக்குப் பின்னரான நிலைமைகளுக்கு அது ஏற்புடைத்தாகும். குறிப்பாக, இலங்கை சர்வதேச தரங்களை அடிப்படையாகக் கொண்ட மற்றும் இடைக்கால நீதிக்கான அணுகுறையின் முக்கியமானதொரு அங்கமான உண்மை, நீதி மற்றும் நஷ்டஈடு தொடர்பாக பாதிக்கப்பட்டோன் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முனைய வேண்டும்.

273.
வலுக்கட்டாயமாகக் காணாமல்போதல்கள் மற்றும் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான உறவினர்களின் உரிமை ஆகியவை தொடர்பாக உண்மைக்கான உரிமை ஆரம்பத்தில் ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் மற்றும் அமெக்காவுக்கிடையிலான ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்மானங்களினூடாக தோன்றியதொன்றாகும். குறிப்பாக உண்மை முழுமையாகத் தெரியாத போது, அரசாங்கத்தினால் அல்லது வரலாற்றின் மறு ஆய்வு செய்து திருத்தலினால் அல்லது திட்டமிட்டவாறு தாக்கமுற்றோன் குரல் அடக்கப்படும் போது சம்பவங்கள் பற்றிய சர்ச்சை எழும்போது உண்மைக்கான உரிமையை உறுதிப்படுத்தி அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானதாகும்.

274.
உண்மைக்கான உரிமை முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ள ஒரு வழி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை அமைப்பதாகும் மீறல்களின் போக்கினை வெளிப்படுத்தி, மோதலைத் தொடரச் செய்யும் அடிப்படையான பிரிவுகளை இனங்கண்டு நிறுவாகப் பொறுப்புக்களை குறிக்க உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களால் முடியும்.

உண்மையின் இவ்வம்சங்களை நிலைநிறுத்துவதற்காக மாத்திரமன்றி, பெண்கள் அல்லது குழந்தைகள் போன்ற குறிப்பிட்ட ஓரங்கட்டுதலை எதிர்நோக்கும் குழுக்களை உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனுபவங்களைத் தெரிவிப்பதற்குச் சந்தர்ப்பமளிப்பது மூலம் செயற்பாடு மற்றும் அதன் உற்பத்திக்குப் பொதுவாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் அழுத்தம் கொடுக்கும்.

கடந்த பத்து வருடங்களின் 21 இனை உள்ளிட்ட 1974 - 2009 வரையிலான 40 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் பற்றி அண்மையில் வெளியான புத்தகம் ஒன்று கணிப்புத் தெவித்துள்ளது. அவற்றுள் எட்டு அமெரிக்கக் கண்டத்திலும், ஒன்று ஐரோப்பாவிலும், ஏழு ஆப்பிரிக்காவிலும் மற்றும் ஐந்து ஆசியாவிலும் உள்ளன (அவற்றுள் பல அண்மையில் அமைக்கப்பட்டவையாகும்).

275. நீதிக்கான உரிமை பல சர்வதேச உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பினும், 1993 இல் முன்னாள் யூகொஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் குழு மற்றும் அதனுடன் நெருங்கிய தொடர்புள்ள 1994ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ருவாண்டாவுக்கான குற்றவியல் குழு ஆகியவற்றைத் தொடர்ந்து நீதிக்கான உரிமையை அமல் படுத்துவது தொடர்பான பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. (இலங்கை இதுவரை தரப்பினராகச் சேராத) 114 நாட்டுத் தரப்பினரை தற்போதுள்ள உள்ளடக்கிய 2002 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோமாபுரிச் சட்டங்கள் இதனை மேலும் வலுப்படுத்தின. மனித இனம் அறிந்திருக்கும் சில மிக மோசமான குற்றங்களைத் தடை செய்யும் சர்வதேச சட்டத் தோற்றத்தின் முக்கியமானதொரு முன்னேற்றமாக ரோமாபுரிச் சட்டம் உள்ளது.

பல நாட்டுத் தரப்பினர் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களை உள்நாட்டு நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கான கடப்பாட்டை ஏற்படுத்தும் தேசிய சட்டவாக்கத்தை அமல் செய்துள்ளன.

அதிகமாக, உள்நாட்டு யுத்தமொன்றின் போது போர்க்குற்றமாகக் கணிக்கப்படக் கூடிய பாய மீறல்களுக்காக ஒரு நாடு தனது பிரஜைகளுக்கு எதிராக உள்நாட்டு நீதிமன்றங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை ஆர்ஜன்டீனா, பங்களாதேஷ், பொஸ்னியா, சிலி, கொலம்பியா, கொங்கோ ஜனநாயக குடியரசு, கௌத்தமாலா, பெரு. சேர்பியா, ருவண்டா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.

கொசோவோ (1999), டிமோர் லெஸ்தி (2000), சியர்ரா லியோன் (2002), கம்போடியா (2003) மற்றும் பொஸ்னியா (2004) ஆகியவற்றை உள்ளிட்ட ஏனைய நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகத் தேசிய மற்றும் சர்வதேச அமைப்பைக் கொண்ட கலப்பினத் தன்மையுடன் கூடிய நீதிக் குழுக்களை அமைத்துள்ளன.

276.
பாரிய மீறல்களைத் தொடர்ந்து நஷ்டஈட்டுக்கான உரிமை நன்கு இனங் காணப்பட்டுள்ளதோடு, சட்ட மற்றும் நிருவாக ஆகிய இரு வழிகள் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் அது அமல் செய்யப்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனா, சிலி, தென் ஆபிக்கா, கௌத்தமாலா, பெரு, சியர்ரா லியோன், டிமோர் லெஸ்தி, மொரொக்கோ மற்றும் லைபீ ஆணைக்குழுக்களை உள்ளிட்ட பல உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுக்கள் நஷ்டஈட்டினை பரிந்துரைத் துள்ளன. நஷ்டஈடு மூன்று முக்கிய குறிக்கோள்களை நிறைவு செய்கிறது: (டி) பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை ஏற்றுக் கொள்வது, (டிடி) பாதிக்கப்பட்டோர் அனுபவித்த இழப்பு மற்றும் துன்பங்களை இனங்காணல், (டிடிடி) அவர்கள் அனுபவித்த தீமையை ஈடு செய்வது முடியாத காயம் என்றிருந்த போதிலும், பாதிப்படைந்தோருக்கு சின்னமாக அல்லது பொருளாக நிஜ நன்மைகளை வழங்குதல்.

277. நஷ்டஈடுகள் தனிநபர்களுக்கோ சமூகங்களுக்கோ வழங்கப்படலாம் என்பதோடு, உரிமைகளை மீட்டல், ரொக்கத்திலான கொடுப்பனவு, மருத்துவ மற்றும் மனோதத்துவ சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு, கல்விக்கான உதவி, சொத்துக்களை திரும்பக் கையளித்தல் அல்லது அவற்றுக்கான இழப்பீட்டினை வழங்கல் அத்தோடு உத்தியோகபூர்வமான பகிரங்க மன்னிப்புக்கோரல், நூதன சாலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தல் மற்றும் உத்தியோக ஞாபகார்த்த தினங்களை ஏற்படுத்தல் போன்ற பலவிதமான அமைப்புக்களில் இழப்பீட்டினை வழங்கலாம். பொது அபிவிருத்தி முயற்சிகளில் இருந்து மாறுபட்டதாகக் கூட்டுச் சுபாவத்தினைக் கொண்ட இழப்பீடு இருப்பதோடு அது மீறப்பட்ட உரிமைகள் பற்றியதொரு உத்தியோகபூர்வமான இனங்காணலுடன் சேர்ந்திருக்க வேண்டும். இறுதியாக மற்றும் முக்கியமாக, இழப்பீட்டின் பொது அம்சங்கள் பற்றி அதிகரித்து வரும் உணர்வு உள்ளதோடு, பெண்கள் மற்றும் ஆண்கள் தொடர்பில் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றின் விளைவுகளை ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.

ஆ, பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் நிலைப்பாடு

278.
பொறுப்புக்கூறல் தொடர்பில், "ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும் என்ற வாய்ப்பாட்டினை மற்றும் வெளிநாட்டு மாதிரிகளின் இறக்குமதியை' ஐக்கிய நாடுகள் ஆதப்பதில்லை என்பதோடு, "தேசிய மதிப்பீடுகள், தேசிய பங்கேற்கல், மற்றும் தேசிய தேவைகள் மற்றும் அபிலாஷைகள்' என்பதில் அதன் ஆதரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆயினும், இது சர்வதேச தரங்களின் முக்கியத்துவத்தை குறைக்காது என்பதோடு அத்தரங்கள் ஏதும் தேசிய மாதிரிக்குள் ஒன்றிணைக்கப்படல் வேண்டும். இவ்வாறாக, பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கையின் அணுகுமுறை, யுத்தத்தினால் பாதிப்படைந்தோர் உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டுக்கான தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அது எவ்வாறு பயனுறு விதத்தில் பங்காற்றுகிறது என்பதை நன்கு புந்து கொள்வதற்காக அதனை சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்களுக்கெதிரே மதிப்பீடு செய்ய வேண்டும்.

279.
குழுவின் கேள்விகளுக்கான எழுத்து மூலமான பதில்கள் மற்றும் 2011 பெப்ரவ 22ஆம் திகதி நியூயோர்க்கில் குழுவின் முன்னிலையில் ஐக்கிய நாடுகளுக்கும் சட்ட மா அதிபர் மோஹான் பீஸ் இன் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவொன்றுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது பொறுப்புக்கூறலுக்கான அதன் அணுகுறையை உருவாக்கும் சித்தாந்தம் பற்றியதொரு விளக்கத்தை இலங்கை அரசாங்கம் வழங்கியது. (1) சில எல்...ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான சட்ட ரீதியிலான நடவடிக்கை, மற்றும் (2) இலங்கை மக்களையும் அதன் நிலப்பரப்பையும் எல்...ஈ. இடம் இருந்து பாதுகாப்பதற்கான அவர்களது அரசியல் யாப்பு கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிய ஒன்றன் பின் ஒன்றாக வந்த அரசாங்கங்களின் அரசியல் பொறுப்பு என்றவாறாக இரு முனை கொண்டதாகவுள்ள பொறுப்புக்கூறல் மனவுரு ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலைப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நாடுவதாக.சட்ட மா அதிபர் விளக்கிக் கூறினார். மேலும், அதன் எழுத்து வடிவிலான பதிலில், இம்மேலதிகக் கருத்துக்களையும் அரசாங்கம் முன் வைத்தது: கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் முழுச் செயற்பாடு நீதியை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டுவரும் சித்தாந்தத்தின் மீது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை சரியாக மதிப்பீடு செய்வது முக்கியமாகும். சிவில் அல்லது குற்றப் பொறுப்பின் முக்கியத்துவம் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு சித்தாந்தமாகும் அது. பெரும்பான்மைச் சமூகம் உள்ளிட்ட சகல சமூகங்களும் கடந்த காலத்தில் நடந்தவற்றை வரலாற்றுக்கு ஒப்படைப்பதை இந்த பெருமுயற்சி முழுமையாகத் தேவைப்படுத்துகிறது.

ஜனநாயகச் செயற்பாடொன்றினுள் சட்டத்தின் நல்லாட்சியின் ஆதிக்கத்தின் கீழ் தவறிழைத்தவர் தவறுக்கான வருத்தத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பது அதனைத் தொடர வேண்டும்.

280.
இவ்வணுகுறையின் மையமாக அமைந்துள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு, தனி நபர் பொறுப்புக் கூறலை குவிமையமாகக் கொள்ளாது அதன் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசுக்கு உண்டு என்ற அரசியல் பொறுப்பு பற்றிய விசாலமான கருத்து மீது கவனம் செலுத்துகிறது. எல்.எல்.ஆர்.சி. இன் இவ்வம்சத்துக்கு அது போன்றதொரு ஆணையைக் கொண்ட ஐக்கிய இராஜதானியின் ஈராக் விசாரணை (சில்கொட் விசாரணை) உணர்வினை வழங்கியதாக சட்ட மா அதிபர் விளக்கினார்.

281.
யுத்தத்தை மேற்கொள்வதில், குறிப்பாக இறுதிக் கட்டங்களின் போது, அது எவ்வாறு நடந்து கொண்டது என்பதற்கான பொறுப்புக்கூறல் பற்றிய எந்தவொரு கருத்தும் அரசாங்கத்தின் இரு முனை மனவுருவில் காணப்படவில்லை.

எல்.எல்.ஆர்.சி. இன் செயற்பாடு மேலும் புலனாய்வு செய்யப்பட வேண்டியுள்ள "குறிப்பிட்டதொரு பொறுப்பு' பற்றிய விடயம் ஒன்றுக்கு வழிவகுத்தால் அது சட்டமா அதிபன் அலுவலகத்திலுள்ள "வேறானதொரு அலகு' க்கு தீர்மானத்துக்கு விடப்படும் எனவும் இலங்கை அரசாங்கம் தெவித்துள்ளது. ஆயினும், இது வரை எல்.எல்.ஆர்.சி.க்கு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் அத்தகைய பொறுப்புக்குக் காரணம் கற்பிக்கக் கூடிய தனி நபர் களையோ குழுக்களையோ இனங்காணவில்லை என அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. "இராணுவ வீரர்களினால் வரம்பு கடந்த செயல்கள் நேரடியும் என்பது பற்றி விழிப்பாகவும் உணர்வுடனும்' அது உள்ளது எனவும் காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கு எதிரான சில வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட் டுள்ளது. ஆயினும் இந்த சூத்திரம் பாரிய அளவிலான அல்லது திட்டமிடப்பட்ட மீறல்கள் நேர்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதைக் கவனமாகப் பார்ப்பதாகத் தெரியவில்லை. அது அப்படியாயிருந்தால், மீறல்கள் கொள்கை அடிப்படையிலானவை, மிக உயர்ந்த அரசியல் மற்றும் இராணுவ மட்டத்தில் கட்டளையிடப்பட்ட அல்லது பொறுத்துக் கொள்ளப்பட்டவை என ஊகிக்கப்படக் கூடியதாகவுள்ளது.

282.
தென் ஆப்பிரிக்காவின் உண்மை அறியும் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் வேறு இடங்களில் உள்ள ஆணைக்குழுக்களின் முன்மாதிரிகளின் அடிப்படையில் அதன் அணுகுறையின் மீட்கும் பகுதி அமைந்துள்ளதாக விளக்கும் அரசாங்கம், சுமார் 1,500 "கடினமான எல்...ஈ.' இன ருக்கு எதிராக மாத்திரம் குற்றம் சுமத்துவதற்கும் எஞ்சியுள்ளோருக்கு "புனர்வாழ்வு' அளிப்பதற்கான தன் விருப்பத்தையும் குறிப்பிடுகிறது. சகல விடயங்களிலும், "சிறைத்தண்டனை அற்ற தாராளமானதொரு பொறியமைப்புடன் மிகக் குறைந்த தடைகளையுடைய தண்டனை விதிக்கும் கொள்கைகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன'.

இது தொடர்பாக, சட்ட மா அதிபர் அலுவல கத்தின் சிரேஷ்ட அலுவலர் ஒருவன் தலைமையிலான நான்கு உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று சந்தேகிக்கப்படும் எல்...ஈ. உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை மீளாய்வு செய்து வருவதாக சட்ட மா அதிபர் தெவித்தார்.

283. இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரத்தையும் எல்.எல்.ஆர்.சி.
கொண்டிருந்த போதிலும் அது எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது தெளிவற்றதாகவுள்ளது.

"வெற்றியாளர்களோ தோல்வியடைந்தவர்களோ இல்லை', யுத்தத்தினால் முழுத் தேசம் துன்பத்துக்குள்ளாகியது மற்றும் "எல்லோரும் இழந்தனரே அன்றி வெற்றி பெற்றோர் எவருமிலர்' என்பதாக அரசாங்கம் அடிக்கடி அழுத்தமாகக் கூறிவந்துள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் சகலதுமடங்கிய அபிவிருத்தியினால் பாதிக்கப்பட்ட அனைவரும் நன்மையடைவதோடு, வடக்கு (மற்றும் கிழக்கின்) முழுமையான மீள்கட்டுமானம் சமாதானத்தை மீள ஏற்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்கும் என அது குறிப்பிட்டுள்ளது. தான் அதன் காரியங் களைச் செய்யும் போது, அது அதன் மக்களின் "இதயங்களையும் மனங்களையும்' தொடும் விதத்தில் "வருத்தத்தைத் தெரிவிப் பதாக' இலங்கை அரசாங்கம் தெவித் துள்ளது. ஏனைய நடவடிக்கைகளுக் கிடையே, "ஓரளவுக்கு நாட்டின் ஏனைய பாகங்களின் தேவைகளைத் தியாகம் செய்து' வடக்கிலும் கிழக்கிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்களுக்காக அது பணத்தைச் செலவு செய்து முதலீடு செய்கிறது.

284.
பழிக்குப் பழி வாங்குவதை விடுத்து மீளமைத்தல் அணுகுமுறையைத் தேர்ந் தெடுத்துள்ளது என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அப்படிச் செய்யும் போது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை அமைத்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் அனுபவத்தில் இருந்து நன்மையடைந்துள்ளதாகவும் ஆனால் அது வழக்காடலைத் தொடரவில்லை என்ற விளக்கம் பற்றியும் குறிப்பிட குழு கடமைப்பட்டுள்ளது. இவ்வனுபவங்கள் மீது சார்ந்திருப்பது வேறொரு மாதிரிக்கு வழிகோலும். தென் ஆப்பிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவக மற்றும் தனியார் பொறுப்புக்கள் பற்றிய முழுமையானதொரு புலனாய்வினை மேற்கொண்டு பல வருடங்களாக இன ஒதுக்கீடு தொடர்வதை அனுமதித்த அடிப்படைக் காரண காரியங்களை எடுத்துக் காட்டியது. தமது நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவலையும் ஈடுபட்டவர்கள் வழங்குவதற்காக முன்வந்து அவர்கள் புரிந்த குற்றங்கள் அரசியலினால் உந்தப்பட்டவையாக விருந்தால் தனித்தனியாக மன்னிப்புக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அது தேவைப்படுத்தியது. மேலும், அச்செயற்பாடு உள்ளார்ந்ததாகவே பாதிக்கப் பட்டவர்களை மையமாகக் கொண்டு மீறல்கள் பற்றி பாதிக்கப்பட்டோர் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கான மற்றும் நஷ்டஈட்டைக் கோருவதற்கான வசதியையும் ஆதரவையும் வழங்குவதாகவும் இருந்தது. கீழே கலந் துரையாடப்படுவதற்கேற்ப இலங்கையின் எல்.எல்.ஆர்.சி. தொடர்பில் விடயம் அப்படியாக இல்லை. மேலும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் உள்ள பல நாடுகளில், அவை குற்ற வழக்குத் தாக்கல் செய்வதை தடுக்கவில்லை; மாறாக ஆர்ஜன்டீனா, சிலி, கௌத்தமாலா, பெரு, சியர்ரா லியோன், மோர் லெஸ்தி மற்றும் ஏனையவற்றை உள்ளிட்ட நாடுகளில் அவற்றைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

285.
ஆரம்ப விடயமாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் அரச சார்பில் பாரிய குற்றங்களைப் புரிந்தவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தாத நடைமுறைத் தீர்மானம் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளின் தெளிவானதொரு மீறலாகும் என்பதோடு அது அனுமதிக்கப்படக் கூடிய இடைக்கால நீதிக்கான ஒரு தெரிவல்ல. சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டனைகளின் வடிவம் பற்றி சில வளைந்து கொடுக்கும் தன்மை இருந்த போதிலும், புலனாய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கை தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு உட்பட்டதல்ல என்பதோடு எல்.எல்.ஆர்.சி.
போன்றதொரு ஆணைக்குழுவினை அமைப்பது இவ்விடயத்தில் அரசாங்கத்தின் கடமையை அதனூடாகவே நிறைவு செய்வதாக இல்லை.

286. "மீளமைக்கும் நீதி' மீதான தர்க்கம் தொடர்பாக, தென் ஆப்பிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அமைக்கப்பட்ட பின் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய காலத்தின் பின் உலக நீதியின் தோற்றம் மாற்றமடைந்து, சில குற்றங்களுக்கு மன்னிப்பை வழங்கமுடியாது என்பது இப்போது பரவலாக இனங்காணப்பட்டுள்ளது. மன்னிப்புக்கள் ஏற்புடைத்தாகாது என்பதை இலங்கை இனங்கண்டுள்ள போதிலும், அதன் இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களின் பொறுப்புக்கூறல் பற்றி அது எதுவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு, எல்...ஈ.
உறுப்பினர்களுக்குச் சிறைவாசம் தவிர்த்த நடவடிக்கைகளை அது தேர்ந்தெடுக்கலாம் எனவும் பொறுப்புக்கூறல் பற்றிய ஏனைய பிரச்சினைகளை ஆராய்வதற்காக எல்.எல்.ஆர்.சி.க்குப் பொறுப்புச் சாட்டலாம் எனவும் அது வாதிடுகிறது. இது தொடர்பாக, எல்...ஈ.க்கு எதிரெதிராய் இலங்கையின் அணுகுமுறை கொலம்பியாவின் நீதி மற்றும் அமைதி பற்றிய சட்டடத்தின் (2005) ஆரம்ப நகலின் சில அம்சங்களுடன் ஒத்திருக்கிறது. அதன் அரசியல் யாப்பு நீதிமன்றத்தால் 2006 இல், நகல் சட்டத்தின் முக்கிய பிரிவுகள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவனவல்ல எனக் காணப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறைவாசம் அற்ற தீர்ப்புத் தெரிவு கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட குற்றங்களின் பாரதூரத் தன்மையுடன் ஒத்துப் போவதில்லை எனக் காணப்பட்டுள்ளது. மேலும், உண்மையின் உத்தரவாதம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு சம்பந்தமாக அச்சட்டம் வலுவாக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் யாப்பு நீதி மன்றம் தேவைப்படுத்தியது.

287.
மேலும், மீறல்களைப் புலனாய்வு செய்து குற்றங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுத்து, உண்மை மற்றும் இழப்பீட்டை உள்ளிட்ட பாதிக்கப்பட்டோருக்கான ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சர்வதேச தரங்கள் அரசாங்கங்கள் உறுதிப் படுத்துவதைத் தேவைப்படுத்துகின்றன என்பதால் "மீளமைத்தல்' மற்றும் "தண்டனை விதித்தல்' ஆகிய நீதியின் இரண்டுக்கும் இடையில் ஒரு தெரிவு உண்டென்ற யோசனை பொய்யான இரண்டாகப் பிளவு செய்யும் அடிப்படை யைக் கொண்டதாகும். குற்றத்துக்கான நீதி உரிய தண்டனைக்கு அப்பால் பல நோக்கங்களை, முக்கியமாக விதிமுறைகளை வலியுறுத்துவதன் மூலம் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி ஒரு சமூகத்தினுள் சகல பிரஜைகளுக்கும் அது ஏற்புடைத்தாகும் என்பதை எடுத்துக் காட்டி, எதிர்காலத்தில் அத்தகைய குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதை கொண்டுள்ளதால், குற்றத்துக்கான தண்டனை விதித்தல் என்ற நீதிக்கு அதனைச் சமமமாக் கொள்வது சரியல்ல.

நல்லிணக்க ஆணைக்குழு எமக்கான பதிலை அனுப்பியிருந்தது: (பாகம்) - 16

288.
அபிவிருத்தித் திட்டங்களும் மனிதாபிமான உதவியும் இழப்பீட்டுடன் சரிநிகராய் கொள்ளக் கூடாது என்பதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது. இழப்பீடுகள் அரசாங்கத்தின் சார்பில் உண்மையென்று ஒப்புக் கொள்வதைப் பிரதிநிதித்துவப் படுத்தல் வேண்டும் என்ப தோடு, மக்களுக்கு அவர்கள் உரிமைகள் மீறப் பட்டதால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொன்றாகும், மனிதாபிமானக் காரணங்களுக்காக அல்ல, அவை முக்கியமாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அரசாங்கம் வாதிடுவதைப் போன்று பயங்கரவாதத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு இயலாமல் போனதை விட அப்பால் சென்று போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பாரிய அளவில் மக்களின் உரிமைகளை அரசாங்கம் நேரடியாக மீறியதை கொண்டிருக்கலாம் என்பதை இவ்வறிக்கையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

பொறுப்புக்கூறலை மூடி மறைப்பதற்காகவன்றி மீறல்களை உண்மையாகவே ஒப்புக் கொள்வதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக மற்றும் பாதிக் கப்பட்டோருக்கான பரிகாரமாகவே இலங்கை அரசாங்கம் இழப்பீடுகளைச் செய்ய வேண்டும்.

இழப்பீடாக மற்றும் சமூகத்துக்கான இழப்பீடு போன்ற இழப்பீட்டின் ஒரு பகுதியாக அபிவிருத்தியை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்த போதிலும், தவறை ஒப்புக் கொள்ளல் இவ்வணுகு றையில் மையமாக இருத்தல் வேண்டும்.

289.
இறுதியாக, ஆர்ஜன்டீனாவில் இருந்து தென் ஆபிரிக்கா வரை மற்றும் மொரோக்கோவில் இருந்து மோ லெஸ்டி வரையிலான ஏனைய பல சமூகங்களில் பாதிக்கப்பட்டோர் குழுக்கள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களினால் பேச்சு வார்த்தை, கலந்தாலோசித்தல் மற்றும் ஆர்வம் ஆகியவற்றுக்கு அதிகரித்த இடவசதியை வழங்கும் சூழ்நிலைப் பொருத்தத்தில் இடைக் கால நீதிச் சட்டகமொன்றினுள் பொறுப்புக்கூறல் துடிப்பானதொரு சிவில் சமூகத்தினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அத்தகையதொரு முன்னெடுப்புக்கு இலங்கையில் நிலவும் நிலைமை சாதகமாக இல்லை. மேலும் அதிக அரசியல் இடவசதியைத் திறந்து கொடுத்து, சுதந்திரமான விவாதத்தை அனுமதித்து யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது என்ன நடைபெற்றது என்ற உண்மையை ஆவணப்படுத்த சுயாதீன முயற்சிகளுக்கு அனுமதியை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதபட்சம், சிறப்பாகத் திட்ட மிடப்பட்ட இடைக்கால நீதிக்கான அணுகுமுறை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளுக்கான மதிப்புக்கான வினைத்திறனுள்ள பங்களிப்பை வழங்க மாட்டாது.

இ. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு 290. 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர், 2002 ஆம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததில் இருந்து 2009 மே மாதம் யுத்தம் முடிவடையும் வரையிலான நிகழ்வுகளை பரிசீலிப்பதற்காக, 1948 இன் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக் குழுவை எல்.எல்.ஆர்.சி. நியமித்தார். செயலாளர் நாயகம் நாட்டுக் கான விஜயத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து 2009 மே 23ஆம் திகதி இலங்கை அரசாங்கம் செயலாளர் நாயகத்துக்குக் கொடுத்த உறுதிப் பாட்டின் படி, யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட பொறுப்புக்கூறல் சிக்கல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளும் பரவலான சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக மேற்கொண்ட அழுத்தத்தைத் தொடர்ந்து எல்.எல்.ஆர்.சி. அமைக்கப்பட்டது.

291. முன்னாள் சட்ட மா அதிபரான, சித்தன் ரஞ்சன் டி சில்வாவின் தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழு, அதன் வார்த்தைகளில் "இலங்கையின் சகல பிரஜைகளும், இனத்துவம் மற்றும் சமயம் எதுவாக இருந்தாலும், கௌரவத்துடனும் சுதந்திர உணர்வுடனும் வாழ்வதற்காக, யுத்தத்தின் காரண காரியங்கள் மற்றும் மக்கள் மீதான அதன் விளைவுகள் மீது கவனம் செலுத்தி தேசிய ஐக்கியத்தையும் மீளிணக்கப்பாட்டையும் மேம்படுத்துவதை எதிர்பார்க்கிறது'. மேலும் அது, "யுத்தம் கணிசமான அளவு வாழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய தனி மனிதர்களுக்கு இழப்பீட்டுக்கான ஒரு பொறித் தொகுதியினை இனங்காண்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது' கொழும்பைத் தளமாகக் கொண்ட எல்.எல்.ஆர்.சி., அதன் அமர்வுகளை 2010 ஆகஸ்ட் 11ஆம் திகதி ஆரம்பித்ததோடு, ஆரம்பத்தில் 2010 நவம்பரில் அது தனது அறிக்கையை ஜனாதிபதிக்குக் கையளிக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டது. விரைவில், "ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான தொடர்ச்சியான பொது மக்கள் வேண்டுகோள் மற்றும் மேலும் பல மாவட்டங்கள் அத்துடன் இடங்களுக்கு விஜயம் செய்ய வேண்டி ஏற்பட்டது' என விபரித்த ஒரு நிலையை அது எதிர் கொண்டது. எனவே, அதன் ஆணையை நீடிக்கு மாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டது. அதன் விளைவாக, 2010 நவம்பல், இலங்கை ஜனாதி பதி 2011 மே 15ஆம் திகதி வரை அதன் ஆணையை மேலுமொரு ஆறு மாதத்துக்கு நீடித்தார். மே 2011க்கு அப்பாலும் எல்.எல்.ஆர்.சி.
நீடிக்கப்படுவதற்கான குறிகள் காணப்படுகின்றன.

292.
யுத்தத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கு அதன் உள்நாட்டுப் பதிலளிப்புக்கான முக்கிய மானதொரு பொறித்தொகுதி எல்.எல்.ஆர்.சி. என இலங்கை அரசாங்கம் அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளது. சர்வதேச தரங்கள் வழங்கிய சட்டகத்தைப் பிரயோகித்து, அதன் தோற்றம் மற்றும் இன்றுவரையிலான அதன் செயற்பாடுகள் மூலம் எல்.எல்.ஆர்.சி. எந்த அளவுக்குப் பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியாகவுள்ளது என்பதை குழு மதிப்பீடு செய்துள்ளது. குறிப்பாக, அடிப்படை சிக்கல்களான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எல்.எல்.ஆர்.சி.யின் திறனை அது கவனத்துக்கு எடுத்துக் கொள்கிறது.

293. ஆரம்பத்தில் இருந்தே, அதன் செயற்பாடுகளை மேலும் சிறப்பாக அறிந்து, சிக்கல்கள் மற்றும் கேள்விகளை நேரடியாக ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி மற்றும் சர்வதேச சிறந்த பழக்க வழக்கங்கள் அத்துடன் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவை பற்றி எல்.எல்.ஆர்.சி. உடன் கலந்து செயற்பட குழு நாடியது. பலறை முயற்சி செய்தும் அரசாங்கத்துடனான நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு எல்.எல்.ஆர்.சி.யுடன் தொடர்பு கொள்ள அதற்கு முடியவில்லை. எனவே, மாறாக, 2011 ஜனவ 28ஆம் திகதி ராஜதந்திர வழிகள் மூலம் கேள்விகள் தொகுதியொன்றை குழு எல்.எல்.ஆர். சி.க்குச் சமர்ப்பித்தது (இணைப்பு 2.14). 2011 பெப்ரவ 16ஆம் திகதியிடப்பட்ட செயலாளர் நாயகத்துக்கான ஒப்பமிடப்படாத மூன்றாம் தரப்பு ராஜதந்திரக் குறிப்பொன்று மூலம், இலங்கையின் நிரந்தர தூதுக்குழு, அக்கேள்விகள் பலவற்றுக்கான பதிலை, ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பொன்றின் மூலம் அனுப்பி வைத்தது (இணைப்பு 2.15)

294.
இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டு எல்.எல்.ஆர்.சி.யின் செயற்பாட்டை நேரடியாக அவதானிப்பதற்கு குழுவினால் சாத்தியப்படவில்லை என்ற போதிலும், அரசாங்கத்தின் பதிலுக்கு மேலதிகமாக, குறிப்பாக எல்.எல்.ஆர்.சி. அதன் இணையத்தளத்தில் பகிரங்கமாகப் பிரசுரித்த அமர்வுகளின் எழுத்துப் படிகளைப் பெற்றுக் கொள்ளவும், ஏனைய அரச மூலங்களில் இருந்து இலக்கியங்களுக்கான பிரவேசத்தைப் பெற்றுக் கொள்ளவும் குழுவுக்கு முடிந்தது. அது தேசிய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளையும் தேசிய மற்றும் சர்வதேச சிவில் சமூகத்தின் சாட்சியத்தையும் எல்.எல்.ஆர். சி.யுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்களின் விளக்கங்களையும் பகுப்பாய்வு செய்தது.

295.
இது போன்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழுவாக எல்.எல்.ஆர்.சி. இல்லை. எல்.எல்.ஆர்.சி. இனை உள்ளிட்ட இவ்வாணைக்குழுக்கள் விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (1948) கீழ், பொதுச்சேவைகளின் நிருவாகத்தை மற்றும் அரச ஊழியர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கானதொரு சட்டகத்தை வழங்குவதற்காகவன்றி, அப்படியாக மனித உரிமைகள் மீறல்கள் மீது நடவடிக்கைகை எடுப்பதற்கான பொறித்தொகுதியொன்றாக அமைக்கப்பட வில்லை. ஆயினும், சட்டத்தின் பொதுவான மக்கள் பாதுகாப்பு மற்றும் நலன்புரி உட்பிவு மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான சட்ட அடிப்படையை வழங்குவதற்குப் போதுமானதாக உள்ளது. இச்சட்டம் ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரங்களை வழங்குவதோடு, அவை கடந்த காலத்தில் ஆணைக்குழுக்களைக் கட்டுப்படுத்தி பாரிய முறையில் அவற்றின் சுயாதீனத் தன்மையையும் தாக்கத்தையும் பாதித்துள்ளது.

296.
பாரிய மற்றும் திட்டமிடப்பட்ட மனித உரிமைகளின் துஷ்பிரயோகம் பற்றிய பொறுப்புக் கூறலுக்கான வேண்டு கோள்களுக்குப் பதில் அளிக்குமுகமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்ச்சியாக சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடியவை என்ற அனுபவம் உண்டு.

30 வருடக் காலப்பகுதியொன்றில் 1977 சன் சோனி ஆணைக்குழுவுடன் ஆரம்பித்து, இவ் வாணைக்குழுக்கள் பல தவறுகள் காரணமாக அவற்றின் நடவடிக்கைகளைச் சரிவரச் செய்ய முடியாமலிருந்துள்ளன. இப்பாரிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், சில ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிவதில் ஓரளவு மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய முக்கியமான பந்துரை களைச் செய்துள்ளன. இருந்தபோதிலும், குழு முன்னிலையில் உள்ள தகவலின் படி, 1977 இல் இந்த ஆரம்பப் பொறித்தொகுதி ஆரம்பிக்கப்பட்ட 33 வருடக் காலப்பகுதியில், ஆணைக்குழுவொன்றின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் தனி நபர் அல்லது அமைப்பு மட்டத்தில் மிகக் குறைந்த அளவிலான பொறுப்புக்கூறலை மாத்திரமே ஏற்படுத்தியுள்ளன. சர்வதேசத் தரங்களுடன் ஒத்திருக்கும் விதத்தில் பொறுப்புக் கூறல் விடயங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றன் பின் ஒன்றாக பதவிக்கு வந்த அரசாங் கங்கள் காட்டிய அரசியல் மனவுறுதிப்பாடின்மை இந்த முன்னைய செயற்பாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய முக்கிய பாடங்களாக வுள்ளன. எல்.எல்.ஆர்.சி. எவ்வளவு தூரத்துக்கு உண்மையான பொறுப்புக் கூறலுக்கான பங்களிப்பை வழங்குவதற் கான நிலைச்சக்தியைக் கொண்டிருப்பது என் பதை மதிப்பீடு செய்வதற்கு இந்த கடந்த கால அனுபவம் தோதான தாயிருக்கிறது.

1. எல்.எல்.ஆர்.சி.இன் ஆணை

297.
பயனுறு பொறுப்புக்கூறல் பொறித்தொகுதியாகச் எல்.எல்.ஆர்.சி. இன் நிலைத்தகவினை மதிப்பீடு செய்வதற்கு அதன் ஆணை முக்கிய ஆக்கக்கூறுகளை வழங்குகிறது. 2010 மே 15ஆம் திகதி ஜனாதிபதி ஆணையில் குறித்துள்ளபடி, எல்.எல்.ஆர்.சி. "2002 பெப்ரவ 21 ஆம் திகதி மற்றும் 2009 மே 19ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலான பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அதாவது: (டி) 2002 பெப்ரவ 27ஆம் திகதி அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்கு வழிகோலிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் 2009 மே 19ஆம் திகதி வரை அதன் பின்னர் நிகழ்ந்த நடவடிக்கைளின் தொடர்; (டிடி) இது தொடர்பாக ஏதும் ஒரு நபர், குழு அல்லது நிறுவாகம் நேரடியாக அல்லது மறைகமாக ஏற்கவேண்டிய பொறுப்பு; (டிடிடி) மீண்டும் நேராமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நாம் அந்நிகழ்வில் இருந்து மற்றும் அவற்றுடன் சார்ந்த அவதானங்கள் தொடர்பில் கற்கக் கூடிய பாடங்கள்; (டிதி) அந்நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட ஏதும் நபர்கள் அல்லது அவர்களைச் சார்ந்திருப்போர் அல்லது அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டினை செயற்படுத்தக் கூடிய முறைமைகள்; (தி) அத்தகைய அவதானங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நேர்வதைத் தடுப்பதற்காக, சகல சமூகங்களுக்கிடையேயும் மேலும் தேசிய ஐக்கியம் அத்துடன் மீளிணக்கப்பாட்டை மேம்படுத்து வதற்காக மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவக, நிருவாக மற்றும் சட்டவாக்கு நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகள்.; 298. அதன் ஆணைக்கு எவ்வாறு அது விளக்கமளிக்கிறது என்பதை எல்.எல்.ஆர்.சி. தெளிவாகக் குறிப்பிடவில்லை என்பதோடு, அதன் முன் ஆஜராக விரும்புவோருக்கு இவ்விட யத்தில் ஏதும் வழிகாட்டல்களை வழங்கவுமில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்வியைத் "தொடர்ந்து வந்த நிகழ்வுகளின் தொடர்' பற்றி ஆராய்வதற்காக தெளிவாக எல்.எல்.ஆர்.சி.
பணிக்கப்பட்ட போதிலும், அதன் ஆணையின் விதிகள் பொறுப்புக்கூறலை பொதுவான சொற்களில் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்களைக் குறிப்பாகவோ தெளிவான முறையில் அணுகவில்லை.

299.
எல்.எல்.ஆர்.சி.இனைக் குழு நேரடியாகச் சந்திக்க முடியாதிருந்ததால், எல்.எல்.ஆர்.சி. பற்றிய குழுவின் கேள்விகளுக்கு ஜனாதிபதிச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்ட அரசாங்கத்தின் எழுத்து மூலமான பதில்கள் மற்றும் பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது சட்ட மா அதிபர் இவ்விடயங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கு வழங்கிய கருத்துக்கள் மீது குழு மாறாகத் தங்கியிருந்தது. உண்மையிலேயே யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கான ஆணை எல்.எல்.ஆர்.சி.க்கு வழங்கப்பட்டுள்ளதாக விளக்கிய சட்ட மா அதிபர், பொறுப்புக்கூறல் பற்றிய கருத்து பொறுப்புடன் சமமானதொன்றாகும் என உறுதிப்படுத்தி ஆணைக்குழு அத்தகைய ஏதும் விடயங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெவித்தார்.

ஆயினும், சர்வதேசத் தரங்கள் மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மீறலுக்குப் பொறுப்பு எனக் காணப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விளைவுகளை அமர்த்துவதன் மூலம் பொறுப்புக்கூறல் முன் செல்வதால், இரு மன வுருக்களும் நன்கு வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. பொறுப்பினைச் சாட்டுவது பொறுப்புக் கூறலுக்கு நிலைச்சக்திகொண்ட முக்கியமான முன் நிபந்தனையாக இருந்த போதிலும், மனித உரிமைகள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரிய மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய கடமையிலிருந்து அது ஒரு அரசாங்கத்தை விடுவிக்காது.

300.
தென் ஆபிரிக்காவின் .ஆர்.சி. மற்றும் ஐக்கிய இராஜதானியின் ஈராக் பற்றிய விசாரணை (சில்கொட் விசாரணை) ஆகியவற்றின் அனுபவத்தை அரசாங்கம் பெற்றதாகக் குறிப்பிட்ட சட்ட மா அதிபர், எனவே அவ்வமைப்புக்களுக்குச் சமமானதொன்றாக எல்.எல்.ஆர்.சி. கணிக்கப்பட வேண்டும் என்றார். ஆயினும், இரு விடங்களிலும் முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன. மேலே கூறப்பட்டது போன்று, எல்.எல்.ஆர்.சி.க்கு முற்றிலும் மாறுபட்டதாக, சம்பந்தப்பட்ட ஆட்களின் மற்றும் நிறுவனங்களின் அடையாளத்தை உள்ளிட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்களைப் புலனாய்வு செய்வதற்கு தென் ஆபிரிக்க .ஆர். சி.க்குத் தெளிவானதொரு ஆணை வழங்கப்பட்டி ருந்தது. இதுபோன்று சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்ட சிலி மற்றும் கென்யா போன்ற ஏனைய உதாரணங்கள் உள்ளிட்ட, ஏனைய நாடுகள் அபிவிருத்தி செய்த சிறந்த பழக்கங்கள் அவர்களது ஆணைக்குழுக்களுக்கு பாரிய மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் மீறல்களைப் புலனாய்வு செய்யுமாறு ஆணையை வழங்கியிருந்தன.

--தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும்..

(101-200) பாகம் 2 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/101-200-2.html

(1-100) பாகம் 1 ஐப் படிக்க .. http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.

Wednesday, August 10, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (101-200) - பாகம் 2

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (101-200) - பாகம் 2 

(1-100) பாகம் 1  ஐப் படிக்க ..  http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html 

(ஷரத்துகள் 101-200) - பாகம் 2 

101.
அச்சமயம், "பொதுமக்கள் காயமடைவதைத் தடுப்பதற்காக எம்மிடையே காயமேற்படுகிறது' என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

"இவ்விடயம் எமக்கு மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இல்லாவிடின், சரமாரியாக குண்டுகளை வீசி எம்மால் அப்படியே முன்னேறிச் சென்றிருக்க முடியும்.' பெப்ரவாரி 25 ஆம் திகதியும் அதன் பின்னர் ஏப்பிரல் 27ஆம் திகதியும், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்கள் மீது கன ரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் களத்தில் நடப்பது இதற்கு மாற்றமானதாகவே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பீரங்கிகளைப் பிரயோகிப்பது இலங்கை இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையின் அடிப்படை அணுகுமுறையாக இருந்தது.

வெற்றி நெருங்கியதும், இப்பழக்கம் கைவிடப்படவில்லை மாறாக எல்.ரி.ரி.ஈ யினை நகரவிடாது அது அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உள்ள பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையிலும் அது தொடர்ந்தது. தீவிர ஷெல்வீசசு காரணமாக அப்பிரதேசத்தில் இருந்து தப்பியோட பல பொதுமக்கள் முயற்சித்த போது, பொதுமக்கள் அங்கிருந்து செல்வதற்கு அவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் இன்னுமொரு அரசாங்க நோக்கம் நிறைவேறுவதாக அமைந்தது.

தொடர்ந்து யுத்த சூன்ய வலயத்தை இலக்கு வைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் பீரங்கிக் குண்டுப் பிரிவுகள் தக்கவாறு அமைத்துக் கொள்ளப்படுவதை அரசாங்கத்தின் அறிவிப்புக்கள், செய்மதிப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ யினரிடம் குறைவான கன ரக ஆயுதங்களே எஞ்சியிருந்ததோடு, அவற்றைப் பாவிப்பதற்கான இடவசதியும் குறைவாகவே இருந்தது.

102.
சிறிய கடலோரப் பகுதியில் நெரிசல் அதிகமாகி அங்கு வாழக்கூடிய இடவசதியும் மிகக் குறைவாகி இருந்தது.

இடம்பெயர்ந்தோர் தம் கூடாரங்களை அமைத்திருந்த பெரும்பாலான பிரதேசம் நீர் கசியும் கடலோர மணல் தரையாக இருந்ததோடு அது குடியிருப்புக்கு ஏற்றதாகவும் இருக்கவில்லை, அத்தோடு, இடம்பெயர்ந்தோர் அங்கு தம் பாதுகாப்புக்காக தற்காலிக பதுங்கு குழிகளை அமைத்துக் கொள்வதும் கஷ்டமாகவே இருந்தது.

அக்கால கட்டத்தில் இடம்பெயர்ந்தோரின் அன்றாட வாழ்க்கை பதுங்கு குழிகளிலேயே கழிந்ததோடு, சிலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தம் இருப்பிடங்களுக்கு மேலே வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர். நன்னீர் அரிதாக இருந்ததோடு உணவுக்கும் தட்டுப்பாடு நிலவியதால் சிலர் பசியினால் மரணித்தனர். பருவ கால மழை ஆரம்பித்ததும் பல பதுங்கு குழிகளில் நீர் நிறைந்து மக்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்தது.

7. புதுமாத்தளன் ஆஸ்பத்தி மீதான ஷெல்லடித் தாக்குதல்

103.
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தி புதுமாத்தளனுக்கு இடம் பெயர்ந்தபோது, "வன்னியின் மீட்கப்படாத பிரதேசங்களில் இப்போது எந்தவொரு ஆஸ்பத்தியும் செயற்படவில்லை' என அரசு அறிவித்தது.

இருந்தபோதிலும், இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில், புதுமாத்தளை உள்ளிட்ட மூன்று தற்காலிக ஆஸ்பத்திரிகளும், வேலாயன்மடத்தில் சிறிய வைத்தியசாலையொன்றும் முள்ளிவாய்க்காலில் ஒரு ஆஸ்பததிரியும் இருந்தன. அவற்றின் அமைவிட எல்லைகள் அனைத்தும் அரசாங்கத்துக்குத் தெரிந்தே இருந்ததோடு, அவற்றின் மீது சின்னங்கள் இடப்பட்டு அவை தெளிவாகவே குறிக்கப்பட்டிருந்தன. அங்கு அரசாங்க வைத்தியர்களே தொடர்ந்தும் சேவையாற்றி வந்தனர். புதிதாகக் காயமடைந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் நிரம்பி இருந்தனர்.

அடிப்படை மருத்துவப் பொருட்களை வன்னிக்குள் அரசாங்கம் அனுமதிக்காததால், புதுமாத்தளன் ஆஸ்பத்திரியின் நிலைமை மிக மோசமாக இருந்ததோடு, அங்கு காயமடைந்தோரின் உறுப்புக்கள் கசாப்புக் கடைக் கத்திகளைக் கொண்டே மயக்க மருந்து இன்றி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

சுகாதாரத் துவாய்கள் மற்றும் பருத்தித் துணிகள் புண் கட்டுத் துணியாகப் பாவிக்கப்பட்டன. போத்தல்கள் மரங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டு பாரிய காயமடைந்தோர் மரங்களுக்குக் கீழே படுக்க வைக்கப்பட்டனர். அங்கிருந்த சில வைத்தியர்களின் கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் மரணித்தனர். சடலங்கள் தினம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் குவித்து வைக்கப்பட்டன.

104.
2009 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் ஷெல் வெடிகள் விழுந்ததால் குறைந்த பட்சம் 16 நோயாளிகள் அங்கு கொல்லப்பட்டனர். சாலையில் அமைந்திருத்த இலங்கை இராணுவத்தின் தளங்களில் இருந்தே ஷெல் வெடிகள் வந்தன. ஆனால், பின்னர் ஏரிக்கு அப்புறம் இருந்த இலங்கை இராணுவ நிலைகளில் இருந்தும் (அங்கிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு ஆஸ்பத்திரி தெளிவாகப் பார்வைக்குத் தெரிந்த போதிலும்) ஷெல் வெடிகள் செலுத்தப்பட்டன.

சில காயமடைந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததோடு அவர்கள் தனியானதொரு பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பெப்ரவரியிலும் மார்ச்சிலும் புதுமாத்தளன் ஆஸ்பத்திரி பலமுறை ஷெல் தாக்குலுக்கு உள்ளாகியது. மார்ச்சு 27ஆம் திகதி அளவில் ஆர்பிஜிக்கள் ஆஸ்பத்திரி மீது செலுத்தப்பட்டபோது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு விளைந்த சேதத்துக்குப் புறம்பாக, சத்திர சிகிச்சை கூடம், தற்காலிக வார்ட்டுக்கள் மற்றும் கூரையும் சேதமடைந்தன.

105.
தினம் பல உயிர்களைப் பலிகொண்டு பல குடும்பங்களை நிர்க்கதியாக்கும் ஷெல் வெடிகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று வந்த போதிலும், ஆளில்லா விமானம் மூலம் இனங் கண்டு கொள்ளக் கூடிய பொதுமக்கள் திரண்டிருந்த இடங்கள் மீது இலங்கை இராணுவம் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது. மார்ச் 25ஆம் திகதி அம்பலவன் பொக்கணை மீதான பல்குழல் ரொக்கட் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 140 பேர்கள் உயிரிழந்னர்.

2009 ஏப்பிரல் 8ஆம் திகதி, பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர் ஒழுங்கு செய்திருந்த பால் மா விநியோக வரிசையொன்றில் இருந்த அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அம்பலவன்பொக்கணையில் ஷெல் வெடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இறந்த சில பெண்கள் தமது குழந்தைகளுக்குப் பால் மாவைப் பெற்றுக் கொள்ளும் அட்டைகளைக் கைகளில் வைத்திருந்தனர்.

8. ஐ.சிஆர்சி கப்பல்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முட்டுக்கட்டைகள்

106.
2009 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் கரையோரப் பகுதியிலிருந்து காயமடைந்த பொதுமக்களை கப்பல் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வன்னியில் உள்ள பொதுமக்களின் கஷ்டங்களைக் குறைப்பதற்காக ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் முன்னணிப் பங்களிப்பை வழங்கியது.

இறுதி மாதங்களின் போது மொத்தம் 16 ஐசிஆர்சி கப்பல்கள் யுத்த வலயத்துக்கு வந்து சென்றன. புதுமாத்தளனில் இருந்து ஐ.சி.ஆர்.சி இன் சர்வதேச ஊழியர்கள் முதலாவது கப்பல் மூலம் அங்கிருந்து சென்ற போதிலும், ஒவ்வொரு தடவையும் கப்பல்கள் வந்தபோது, அவர்கள் மீண்டும் சில மணி நேரங்கள் கரையில் இருந்தனர்.

ஐ.நா. ஊழியர்களை அரசாங்கம் கப்பலில் இருக்க விடவில்லை.

107.
காயமடைந்த பொதுமக்களுக்கும் அவர்களைச் சார்ந்த சிலருக்கும் ஐ.சி.ஆர்.சி. கப்பல்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்து செல்ல அனுமதிச் சீட்டுக்களை எல்.ரி.ரி.ஈ வழங்கிய போதிலும், கரையில் இருந்து 1 கிலோ மீற்றருக்குள் கப்பல்களை வர விடாததால் காயமடைந்தோரை சிறு படகுகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

காயமடைந்தோர் கரையில் வசையாக நிறுத்தப்பட்ட போது பல தடவை இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இலங்கை இராணுவத்தினால் செலுத்தப்பட்ட ஷெல் வெடிகள் சில சமயங்களில் கடலில் ஐ.சி.ஆர்.சி. கப்பல்களுக்கு அருகில் வந்து விழுந்தன. ஏப்பிரல் 22ஆம் திகதி அளவில் செல் வெடி காரணமாக மாலுமி கப்பலை ஆழமான இடத்துக்குச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

108.
உணவுப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் ஒரே வழியாக ஐசிஆர்சிக் கப்பல்கள் இருந்த போதிலும், ஏற்றி வருவதற்கு அவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்கவில்லை. யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை படுமோசமாக மாறிய நிலையில் கரைக்கு வந்த ஐசிஆர்சி ஊழியர் ஒருவரைச் சூழ்ந்து கொண்ட அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்கள் தம்மை வன்னியில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

எல்.ரி.ரி.ஈ அக்கூட்டத்தை முரட்டுத்தனமாகக் கலைத்தது. இறுதி ஐ.சி.ஆர்.சி கப்பல் 2009 மே 9 ஆம் திகதி வன்னிக்கு வந்தது. 2009 மே 15 ஆம் திகதி மேலுமொரு கப்பல் வந்த போதிலும் யுத்தத்தின் தீவிரத் தன்மை காரணமாக திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. மொத்தம் 14,000 காயமடைந்தோரையும் அவர்கள் உறவுகளையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்களில் இருந்து ஐ.சி.ஆர்.சி. அகற்றியதோடு சுமார் 2,350 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களையும் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்து வந்தது. எல்.ரி.ரி.ஈ. அதன் உறுப்பினர்களை யுத்த களத்திலிருந்து சிகிச்சைக்காகச் செல்ல அனுமதிக்காததால், பாதுகாப்பாக அகற்றப்பட்ட அனைவரும் பொது மக்களாகவே இருந்தனர்.

9.முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல்

109.
2009 ஏப்பிரல் ஆரம்பத்தில், ஆனந்தபுரத்தில் நேர்ந்த தோல்விக்குப் பின், எஞ்சியிருந்த எல்...ஈ. யின் படைப்பிவுகள் அனைத்தும் போல கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கின.

சூன்ய வலயத்தினுள் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல் உக்கிரமடைந்தது.

இறுதிக் கட்டம் வரை மோதல் முழுவதிலும் அது மோட்டார்களைச் சார்ந்திருந்த போதிலும், பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களை விடுவிப்பதற்காக "மனிதாபிமான நடவடிக்கை' ஒன்றை மேற்கொள்வதாக அக்கட்டத்தில் அரசாங்கம் கூறியபோதிலும், அது பல்குழல் குண்டு செலுத்திகள் மற்றும் விமானக் குண்டு வீச்சு போன்ற கன ரக ஆயுதங்களைத் தொடர்ந்து பிரயோகித்து வந்தது.

2009 ஏப்பிரல் 19 ஆம் திகதி, புதுமாத்தளன் மற்றும் அம்பலன்பொக்கணை ஆகியவற்றுக்கு இடையிலான பிரதேசம் தீவிர ஷெல்லடித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிவு, யுத்த சூன்ய வலயத்தினூடாக எல்.ரி.ரி.ஈ யின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முதற்தடவையாகக் கரையோரப் பகுதியை அண்மியது.

இதனால் யுத்த சூன்ய வலயம் இரு கூறாக்கப்பட்டு பொது மக்களிடையே பலத்த சேதம் ஏற்பட்டது. யுத்த சூன்ய வலயம் இவ்வாறாக கூறுபட்டதை அடுத்து, ஏற்கனவே தப்பியோடிய சுமார் 70,000 பேர்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு 100,000 பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச் செல்ல முடிந்தது. குறைந்த பட்சம் மேலுமொரு 130,000 பொதுமக்கள் தென் பகுதியில் சிக்குண்டு இருந்தனர்.

(43)
110.
யுத்த சூன்ய வலயத்தின் வட பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர், யுத்த வலயத்தில் முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்தி மாத்திரமே எஞ்சியிருந்த ஒரேயொரு ஆஸ்பத்திரியாக இருந்தது. சீருடை அணிந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் இருக்கவில்லையென்பதோடு, ஒருவரும் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வரவில்லை. இப்போது நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. ஆஸ்பத்தியில் நான்கு வைத்தியர்கள் இருந்ததோடு அங்கு இடத்துக்கு ஏற்றவாறு இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள் செயற்படுத்தப்பட்டன.

பாரிய தலைக் காயங்கள் மற்றும் ஏனைய உயிரைப் பறிக்கக் கூடிய காயங்கள் உள்ளிட்ட நோயாளிகள் நோவு தணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தார்களே அன்றி அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிய எண்ணிக்கையிலான கட்டில்கள் மாத்திரமே இருந்ததால், காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு முன்பாகவும் மண் தரையிலும் தனியாக அல்லது தம் உறவுகளின் அரவணைப்பில் இருந்தனர்.

புண்களைக் கட்டுவதற்கான துணிகள் கிடைக்காததால், பழைய துணிகள் அல்லது சாறிகள் புண்களைக் கட்டுவதற்காகப் பாவிக்கப்பட்டதோடு, சுத்தமின்மையினால் நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக இருந்தது. அநேகமாக சத்திர சிகிச்சை மயக்க மருந்து இன்றி பாரிய கத்திகளால் மேற்கொள்ளப்பட்டதோடு துண்டிக்கப்பட்ட உறுப்புக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக இரத்தத்துக்கான தட்டுப்பாடு நிலவியதால், மீண்டும் துணியால் வடிகட்டிப் பாவிப்பதற்காக நோயாளியின் இரத்தம் பைகளில் சேகரிக்கப்பட்டது.

111.
பலதடவை ஆஸ்பத்திரி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியின் பிறிதொரு இடத்துக்கு ஆர்டிஎச்எஸ் இடம்பெயா்ந்த போதிலும், அங்கு கூட தெளிவான சின்னங்கள் இடப்பட்டிருந்த போதிலும், ஆஸ்பத்திரி இலங்கை இராணுவத்தின் ஷெல்லடித் தாக்குதலுக்கு ஆளாகி பலர் உயிரிழந்தனர். இரண்டாவது ஆஸ்பத்திரியிலும் நிலைமைகள் மோசமாக இருந்ததோடு இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல் காரணமாக சில ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள்.

வைத்தியர்களின் மறுப்புரைகள் உண்மையை பாதிக்காது: ஐநா நிபுணர் குழு அறிக்கை(பாகம்) - 07

(44)
10. எல்...ஈ. யினால் பொதுமக்கள் கொல்லப்படுதல் மற்றும் கட்டாய ஆட்சேர்த்தல்

112.
இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தப்புவதற்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் முயன்றபோது அதனை நிறுத்துவதற்கு மேலும் அதிக வன்முறைகளை எல்.ரி.ரி.ஈ.கடைப்பிடித்தது.

சில எல்.ரி.ரி.ஈ.உறுப்பினர்கள் தப்பிச் செல்லும் பொதுமக்களை போகவிட்டபோது ஏனையோர் ஏகே47 துப்பாக்கி கொண்டு அவர்களை நோக்கிச் சுட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பாரபட்சம் காட்டாமல் கொன்றனர்.

தப்பிச் செல்வதற்காக முனைந்த இடம்பெயர்ந்தோர் எப்படியாவது தப்பிச் சென்று இலங்கை இராணுவத்தினர் அணிகளைப் போய் அடைவதற்காக குழந்தைகளையும் மற்றும் பொருட்களையும் தூக்கிக் கொண்டும் சில வேளைகளில் பயத்தினால் அவற்றைக் கீழே போட்டு விட்டும் ஓடினர்.

சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர், மேலும் சிலர் ஆழமற்ற நீரில் தடுமாறினர் அல்லது மிதி வெடிகளில் சிக்குண்டு படுகாயமடைந்தனர். சிறுவர்கள் மற்றும் சிலர் ஏரியில் மூழ்கி இறந்தனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் அது கணிசமானதாக இருந்ததோடு யுத்தம் தீவிரமடைந்த போது அவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

113.
புது அணியினரின் தேவை அதிகரிக்கவே, எல்.ரி.ரி.ஈ மீண்டும் அதன் பலவந்தமாக ஆட்சேர்க்கும் கொள்கையைத் தீவிரப்படுத்தி பாதுகாப்பு முன் அரண்களில் நிறுத்துவதற்காக இளைஞர்களையும் வயது குறைந்தோரையும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.

ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, முன்னாள் திருகோணமலை அரசியல் துறைத் தலைவரான எழிலனின் தலைமையில் எல்.ரி.ரி.ஈ யினர் நூற்றுக்கணக்கான இளைஞர்களை வலையர் மடம் கோயிலில் இருந்து நிர்ப்பந்தமாக அணியில் சேர்த்து முள்ளிவாய்க்காலுக்கு அவர்களை பேருந்துகளில் எடுத்துச் சென்றனர்.

பெற்றோர் தம் பிள்ளைகளை யுத்தத்துக்காக எடுத்துச் செல்ல வேண்டாம் என அழுது மன்றாடிய போதிலும் அது பலனளிக்கவில்லை.

114.
ஏப்ரல் 26 ஆம் திகதி, ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் ஒன்றை எல்.ரி.ரி.ஈ. பிரகடனப்படுத்திய போதிலும் அதனை ஒரு "கோமாளிக் கூத்து' என அரசாங்கம் நிராகரித்து விட்டது. 2009 ஏப்ரல் 27ஆம் திகதி, எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்துவதாகவும் இரண்டாவது தடவையாகவும் அரசாங்கம் அறிவித்தது.

2009 மே 8 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தின் தெற்கில் மிகச் சிறிய பிரிவொன்றை மூன்றாவது யுத்த சூன்ய வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியது..

11.இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்தின் ஷெல் வீச்சு (மே 13-18)

115.
மே 13ஆம் திகதி, 58ஆவது படை அணி கிழக்குத் திசையில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறுவதற்காக அதன் பயணத்தைத் தொடர்ந்ததோடு, 53ஆம் படைப்பிரிவு ஏரியை நோக்கி ஏ35 வீதியினூடாக கிழக்கு நோக்கி முன்னேறியது.

55ஆவது படைப் பிரிவின் அணியினர் புதுமாத்தளனில் இருந்து மேலும் தெற்கு நோக்கிப் படையெடுத்தனர். அத்தருணத்தில், அரசாங்கம் 10,000 பேர்கள் மாத்திரமே அங்கு இருந்தனர் எனக் கூறிய போதிலும், மூன்று சதுர கிலோமீற்றர் பகுதியொன்றில் 100,000 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என ஐ.நா. மதிப்பீடு செய்கிறது.

(45)
116.
யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது.வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில், இரத்தம் கசியும் பலத்த காயங்களுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் படுத்திருந்தனர். கடும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கிடையே இறந்தவர்களும் காணப்பட்டனர்.

நோயாளிகளைக் கவனித்து வந்த உறவினர்களும் கூட உணவுச் சத்தின்றி நலிந்து போயிருந்தனர்.

9. இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்கள் மரணங்கள், மே 2009லம் குழுவுக்குப் புகைப்படைப்பிடிப்பாளர் சமர்ப்பித்தது.

117.
ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்து எதுவித மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தில் ஷெல் தாக்குதல் இருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்குண்டிருந்த போதிலும், எல்.ரி.ரி.ஈ யின் சிரேஷ்ட தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை நெருங்க நெருங்க இலங்கை இராணுவத்தின் தாக்குதல் ஒரு புது மட்டத்திலான தீவிரத்தை அடைந்தது.

எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவமோ தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைத் தாக்குதல்களை உள்ளிட்ட உயிர்துறக்கும் தாக்குதல்களில் தம் உறுப்பினர்களை ஈடுபடுத்தினர்.

118.
மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தின் இட நெருக்கடி காரணமாக பல பக்கங்களில் இருந்து வரும் ஷெல் வீச்சுக்களில் இருந்து தப்புவதற்காக பொதுமக்களுக்கு எந்தவொரு மறைவிடமும் இருக்கவில்லை. ஷெல்வெடிகள் சரமாறியாகப் பொழிந்ததோடு வேட்டுக்கள் பறந்து கொண்டிருந்தன. பலர் இறந்ததோடு, எதுவிதப் பதிவுமின்றி அவர்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டார்கள்.

கரும்புகையும் சடலங்களில் இருந்து வரும் வாடையும் காற்றில் நிறைந்திருந்தது. சிலர் தம் குழந்தைகளின் உணவுக்காக அல்லது காயமுற்ற மற்றும் குற்றுயிராகக் கிடப்பவர்களுக்கு உதவி கோரி மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அக்காட்சி நரகத்தை ஒத்ததாக இருந்தது.

(46)
119.
காயமடைந்தோர் மற்றும் இறந்தவர் பற்றிக் கவனிப்பதற்காக ஷெல் தாக்குதலை நிறுத்துமாறு உதவி அரசாங்க அதிபரும் வைத்தியர்களும் பல முறை அவசரத் தொலைபேசி அழைப்புக்களை விடுத்த போதிலும், இலங்கை இராணுவம் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

2009 மே 14ஆம் திகதிக்குப் பின்னர், ஷெல் வீச்சின் கடுமை காரணமாக வைத்தியர்கள் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லையாதலால் அதனை மூட வேண்டியேற்பட்டது. அகற்றப்பட முடியாத பல நோயாளிகள் அங்கு அப்படியே கைவிடப்பட்டனர். உயிர் பிழைத்த அனைவரும் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான இடங்களில் முடங்கியிருந்தனர்.

உணவு சமைப்பது முடியாத காரியமாக இருந்ததோடு, மலசலம் கழிக்க வெளியே போனால் கூட உயிருக்கு ஆபத்து நேரும் நிலையே இருந்தது. சில பொதுமக்கள் கூட்டமாக வெளியேற முயன்றபோது எல்.ரி.ரி.ஈஅவர்களை நோக்கிச் சுட்டு ஷெல் வெடிகளை ஏவினர். தப்பியோடியவர்களை தனித்தனி இலங்கை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவினர்.

120.
மே 15ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ. தம் தொடர்பாடல் சாதனங்களை தகர்த்து நொறுக்கினர். மே 16ஆம் திகதி பாரியதொரு அதிர்வெடி எல்.ரி.ரி.ஈ பிரதேசத்தைக் குலுக்கியதோடு பல இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகள் நெருப்பினால் அழிந்தன.

அதே தினம் இலங்கை இராணுவத்தின் 58ஆவது மற்றும் 59ஆவது படைப்பிரிவுகள் கரையோரத்தில் இணைந்தனர். அப்போது இராணுவக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா எல்.ரி.ரி.ஈ க்கு எதிரான வெற்றியைப் பிரகடனப்படுத்தினார்.

53ஆவது படைப்பிரிவு தெற்கு நோக்கி அதன் பயணத்தை நந்திக் கடல் ஏரியினூடாகக் தொடர்ந்தது. உயர்பீடத் தலைவர்கள் பலரை உள்ளிட்ட எல்.ரி.ரி.ஈ. யின் எஞ்சியிருந்தவர்கள் மற்றும் சுமார் 250 உறுதியான போராளிகள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 3 சதுர கிலோமீற்றர் பிரதேசமொன்றில் சுற்றி வளைக்கப்பட்டனர். முடிவு நெருங்கிவிட்டது. அத்தலைவர்கள் பலன் மரணங்களைச் சூழ்ந்த நிலைமைகள் சர்ச்சைக்குரியதாயுள்ளது.

121.
2009 மே 18ஆம் திகதி, யுத்த சூன்ய வலயத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது பிரபாகரன், சூசை மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் கூறின. சார்ள்ஸ் அன்ரனி, நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரும் இறந்தவர்களுள் அடங்கினர்.

பிரபாகரன் மற்றும் அவன் நெருங்கிய சகாக்கள் கொல்லப்பட்டார்கள் என மே 19ஆம் திகதி, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, அவர்களின் சடலங்கள் தொலைக்காட்சியினூடாகவும் காட்டப்பட்டன. சடலங்களின் பல புகைப்படங்கள் பின்னர் வெளியாகின.

எல்.ரி.ரி.ஈ. மீது கிடைத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தி அதே தினம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

122.
மே 16 மற்றும் 19ஆம் திகதிகளுக்கிடையே, வலயத்தில் சிக்குண்டிருந்த எஞ்சியிருந்த பொதுமக்கள் கரையோரப்பகுதியில் இருந்து தெற்கே வட்டுவாய்கால் பாலத்தைக் கடந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றனர்.

ஷெல் வெடிகள் தொடர்ந்ததோடு, (எல்.ரி.ரி.ஈயின் அழிக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் உள்ளிட்ட) பாரிய நெருப்புக்கள் எரிந்து கொண்டிருந்தன. சடலங்கள் எல்லாவிடத்திலும் சிதறிக் கிடந்ததோடு, வழியில் விழுந்திருந்த காயற்றோர் நடக்கக் கூடியவர்களிடம் உதவி கேட்ட போதிலும் அவர்களுக்கு உதவ முன்வருவோர் அரிதாகவேயிருந்தனர்.

பாசமுள்ள இறந்த உறவினர்களைக் கட்டியணைத்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எங்குமே மரண வாடை வீசிக் கொண்டிருந்தது.

(47)
123.
2009 மே 18ஆம் திகதி வன்னியில் ஆயுதந்தரித்த யுத்தத்தின் முடிவைக் குறித்தது. "கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிலான மனிதாபிமான அவலத்தில்' இறுதி நாட்கள் முடிவடைந்தது என்பதாக ஐ.சி.ஆர்.சி. குறிப்பிட்டது.

ஈ.மனிதாபிமான உதவியை நிராகப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பற்றிச் சர்ச்சை எழுப்பல்

124.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் முழுவதிலும், குறிப்பாக 2009 ஜனவரி முதல் மே வரை, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டி, மனிதாபிமான உதவிகளைக் குறிப்பாக உணவு மற்றும் மருந்து வகைகளின் அளவைக் குறைப்பதற்காக குறைந்த மதிப்பீட்டை அரசாங்கம் பிரயோகித்தது.

125.
இறுதிக் கட்டத்தின் ஆரம்பத்தில், 2009 ஜனவரி 13ஆம் திகதி, சுயாதீன மதிப்பீடுகளின் படி, வன்னிப் பிரதேசப் பொதுமக்களின் எண்ணிக்கை 150,000 க்கும் 250,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என அரசாங்க இணையத்தளம் தெவித்தது.

ஆரம்பத்தில் ஐ.நா. இன் மதிப்பீடு 250,000 ஆக இருந்தது. (பின்னர் அந்த மதிப்பீடுகள் அதிகமாக இருந்த போதிலும்). பின்னர் 2009 ஜனவயில், வன்னியில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 75,000 க்கும் கூடிய மதிப்பீட்டின் படி 100,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என பாதுகாப்பு அமைச்சு கூறியது.

ஆயினும், வன்னியில் இருந்த பொதுமக்களின் சரியான எண்ணிக்கையை பிழையற்ற முறையில் மதிப்பீடு செய்வதற்கான போதியளவை விஞ்சிய தகவல் அரசாங்கம் வசம் இருந்தது.

ஒவ்வொரு மாதம் உலக உணவுத் திட்டத்தில் இருந்து உலர் உணவு பங்கீடுகளைக் கோருவதற்காக அரசாங்க அதிபர்கள் ஐ.டி.பி.யினர் பற்றிய தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து வந்துள்ளனர்.

2008 செப்டெம்பருக்கு முன் அச்சமயம் எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் 420,000 பொதுமக்கள் இருந்ததாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களினால் தொகுக்கப்பட்ட எண்ணிக்கைகள் குறிப்பிட்டன.

இவ்வெண்ணிக்கைகள் அதிகரித்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்றிருந்த போதிலும், ஐ.நா. சிறுவர் நிதியத்தின் படி, வன்னியில் பதிவு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 70,000 ஆக. அதாவது அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கைக்குச் சுமார் சமமானதாக இருந்தது.

126.
பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட எண்ணிக்கைகள் மாறுபட்டதாக இருந்த போதிலும், வேண்டுமென்றே அவை குறைவாகவே வைக்கப்பட்டிருந்ததோடு, வலயத்தில் தொழில்புரிந்த சில அரசாங்க ஊழியர்கள் வேறு கணக்குகளை அல்லது தேவைக்கான வேறு மதிப்பீடுகளை வழங்கிய போது அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.

உதாரணமாக, 2009 பெப்ரவரி 2ஆம் திகதி, இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் இருந்து உதவி அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டத்தில் அச்சந்தர்ப்பத்தில் சுமார் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் சுமார் 330,000 ஆட்கள் இருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆயினும், மார்ச் 18 ஆம் திகதி 330,000 என்ற அக்கணக்கு "விதிகளுக்குக் கட்டுப்படாததும் அடிப்படையற்றதும்' எனவும். "குறிப்பாக ஐ.டி.பி. கணக்குகள் தொடர்பாக எந்தவொரு மூலத்துக்கும் தவறான தகவலை வழங்கியதற்காக' அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அரசாங்கம் "விருப்பத்துக்கெதிராக நிர்ப்பந்திக்கப்படும்' எனவும் உதவி அதிபருக்கான பதிலில் தேசத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

(48)
127.
2009 பெப்ரவ இறுதியில், இடம்பெயர்ந்தோன் குடிசைகளைக் கணக்கெடுத்து உரு மற்றும் வேர்ல்ட்வியூ செய்மதிப் படங்களை ஒரு பகுதியாக வைத்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பகுதியில் 267,618 பொதுமக்கள் இருப்பதாக அது கருதுவதாக ஐ.நா. நாட்டுக்கான குழு அரசாங்கத்துக்கு அறிவித்தது.

ஏப்ரல் கடைசியில், ஐ.நா. இன் மதிப்பீடுகளின் படி தொடர்ந்தும் 127,177 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என்ற போதிலும், அக்காலப்பகுதியில் 10,000 பேர்கள் மாத்திரமே எஞ்சியிருந்தனர் என அரசாங்கம் கூறியது.

இறுதியாக அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மற்றும் மெனிக் பாம் அத்துடன் வேறு முகாம்களில் குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 290,000 ஆக இருந்தது.

இவ்வெண்ணிக்கைகளுக்கிடையிலான வேறுபாட்டினை போதியளவு அரசாங்கம் விளக்கவில்லை.

128.
அரசாங்கத்தின் குறைவான மதிப்பீட்டின் விளைவாக, வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் நிஜத் தேவையைவிட மிகக் குறைவாக இருந்ததால், பட்டினிச் சாவு மற்றும் போசாக்கின்மை அங்கு பரவலாகக் காணப்பட்டது.

அதே போன்று, வன்னிப் பிரதேசத்துக்கு அனுமதிக்கப்பட்ட மருந்து வகைகள் ஷெல் வீச்சுக் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கொஞ்சம் கூடப் போதியதாக இருக்கவில்லை. மார்ச் 2010 இல் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போது, தேவைப்படும் மருந்து வகைகள் இல்லாதது பாரிய கக்ஷ்டங்களுக்கும் தேவையற்ற உயிழப்புக்களுக்கும் வழிகோலியது.

ஆர்.டி.எச். வைத்தியர்கள் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை பற்றி கடிதங்கள் மற்றும் தொலைக்காட்சியினூடாகவும் தெவித்த போது, ஊடகங்களுடன் பேசுவதை புகார் செய்வதை நிறுத்துமாறும் அல்லது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை சுகாதார அமைச்சு எச்சரிக்கை செய்தது.

129.
2009 மார்ச் 19ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர் இல்லாததால், கடுமையான வலி தடுப்பு மருந்துகளும் நரம்புக்குள் செலுத்தும் திரவங்களை மாத்திரமே அனுப்படியும் என சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்கு அமைச்சின் செயலாளர் வைத்தியர்களுக்கான பதிலில் தெவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகருக்கு அல்லது தமிழ் நாடு முதலமைச்சருக்குக் கடிதங்களை அனுப்பி இராஜதந்திர மரபு முறைகளை மீற வேண்டாமென்றும் அப்படி மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் வைத்தியர்கள் எச்சரிக்கப்பட்டார்கள்.

130.
மே 16ஆம் திகதி வைத்தியர்கள் யுத்த வலயத்தில் இருந்து வெளியேறியதும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009 ஜூலை ஆரம்பத்தில், வைத்தியர்கள் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி, யுத்தத்தில் உண்மையிலேயே சிலரே மரணித்ததாகவும் காயமடைந்ததாகவும் அது பற்றி பொய் சொல்ல எல்.ரி.ரி.ஈ .தம்மை நிர்ப்பந்தப்படுத்தினர் எனவும் அங்கு அவர்கள் கூறினர்.

இம்மறுப்புரை தாம் தொடர்ந்து வன்னியில் இருந்த போது வழங்கிய நேர்காணல்கள், இலத்திரனியல் தபால் மற்றும் விடுத்த பகிரங்க அறிக்கைகளுடன் மாறுபட்டதாக இருந்தது. அரசாங்கம் அவர்களை அழுத்தத்துக்குள்ளாக்கியதாகவும் இம்மறுப்புரைகள் அவர்கள் முன்னர் வழங்கிய அறிக்கைகளின் உண்மையைப் பாதிக்காது எனவும் இக்குழு நம்புகிறது.

(49)
பொதுமக்கள் எண்ணிக்கை மறறும் அவர்கள் தேவைகள் பற்றிய 1ஆம் நிலைத் தகவலைக் கைவசம் வைத்திருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொது மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக வன்னிக்கான பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதற்கான வியூகத்தின் ஓர் அங்கமாக மிகவும் குறைவான எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டையே பிரயோகித்தது. இதற்காக மதிப்பீடுகள் குறைக்கப்பட்டன என்பதை பின்னர் சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கம் பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ உடன் இணைத்துக் காட்டியதையும் குறைவான எண்ணிக்கைககள் குறிக்கிறது.

உ.இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை

132.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது வன்னியில் இறந்த அல்லது காயமடைந்த பொதுமக்கள் பற்றிய உறுதியானதொரு கணிப்பு இல்லை உண்மையானதொரு கணிப்பை மேற்கொள்வதைப் பல காரணிகள் சிரமமாக்கியுள்ளன:

(அ) யுத்தப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 330,000 ஆக இருந்திருக்கலாம் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை நிச்சயமற்றதாகும்,

(ஆ) பிரிக்கும் செயற்பாட்டில் வெளிப்படையற்ற தன்மை காரணமாக வன்னியில் இருந்து வெளியே வந்தவர்களின் சரியானதொரு கணிப்பு இல்லாதமை,

(இ) இறுதிக் கட்டத்தின் போது கட்டாயமாக ஆட்சேர்த்தல் காரணமாக சிக்கலாகிய நிலைமையில் எல்.ரி.ரி.ஈ இன் போராளிகள் பற்றிய எண்ணிக்கை பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பல பொதுமக்கள் தாம் விழுந்த இடத்திலேயே அவர்கள் மரணம் பற்றிய எவ்வித அவதானிப்பும் பதிவும் இன்றி அவர்கள் புதைக்கப்பட்டது.

133.
வைத்தியர்களால் சேகரிக்கப்பட்ட காயமடைந்த மற்றும் மரணமாகியவர்கள் பற்றிய, ஆஸ்பத்திகளால் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகுகளினால் ஒத்துப்பார்க்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சில மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதிக் கட்டத்தின் போது சுமார் 40,000 சத்திர சிகிச்சை நடவடிக்கைகளையும் 5,000 அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்பட்டதையும் ஒரு மதிப்பீடு கொண்டுள்ளது. காயம் மற்றும் மரணங்களுக்கிடையிலான 1:2 அல்லது 1:3 என்ற விகிதாசாரத்தின் படி பார்த்தால மிகஅதிகளவிலானபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அது குறிக்கக் கூடியதாகவுள்ளது.

ஏனையவர்கள் இந்த மதிப்பீட்டை 75,000 எனக் குறிப்பிடுகிறார்கள், அதாவது யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியவர்களின் எணிக்கை (சுமார் 290,000) மற்றும் யுத்த வலயத்தில் இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (யுத்த சூன்ய வலயத்தில் ஜனவரி முதல் இருந்த சுமார் 330,000 அத்துடன் அதற்கு முன்னர் எல்.ரி.ரி.ஈ. யின் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய சுமார் 35,000).

134.
ஐக்கிய நாடுகள் நாடு சார்ந்த குழுவே தகவலின் ஒரே மூலமாக இருந்தது பகிரங்கப்படுத்தப்படாத ஆவணமொன்றில், கணிப்பு நடவடிக்கைகள் கஷ்டமாகும் வரை ஆகஸ்ட் 2008 முதல் 2009 மே 13ஆம் தகதி வரை மொத்தம் 7,721 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 18,479 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது மதிப்பீடு செய்துள்ளது. 2009 பெப்ரவரி ஆரம்பத்தில், தகவலுக்கான பிரவேசம் கஷ்டமாக இருந்த போதிலும், காயமடைந்த மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கையைத் தொகுக்கும் செயற்பாடொன்றை ஐ.நா. ஆரம்பித்தது.

இச்செயற்பாட்டின் போது ஆர்டிஎச்எஸ் இடம் கிடைக்கும் கணக்கு விபரங்களை அது அடிமட்டக் கோடாக எடுத்துக் கொண்டதோடு, உறுதிப்படுத்த முடியாத அல்லது தமிழ்நெட் மற்றும் வன்னிக்கு வெளியேயிருந்து வந்த அரசாங்கக் கணிப்புக்கள் போன்ற பக்கச்சார்பான லங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

(50)
135.
ஐ.நா. நாடுசார்ந்த குழுவினால் கணிக்கப்பட்ட எண் ஒரு ஆரம்பத்தை வழங்குகிறது என்ற போதிலும் பல காரணங்களுக்காக அது மிகக் குறைவாக இருந்தது.

முதலாவதாக, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாடடுப் பிரதேசங்களில் செயற்பட்ட அவதானிப்பாளர்கள் வலைப்பின்னல் ஊடாக நிஜமாகவே அவதானிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய விபரத்தில் மாத்திரம் அது தங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட பலர் அவதானிக்கப்படாதிருக்கலாம்.

இரண்டாவதாக, ஐ.நா. மே 13ஆம் திகதி கணக்கெடுப்பதை நிறுத்திய பின்னர், காயமடைந்த மற்றும் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகத்திருக்கலாம். ஷெல்வீச்சின் தீவிரத்தன்மை காரணமாக, பல பொதுமக்கள் அவர்கள் இறந்த இடத்திலேயே விட்டு விடப்பட்டதோடு அவை பதியப்படவோ, ஆஸ்பத்திக்குக் கொண்டு வரப்படவோ அல்லது புதைக்கப்படவோ இல்லை. இதனால், உண்மையிலேயே மொத்தக எண்ணிக்கை ஐ.நா. யின் கணிப்பை விட மிக அதிகமாயிருக்கும்.

136.
அரசாங்கத்திடம் பரிந்து கேட்டுக் கொள்ளும் போது ஐ.நா. காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் கூடிய எண்ணிக்கையைக் குறிப்பிட்டதோடு, அதன் குறிப்பான மதிப்பீடுகளைப் என்றுமே பகிரங்கப்படுத்தவில்லை. ஐ.நா.வழங்கிய கணக்குகளை, அவை கற்பனை செய்யப்பட்டவை எனவும் அது ஐ.நா.வின் காரியமல்ல வென்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக அக்கணிப்புக்களைச் சர்ச்சைக்குட்படுத்தினர்.

பகிரங்கமாக யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட "பலத்த சேதம்' பற்றி அல்லது காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை "ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு' அதிகமாக இருந்தது என ஐ.நா. குறிப்பிட்ட போதிலும் உண்மையான எண்ணிக்கையை சரி பிழை பார்க்க முடியவில்லை. குறிப்பான கணிப்புக்களை வழங்குவதில்லை என்ற முடிவு பொதுமக்கள் காயமடைந்தது மற்றும் மரணித்தது பற்றிய செய்தி அறிக்கை விடுப்பதை முக்கியத்துவமற்றதாக்கி விட்டது.

ஆயினும், ஜனவரி 20ஆம் திகதி முதல் அநேகமாக யுத்த சூன்ய வலயங்களினுள் 2,800 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துமிருக்கலாம் என மனித உரிமையகளுக்கான உயர் ஸ்தானிகள் பகிரங்கமாக அறிவித்த 2009 மார்ச்சு 13ஆம் திகதி வரை இந்நிலைப்பாடு பேணப்பட்டு வந்தது.

137.
யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் படி, தம் சொந்தங்களின் மரணம் பற்றி அறிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. பல நம்பகமான மூலங்களின் மதிப்பீட்டின் படி, 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்பும், பொதுமக்கள் மரணம் பற்றிய ஏற்றுக் கொள்ளப்படடிக்கூடிய கணிப்பு இல்லை என்ற போதிலும், இத்தருணத்தில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என பல மூலங்களின் தகவல் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவர் பற்றி இனங்காண்பதற்கும் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிய சரியானதொரு கணக்கைப் பெறுவதற்கும் உரியதொரு புலனாய்வு மாத்திரமே வழிவகுக்கும்.

பாதுகாப்பு விடயத்துக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தது: ஐநா நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 08

(51)

(ஊ) யுத்த வலயத்திற்கு வெளியே மற்றும் பின்னர் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள்

138.
வன்னி யுத்தத்தில் பிழைத்த பொதுமக்களின் இக்கட்டு நிலை அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குச் சென்றதும் முடிவுக்கு வரவில்லை. வன்னியிலிருந்து வெளியேறும் பெருந்திரளான மக்களை வரவேற்கத் தான் தயார் என அரசாங்கம் 2009 ஜனவரியில் இருந்தே அறிவித்திருந்த போதிலும், பெருந்திரளான மக்கள் வெளியே வந்தபோது அதற்கான போதிய வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதோடு, அதனைச் சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டது. பொதுவாக மனிதாபிமான தேவைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் நலனை விட பாதுகாப்பு விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. .

139.
யுத்த வலயத்தில் இருந்து பொது மக்கள் வெளியே வந்ததும், தமக்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பற்றிப் பலர் அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் பாரிய அழுத்தத்துக்குட்பட்டும் களைப்படைந்துமிருந்தனர். அநேகம் பேர் புதிதாக விதவைகளானவர்களாகவும், அனாதைகளானவர்களாகவும் அல்லது அங்கவீனற்றவர்களாகவும் இருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் யுத்தக் காயங்களுடன் காணப்பட்டனர். அவர்களுள் குறைந்த பட்சம் 2,000 அங்கவீனர்கள் இருந்தனர்.

பெருந்திரளானவர்கள் வெளியேறியதும் நிலைமை குழப்பமாக இருந்ததோடு, பல குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்திருந்தனர்.

இச்செயற்பாட்டின் போது குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டன குடும்பத்தினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ப்பதற்கான ஏற்பாடு போதியளவாக இருக்கவில்லை என்பதோடு, இதில் பங்களிப்பதற்கு ஐ.சி.ஆர்.சி. அனுமதிக்கப்படவில்லை..

140.
குடும்பங்களில் இருந்து பிரிந்த நிலையில் பல பெண்கள் தனியாக்கப்பட்டதோடு பாலியல் வன்றைக்குப் பலியாகும் நிலையை எதிர்நோக்க வேண்டியி ருந்தது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதியளவு போசாக்கு, மருத்துவப் பராமரிப்பு இன்றியும் யுத்த வலயத்தில் இருந்த போது பாரிய மனோ தத்துவ ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆளாகியிருந்தனர். கட்டாயமாகக் குழந்தைகள் அணி சேர்க்கப்பட்டது தாய்மார் மீது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

141.
யுத்தம் இளம் வயதினர் மேல் குறிப்பானதொரு தாக்கத்தைக் கொண்டிருந்தது.

14 வயது சிறுவர்கள் கூட எல்.ரி.ரி.ஈ யினால் பலவந்தமாக அணி சேர்க்கப் பட்டனர். இள வயதில் திருமணத்தை உள்ளிட்ட அணி சேர்ப்பதைத் தவிர்ப்பதற் கான நடவடிக்கைகள் இளம் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மீது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஷெல் வீச்சுக் காரணமாக மரணமடைந்து அல்லது அங்கவீனர்களாக ஆகினர். சில குழந்தைகள் பதுங்கு குழிகளில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றதால் கொல்லப் பட்டார்கள். தீவிர போசாக்கு மதிப்பீடொன்றின் படி, 25 சதவீதமான குழந்தைகள் பாரிய ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

142.
பலமுறை இடம்பெயர நேர்ந்ததால் பல குழந்தைகள் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் தம் பெற்றோரை இழந்திருந்ததோடு, தனியாக வெளியேறியதால் அவர்கள் பதியப் படவில்லை. அநேகமான குழந்தைகள் சத்துணவின்றியும் பல சிறு குழந்தைகள் உலர் தன்மையினால் அல்லது வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

(52)
143.
அதேபோன்று, யுத்தத்தினால் முதியவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பல முறை நேர்ந்த இடம் பெயர்வு காரணமாக, முதியவர்களால் தொடர்ந்தும் நடக்க முடியவில்லையாதலால் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் கைவிடப்பட்டனர்.

இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இன்னும் சிலர் களைப்பு மற்றும் தடுக்கக் கூடிய நோய்களினால் மரணமானார்கள்.

1. பிரிக்கும் செயற்பாட்டின் போதான மீறல்கள்

144.
வன்னியை விட்டகன்று வட்டுவாகல் பாலம் மற்றும் ஏனைய அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அடைந்து யுத்தத்தில் உயிர் தப்பியவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். உள்ளே வரும் பொதுமக்கள் பல்வேறு குழுக்களாகப் பிக்கப்பட்டார்கள்.

முதலில், இலங்கை இராணுவம் பொதுவாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இருக்கிறதா எனப் பார்ப்பதற்காக அவர்கள் உடம்பைச் சோதனை யிட்டது. (ஒரு சில) மடிக் கணணிகளும் கமராக்களும் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டபோது அவற்றிலிருந்த பெறுமதிமிக்க தகவல்கள் இல்லாமற்போயின. மக்கள் பின்பு அநேகமாக கால்நடையாக கிளிநொச்சி, புல்மோட்டை மற்றும் பதவிய போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆரம்ப பிரிக்கும் அமைவிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வமைவிடங்களில், ஒரு நாளாவது எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புபட்டிருந்தவர்களை தம்மை இனங்கண்டு சரணடையுமாறு இலங்கை இராணுவம் அழைத்தது, அப்படிச் செய்பவர்களுக்குத் தொழிற் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்தது. மாறாக, எல்.ரி.ரி.ஈ என இனங்காணப்பட்டவர்கள் வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ இனர் பெண்களாகவும் சிறுவர்களாகவும் இருந்தனர்.

145.
மேலும், பிரிக்கப்பட்டு வேறு அமைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை இனங்காண்பதற்காக கருணா பிரிவு அல்லது தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) உறுப்பினர்களை அரசாங்கம் உபயோகித்தது. ஆரம்பப் பிரிக்கும் அமைவிடங்களுக்கான சர்வதேச மனிதாபிமான முகவர்களின் பிரவேசத்தை வேண்டுமென்றே அரசாங்கம் தடுத்தது.

146.
ஆரம்பப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஓமந்தையில் உள்ள மற்றுமொரு பிரிக்கும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட் டார்கள். ஆண்களும் பெண்களும் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்ட போதிலும், பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக ஆடைகள் களையப்பட்டு அவர்கள் சோதனை இடப்பட்டதால் அவர்கள் அவமானத்துக்கு உட்பட்டதோடு, குறிப்பாக பெண்களும் சிறுமிகளும் தாக்கமுறும் சாத்தியம் அதிகத்தது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஆர்.சி. ஓமந்தையில் ஓரளவிலான பிரவேசத்தைப் பெற்ற போதிலும், தனியாக மக்களை சந்தித்துப் பேச அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜூலை 2009 இற்குப் பின்னர், ஐ.சி.ஆர்.சி. இதிலிருந்து ழுமையாகத தடுக்கப்பட்டது.

(53)
147.
சிகிச்சை தேவைப்பட்ட பொது மக்கள் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள் அல்லது புல்மோட்டையில் இந்திய வைத் தியர்கள் சேவை புரிந்த மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

வவுனியா ஆஸ்பத்திரியில் காயமுற்றோர் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால் பலர் சிகிச்சை முடிவடையுன்னர் வெளியேற்றப்பட்டதோடு சகல நோயாளிகளும் இலங்கை இராணுவத்தினன் காவலில் வைக்கப்பட்டு பொலிஸ் புலனாய்வாளர்களினால் (குற்றப் புலனாய்வுப் பிவு அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு) விசாரிக்கப்பட்டார்கள். சில நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் இருந்து மாயமானார்கள்.

148.
குறிப்பாக பிரிக்கும் செயற்பாட்டின் விளைவாக கொலைத் தண்டனைகள், காணாமாற்போதல், வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன.

(அ) கொலைத் தண்டனைகள்

149.
இலங்கை இராணுவத்தின் பொறுப்பில் இருந்த சில எல்.ரி.ரி.ஈ . உறுப்பினர்கள் கொலைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை உறுதி செய்யப்பட்ட படச் சுருள்களும் பல புகைப்படங்களும் குறிப்பிடுவதாக இருந்தது. சிலரின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த பல இறந்த உறுப்பினர்களின் சடலங்களைக் (பொதுமக்களாகவும் இருக்கலாம்) காட்டும் புகைப்படங்கள் குழுவுக்குக் கிடைத்தன.

2009 ஆகஸ்ட் 25ஆம் திகதி யூகே யினைத் தளமாகக் கொண்ட சனல் 4 நியூஸ் ஊடகம் பல சிறைக்கைதிகள் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு இலங்கை படை வீரர்களால் சடுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் வீடியோப் படங்களை ஒளிபரப்பியது.

படத்திலிருந்த கைதிகள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். மிக அருகில் இருந்து தலையில் சுடப்படு முன்னர் அவர்கள் உதைக்கப்பட்டு சேற்றில் தடுமாற விடப்பட்டார்கள்.

அதற்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கக் கூடிய ஏனைய பல சிறைக்கைதிகளையும் அப்படம் காட்டுகிறது. சனல் 4 இனால் 2010 டிசம்பர் 2ஆம் திகதி அதே காட்சியைக் கொண்ட இன்னுமொரு படம் நிலப்பரப்பின் மீது பார்வையைச் செலுத்தி கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிர்வாண கோலத்தில் இருந்த மேலும் பல ஆண் மற்றும் பெண்களின் சடலங்களைக் காட்டியது. அவர்களுள் இளம் வயது சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணும் காணப்பட்டார்கள். அப்பெண் எல்.ரி.ரி.ஈ யின் பிரசித்தி பெற்ற ஊடக தொகுப்பாளர் "இசைபிரியா' என இனங்காணப்பட்டது.

2009 மே 18ஆம் திகதி 53ஆவது படைப்பிரிவின் "எதிரி நடவடிக்கை' ஒன்றின் போது இசைப்பிரியா கொல்லப் பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணை யத்தளம் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும். நீடிக்கப்பட்ட வீடியோப் படம் சில படைவீரர்களின் முகங்களைக் காட்டுவதோடு சிலர் காட்சியை கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடிப்பதையும் காணக் கூடியதாகவிருக்கிறது. .

150.
கொலைத் தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டதாகத் தெரியும் புகைப்படங்களில் உயிருடன் இருக்கும் சிறைக்கைதிகள் இடையே இச்சிறுவனை ஒத்த ஒருவன் இருப்பதையும் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டிருப்பதையும் காணக் கூடிய தாகவிருக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்ட சில எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சித்திர வதைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் புகைப்படங்களில் காணக் கூடியதாக விருக்கிறது. இரத்தம் வழிந்தோடும் நிலையில் மரமொன்றில் கட்டப்பட்ட இளம் ஆண் ஒருவரையும் வீடியோப்படம் ஒன்று காட்டுகிறது. பின்னர் புலிக் கொடியொன்றினால் போர்த்தப்பட்ட புதை குழியொன்றில் அவரைக் காணக் கூடியதாகவுள்ளது.

(54)
(ஆ) காணாமல்போதல்கள்

151.
பிரிக்கும் அமைவிடங்களில் அல்லது ஓமந்தையில் ஆட்களின் பகிரங்கப் பதிவொன்றை அரசாங்கம் வழங்கவில்லை என்பதோடு, அச்செயற்பாட்டைக் கண்காணிப்பதற்கு சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்கவுமில்லை.

இதனால் ஆட்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாகவுள்ளது. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது, ஆரம்பத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடைந்த போது தம் கணவன்மார்கள் அல்லது உறவுகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டதாகவும் அன்று முதல் இன்று வரை அவர்கள் பற்றிய எது விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் பல பெண்கள் தெரிவித்ததோடு, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யவுமில்லை.

2009 மே மாதத்தில், காணாமல் போனதாக, சில தனி நபரல்லாத ஆட் குழுக்கள், பற்றிக் குறிப்பிடும் குறைந்த பட்சம் 32 குற்றச் சாட்டுக்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இவர்களுள் பலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களாவர்.

(இ) வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்செயல்

152.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதனைத் தொடர்ந்தும் தமிழ் பெண்களுக்கெதிராக நிகழ்ந்த வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறைகள் மிகக் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

கலாசார நுண்ணர்வுகள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் கறை தாக்கத்துக்குள்ளானவர்கள் தம் உறவுகளுக்குக் கூட அத்தகைய குற்றச் செயல்கள் பற்றிய அறிவிப்பைத் தடுத்தது. அது அவ்வாறிருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதனைத் தொடர்ந்தும் அரசாங்கப் படையினர் மற்றும் அவர்களின் தமிழ் துணையாளர்களாலும் பாலியல் வன்றைக்கு உட்படுத்தப்பட்டது பற்றிப் பெண்கள் மறைகமாக அறிவித்துள்ளனர்.

153.
பல புகைப்படங்களும் வீடியோப் படங்களும், குறிப்பாக சனல் 4 இனால் வழங்கப்பட்ட வீடியோப் பதிவுகளும், இறந்த பெண் உறுப்பினர்களைக் காட்டுவதாக உள்ளன. அவற்றில், மீண்டும் மீண்டும் பெண்கள் நிர்வாணமாக அல்லது கீழாடைகள் அகற்றப்பட்டு அவர்களின் மார்பகங்கள் மற்றும் மர்மஸ்தானங்கள் திறக்கப்பட்டுக் காட்டப்படுகிறார்கள்.

இலங்கை இராணுவப் படைவீரர்களின் சிங்கள மொழி விளக்கத்துடனான சனல் 4 படங்கள், கொலை செய்யப்படு முன் அல்லது பின் வன்புணர்ச்சி அல்லது பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கலாம் என்ற உறுதியான ஊகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வீடியோ படத்தில் இலங்கை இராணுவப் படை வீரர்கள் இறந்த (அல்லது குற்றுயிராகக் கிடக்கும்) நிர்வாணமான சடலங்களை மிகவும் அவமரியாதையுடன் ட்ரக் வண்டி ஒன்றில் ஏற்றுவதையும், அசைவதாகத் தெரியும் ஒரு பெண்ணின் காலை பலமாய் மிதிப்பதையும் காட்டுகிறது.

இலங்கை காவல்துறையினர் (குற்றப் புலனாய்வுப் பிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிவு) அல்லது இலங்கை இராணுவத்தின் பொறுப்பிலிருந்த போது சந்தேகிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் வன்புணர்ச்சிக்குட்படுத் தப்பட்டதாகவும் அறிக்கைகள் இருக்கினறன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வன்புணர்ச்சி சம்பவங்களை சர்வதேச முகவர்களும் பதிவு செய்ததோடு, மேற்படி சம்பவங்களை காவல்துறையினருக்கோ சர்வதேச ஈடுபாட்டாளர்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இடம்பெயர்ந்தோரை இராணுவத்தினர் எச்சரித்தனர்.

(55)
(அ) விசாரணையின்றி மூடிய முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களைத் தடுத்து வைத்தல்

154.
யுத்த வலயத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம், மன்னார். திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வியாபித்திருந்த 21 இடம்பெயர்ந்தோர் அமைவிடப் பின்னலில் இருத்தப்பட்டனர். அநேகமானோர் படிப்படியாக வவுனியாவுக்கு அருகில் இருந்த மெனிக் பாம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, உச்சக்கட்டத்தில் உலகின் ஆகக் கூடிய இடம்பெயர்ந்தோரை எண்ணிக்கையான சுமார் 250,000 பேர்களை அது உள்ளடக்கியது.

155.
மெனிக் பாம் மற்றும் ஏனைய இடம்பெயர்ந்தோர் அமைவிடங்கள் புறத் தொடர்பற்றவையாக முட்கம்பிகளினால் சூழப்பட்டு அங்கு இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, வன்னியின் இடம்பெயர்ந்தோர் சனத்தொகை முழுமையாக தடுத்து வைக்கப்பட்டதோடு வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் முடியும் வரை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் இருந்து போதியளவு கண்ணிவெடிகள் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தோரை தடுத்து வைப்பது அவசியமாகும் என அரசாங்கம் சாதித்தது.

மெனிக் பாமில் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்ததோடு, முன்னாள் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் துணைப்படையினர் பெரும்பாலும் இரவு நேரங்களில் தமது முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்தவர்களாக எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புடையவர்கள் எனத் தாம் கூறுபவர்களைத் தேர்ந்தெடுத்து அகற்றுவதற்காக மனிதாபிமான அமைப்புக்களின் பார்வைக்குத் தெரியாமல் உலவி வந்தனர்.

156.
மெனிக் பாமில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனிமையாக இடம்பெயர்ந்தவர்களுடன் கதைப்பதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் சர்வதேச அமைப்புக்கள் தடுக்கப்பட்டன.ஆரம்பத்தில் ஐ.சி.ஆர்.சி. குறுகிய காலப்பகுதியில் மெனிக்பாமுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், விரைவில் அது நிறுத்தப்பட்டது.

யுத்த வலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் தம் அனுபவங்களை சர்வதேச முகவர்களுக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் சொல்வதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்பதை இக்கட்டுப்பாடுகள் குறிப்பிடுவதாயிருந்தன.

ஆண் துணையின்றித் தனியாயிருந்த பெண்கள் மற்றும் தனியாய் இருந்த குழந்தைகள் பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு உட்படுவதை உள்ளிட்ட இடம்பெயர்ந்தோர் முகாமில் மீறல்களுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளை புற மற்றும் சுயாதீன கண்காணிப்பு இல்லாத நிலை அதிகரித்தது.

157.
மெனிக் பாம் அமைக்கப்படு முன், இடம்பெயர்வதற்கான சர்வதேச அமைப்பு, ஐ.நா. மனித உமைகள் உயர் ஸ்தானிகர், ஐ.நா. சிறுவர் நிதியம் மற்றும் ஏனையவற்றை உள்ளிட்ட சர்வதேச முகவர்கள் முகாம்கள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச தரங்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தே மனிதாபிமான உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையைத் தங்களுக்குள்ளே கலந்துரையாடினர். தோதான தரங்கள் பற்றி இவ்வாறான பல அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டன.

ஆயினும், பெருந்திரளான இடம்பெயர்ந்தவர்கள் வர ஆரம்பித்ததும், நிபந்தனைகள் பற்றிய பொதுவான நிலைப்பாட்டினை சர்வதேச முகவர்களால் எய்த முடியவில்லை. மெனிக் பாமில் மிகத் தரக் குறைவான நிலைமைகள் நிலவிய போதிலும் பல சர்வதேச முகவர்கள் தொடர்ந்தும் உதவியை வழங்கினர்.

(56)
158.
இடம்பெயர்ந்தோர் மாதக்கணக்காக அல்லது சில சந்தர்ப்பங்களில் பல வருடங்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 2009 டிசம்பர் அளவில், சுமார் 149,000 இடம்பெயர்ந்தோர் விடுவிக்கப்பட்டதோடு, மேலும் 135,000 பேர் முகாம்களில் எஞ்சியிருந்தனர். 2010 செப்டம்பர் அளவில், 242,741 இடம்பெ யர்ந்தவர்களை விடுவித்திருப்பதாகவும் 25,795 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

(ஆ) முகாமில் மனிதத்தன்மை அற்ற நிலைமைகள்

159.
இடம்பெயர்ந்தோருக்கான "நலன்புரிக் கிராமம்' என அரசாங்கம் மெனிக் பாம் இனைக் குறிப்பிட்ட போதிலும், அதற்கென்றே நீர் வளம் எதுவுமின்றி அது நடுக்காட்டில் அமைக்கப்பட்டிருந்தது. 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெருந்திரளான இடம்பெயர்ந்தோர் வந்ததும், மெனிக் பாமில் இருந்த நிலைவரங்கள் சர்வதேச தரங்களை விட மிகக் குறைவானதாகவே இருந்தன.

இதனால் பொதுமக்கள் மேலதிக தேவையற்ற கஷ்டத்தையும் அவலத்தையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. புதிதாக வந்தவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்ததோடு, பலர் மன அழுத்தத்தினால் தாக்கமுற்றிருந்த போதிலும், சமூக சேவைகள் அமைச்சு மனோதத்துவ ரீதியிலான ஆதரவை வழங்க அனுமதிக்கவில்லை. சில இடம்பெயர்ந்தோர் தற்கொலை செய்து கொண்டனர். அடிப்படை சிகிச்சைக்கான அனுமதிப் பத்திரத்துக்காகக் காத்திருக்கும் போது அல்லது தடுக்க முடிந்த நோய்களினால் சிலர் இறந்தனர்.

160.
முகாம்களில் அதிக நெரிசல் காணப்பட்டதால் சிலர் பாதுகாப்பற்ற முறையில் தம் வாழ்க்கையை மேற்கொள்ள முனைந்தனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் உட்பிரவேசித்ததைத் தொடர்ந்து மெனிக் பாமில் உணவு, நீர், வதிவிட மற்றும் சுகாதார வசதிகளுக்குத் தீவிர பற்றாக்குறை நிலவியது.

இருப்பிடங்கள் தரபோலின் ப்ளாஸ்டிக் ஆக இருந்ததனால் பகல் நேரங்களில் சூடு கடுமையாக இருந்தது.

உணவு மற்றும் நீரைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல மணி நேரங்கள் அல்லது சில வேளைகளில் நாள் ழுவதும் காத்து நிற்க வேண்டியிருந்தது. உணவு மிகத் தரக் குறைவாக இருந்ததோடு சில சந்தர்ப்பங்களில் அது தட்டுகள் இன்றி விரித்த கைகளில் கொட்டப்பட்டது.

161.
அநேகமான சந்தர்ப்பங்களில் குடும்பங்கள் தம்முடன் உறவுத் தொடர்பற்ற ஏனைய குடும்பங்களுடன் கூடாரங்களில் ஒன்றாக வைக்கப்பட்டனர்.

தம் கணவன்மார் காணாமற் போன அல்லது இறந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் விடயத்தில், அப்படி ஒரே கூடாரத்தில் இருப்பது ஏனைய ஆண்களினால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.

போதியளவு மறைவிடம் வழங்கப்படவில்லை என்பதோடு, அவர்கள் மலசல கூடங்களைப் பாவிக்கும் போது அல்லது குளிக்கும் போது படைவீரர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் அந்தரங்கத்தில் மற்றும் கௌரவத்தில் தலையிடுவதாக இருந்தது. உணவு, இருப்பிடம் அல்லது முகாம்களில் உதவி பெறுவதற்காக சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

162.
மெனிக் பாமில் அடிப்படை நிலைமைகள் மனிதத்தன்மை யற்றவையாக இருந்த அதேவேளையில், வெஸ்டர் யூனியன் (பணமாற்று வசதி) அங்கு திறக்கப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கானோர், அவர்களுள் பலர் புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகள் உள்ள எல்.ரி.ரி.ஈ இனர் இராணுவத்தினருக்கு லஞ்சம் வழங்கி முகாம்களில் இருந்து வெளியேற முடிந்தது.

தடுப்பு முகாம்களில் சித்திரவதை; புலிகளின் தலைமை சரணடைய முயன்றது: ஐநா நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 09

(57)
(அ)தடுப்புக் காவலில் சித்திரவதை

163.
குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியன மெனிக் பாம் முகாக்குள் அலகுகளைப் பேணி வந்ததோடு கிரமமாக விசாரணைகளையும் நடாத்தின. வைத்தியர்கள், உதவி அரசாங்க அதிபர் மற்றும் ஐ.நா.பணியாட் தொகுதியின் இரு அங்கத்தவர்கள் ஆகியவர்களை உள்ளிட்ட ஏனையவர்கள் எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்பு உண்டு எனக் கருதப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சித்திரவதைக்கு உட்படுத்தவும்பட்டனர்.

விசாரணை முகாமிலிருந்து அடித்தல் மற்றும் அலறல் குரல்களைக் கேட்கக் கூடியதாகவிருந்தது. குறைந்தபட்சம் தடுப்புக் காவலின்போது சித்திரவதை செய்யப்பட்ட ஒன்பது சந்தர்ப்பங்களை ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் பதிவு செய்தது. தடுப்புக்காவலில் இருந்த சிலர் அழைத்துச் செல்லப்பட்ட பின் அவர்கள் திரும்பி வரவில்லை.

3 . எல்.ரி.ரி.ஈ.. எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை விசாரணையின்றித் தடுத்து வைத்தல்

164.
பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் போது, எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை இலங்கை இராணுவத்தினர் பொதுவாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அல்லது அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பூசா மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களில் உள்ள வேறு தடுப்பு முகாம்களுக்கு அகற்றினர்.

பல சந்தர்ப்பங்களில், தமது குடும்பத்தினரைத் தடுத்து வைப்பதற்கான அறிவித்தலை இலங்கை இராணுவம் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை என்பதோடு எல்.ரி.ரி.ஈ

எனச் சந்தேகிக்கப்படுபவர்களை இனங்காண்பதற்கு அவர்கள் பிரயோகித்த முறை பற்றியும் தெரிவிக்கவில்லை.

குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய கணக்கின் படி, 2010 செப்டெம்பரில் இருந்தவாறாக,' ஆரம்பத்தில் சரணடைந்த..' மொத்தம் 11,696 பேர் "பற்றிய தகவல் உள்ளதோடு அவர்கள் நெறிப்படுத்தப்படுகின்றனர் என அரசாங்கம் அறிவித்த போதிலும், இவ்வெண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாதிருப்பதோடு, ஐ.நா., ஐசிஆர்சி அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்கள் பற்றிய சுயாதீன மேற்பார்வையினை மேற்கொள்வதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

யுத்தத்தில் ஈடுபடாதோர் அல்லது இறுதி வாரங்களில் அல்லது நாட்களில் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்பட்டோர் ஆகியவர்களை இவ்வெண்ணிக்கை உட்படுத்துகிறது.

அரசாங்கக் கணக்குகளின்படி அவர்களுள் 594 சிறுவர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் சிறுவர்கள் பெரியவர்களுடன் வைக்கப்பட்டிருந்த போதிலும் ஐ.நா. சிறுவர் நிதியம் அவர்களைப் பதிவு செய்தது.

பின்னர் அவர்கள் வேறு சிறுவர் புனர்வாழ்வு மத்திகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆயினும், அவை பெரும்பாலாக நாட்டின் தெற்கில் இருந்ததால் குடும்பத்தினர் அவர்களைச் சென்று பார்ப்பது கஷ்டமாகவிருந்தது.

165.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் எல்.ரி.ரி.ஈ உடன் அவர்களுக்கு இருந்த தொடர் புகள் பற்றி விரிவாக விசாரிக்கப்படுவர்.

பின்னர் அவர்களில் சிலர் புனரமைப்பு ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள "பாதுகாப்பான இடவசதி மற்றும் புனர்வாழ்வு மத்திகளுக்கு' இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் 2006 இல் அமைக்கப்பட்ட இவ்வலுவலகம், "புனர்வாழ்வளிப்பதற்காக' சரணடையும் ஒருவரை பாதுகாப்புச் செயலாளன் கட்டளையின் பேல் இரண்டு வருடங்கள் வரை வைத்திருக்கலாம்.

2010 செப்டெம்பரில் குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய தகவலின் படி, "சுமார் 6,500' முன்னாள் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் "குறுகிய கால புனர்வாழ்வுக்கு' அத்துடன், "சுமார் 3,500' பேர் "நீண்டகால புனர்வாழ்வுக்கு' உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, "1,500 க்கும் குறை வானோர்' தீவிர எல்.ரி.ரி.ஈ. இனர் என இனங்காணப்பட்டுள்ளனர்.

(58)
166.
குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய ஆவணங்களின்படி, "புனர்வாழ்வளிக்கப் பட்ட' 5,809 பேர்கள் "மீளிணைக்கப்பட்டுள்ளார்கள்', அதாவது, 2011 பெப்ரவரி 8 ஆம் திகதியில் இருந்தவாறாக, விடுவிக்கப்பட்டுள்ளதோடு. மேலும் 4,581 பேர் புனரமைப்பு ஆணையாளர் நாயகத்தின் கீழான ஒன்பது பல்வேறு தடுப்பு மத்திகளில் தற்போது "புனர்வாழ்வு அளிக்கப்பட்டு' வருகிறார்கள்.

1,306 எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் தொடர்ந்தும் புறத்தொடர்பற்ற தடுப்பு நிலையங்களில் குற்றவியல் விசாரணை மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இது குறிக்கிறது.

167.
அரசாங்கத்தின் வெளிப்படையற்ற நிலை காரணமாக வெவ்வேறான "சரணடைந்த' இந்த எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அமைவிடங்களில் உள்ள நிலைமை பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

எவ்வித புற அவதானிப்புமின்றி சுமார் இரண்டு வருடங்களாக விசாரணை மற்றும் புலனாய்வு அத்துடன் "புனர்வாழ்வளித்தல்' மேற்கொள்ளப்பட்டு வருவதால், தட்டிக் கேட்க ஆளி ல்லாத நிலையில் எல்.ரி.ரி.ஈ யினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் கற்பழிப்பு, சித்திரவதை அல்லது காணாமற்போதல் போன்ற மீறல்களுக்கு ஆளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிக மாகவுள்ளன.

(எ) ஏனைய குற்றச்சாட்டுக்கள்
168.
மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களுக்குப் புறம்பாக, அவை நம்பகரமானவை என குழு தீர்மானிக்க முடியாத வேறு பல குற்றச்சாட்டுக்களும் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் நிலைத்தகவுள்ள பாரதூரமான சுபாவம் காரணமாக அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும்.

1.கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பொஸ்பரஸ் பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டு

169.
புதுக்குடியிருப்பினைச் சுற்றிலும் இரண்டாவது யுத்த சூன்ய வலயத்திலும் பொது மக்களுக்கு எதிராக கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பொஸ்பரஸ் அல்லது ஏனைய இரசாயனப் பொருட்களை இலங்கை அரசாங்கம் பாவித்தது என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இலங்கை அரசாங்கம் இந்த ஆயுதங்களைப் பாவித்ததை நிராகரித்தது, வெள்ளை பொஸ்பரஸைப் பாவித்ததாக எல்.ரி.ரி.ஈ யினைக் குற்றம் சாட்டுகிறது.

.வெள்ளைக் கொடி பற்றிய சம்பவம் 2.
170.
எல்.ரி.ரி.ஈயின் அரசியல் துறை தலைமைத்துவம் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் இலங்கை இராணுவத்தினடம் சரணடைந்த போது அவர்கள் மீது கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யுத்தத்தின் இறுதி நாட்களில், எல்.ரி.ரி.ஈ யின் அரசியல்துறை தலைவர், நடேசன் மற்றும் புலிகளின் சமாதானச் செயலகத்தின் தலைவர், புலித்தேவன் தொடர்ச்சியாக. பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட பலருடன் சரணடைவது பற்றிக் கதைப்பதற்காகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சுமார் 300 பொதுமக்கள் இருந்ததாகக் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் நிபந்தனையற்ற சரணடைவுக்கு எல்.ரி.ரி.ஈ யின் அரசியல் தலைமைத்துவம் தயக்கம் காட்டிய போதிலும், தமது இறுதி மறைவிடத்தை இலங்கை இராணுவத்தினர் அண்மித்ததால், நடேசனும் புலித்தேவனும், கேணல் ரமேசும் கூட, நிபந்தனையின்றிச் சரணடைய இணங்கினர்.

இத்தீர்மானம், ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மற்றும் நோர்வே, ஐக்கிய இராஜதானி அத்துடன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அரசாங்கங்கள், ஐசிஆர்சி பிரதிநிதிகள் மற்றும் ஏனை யோருக்கு அறிவிக்கப்பட்டது. நடுவர்கள் ஊடாக மஹிந்த, கோதாபய மற்றும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன அத்துடன் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அது அறிவிக்கப்பட்டது.

171.
அவர்கள் சரணடைவது ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் பசில் ராஜபக்ஷவும் உறுதிப்பாடு வழங்கினர். இது நடுவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ தலைவர்களுக்குத் தெவிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட ஒரு வழியாக வெள்ளைக் கொடி ஒன்றை ஏந்தியவாறு மெதுவாக இராணுவத்தினரை நோக்கி நடக்கு மாறு அவர்கள் பசில் ராஷபக்ஷவினால் அறிவுறுத்தப்பட்டார்கள்.

சரணடையும் இடத்தில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற எல்.ரி.ரி.ஈ யின் கோரிக்கை நிராகக்கப்பட்டது. 2009 மே 18 ஆம் திகதி காலை சுமார் 6.30 மணியளவில் நடேசனும் புலித்தேவனும் தாம் மறைந்திருந்த இடத்தில் இருந்து தமது குடும்பத்தினரை உள்ளிட்ட பெரியதொரு கூட்டத்துடன் 58 ஆவது படைப்பிவு நிலைகொண்டிருந்த பிர தேசத்தை நோக்கி நடக்க முற்பட்டனர்.

இன்னுமொரு கூட்டத்துடன் கேணல் ரமேஷ் பின்னால் வந்தார். சிறிது நேரத்துக்குப் பின்னர், நடேசனும் புலித்தேவனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என பிபிசி யும் ஏனைய தொலைக்காட்சி நிலையங்களும் அறிவித்தன. இச்சம்பவம் பற்றி பின்னர் அரசாங்கம் பல்வேறுபட்ட விளக்கங்களை வழங்கியது. அவர்கள் கொல்லப்பட் சூழ்நிலைகள் பற்றிய தகவல் அரிதாக உள்ள நிலையில், எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவம் சரணடைய நாடியிருந்தது என குழு நம்புகிறது.

ஏ.நிகழ்வுகள் பற்றிய அரசாங்கத்தின் கூற்று

172.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கூற்றுக்கு மிகவும் மாற்றமானதொரு கண்ணோட்ட த்தை மேற்படி நம்பகமான குற்றச்சாட்டுகள் வழங்குகின்றன.

"பூஜ்ய பொதுமக்கள் பாதிப்பைக்' கொண்டதொரு "மனிதாபிமான மீட்டு நடவடிக்கையை' அது மேற்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது. 2010 மே 7 ஆம் திகதி, உரையொன்றின் போது பாதுகாப்புச் செயலாளர், யுத்தத்தில் இராணுவ நடவடிக்கைக் கட்டளைகளுள் பூஜ்ய பாதிப்புக் கோட்பாடு உள்ளடக்கப்பட்டது உலகில் இதுவே முதற்தடவையாகும் எனக் குறிப்பிட்டார். 2010 ஜூன் 18ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ ஆற்றிய உரையொன்றில், "சாதாரண பொது மக்களுக்கு எதிராக ஒரு வேட்டேனும் தீர்க்கப்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை' எனத் தெவித்தார்.

2010 மே 18ஆம் திகதியன்று யுத்த முடிவின் முதலாவது ஆண்டு நிறைவன்று, பின்வருமாறு பாதுகாப்புச் செயலாளர் நினைவூட்டினார்: நாம் "யுத்த சூன்ய வலயங்களை' பிரகட னப்படுத்தினோம். பொதுமக்கள் வாழும் யுத்த வலயங்களை எதிர்கொண்டபோது வான், பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வதிலிருந்தும் நாமாகவே தவிர்ந்து கொண்டோம். இது பற்றி எமது கள கட்டளைத் தளபதிகள் மிகவும் கவனமாக இருந்ததோடு அவர்கள் தம்மை அநேகமான சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். மேலும் யுத்தத்தின் எல்லாக் கட்டங்களிலும் உலக உணவுத் திட்டம், செஞ் சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. ஊடாக சிக்குண்ட பொதுமக்களுக்கான உணவு மற்றும் மருந்து வகைகள் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

(60)
173.
2009 மார்ச் 2ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித வளங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சியில்: "கனரக ஆயுதங்களைப் பாவிப்பதற்கான எந்தவொரு நியாயமும் இல்லை..மற்றும் உண்மையிலேயே சுமார் 10 நாட்களுக்கு முன்னர் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என ஆயுதப் படைகள் தெளிவான தீர்மானமொன்றை எடுத்தனர். நீங்கள் அறிந்திருப்பீர்கள், எல்.ரி.ரி.ஈ. சுமார் 48 சதுர கிலோமீற்றர் சிறிய பரப்பொன்றுக்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால், கனரக ஆயுதங்களை நாம் பாவிக்க முடியாது' எனக் குறிப்பிட்டார்.

ஆயினும், யுத்தம் முடியும் வரை 81மிமீ வரையிலான மோட்டார்கள் பிரயோகிக்கப் பட்டதாகக் கூறிய ஏனைய அரசாங்க அதிகாரிகள், அவை கனரக ஆயுதங்கள் அல்ல என வாதிட்டனர்.

174.
2009 ஏப்ரல் 06 ஆம் திகதி, "பணயக் கைதிகளைக் காப்பாற்றும் உலகின் மிகப் பெரிய நடவடிக்கையில்' இலங்கை இராணுவம் ஈடுபட்டிருந்தது என லெப் டினன்ட ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் ஒப்சேவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதி, "இரத்தக் களறியொன்று ஏற்படும்' என்ற எச்சரிக்கைகள் பிழையென நிரூபிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க தெவித்தார்.

யுத்த வலயத்தில் இருந்து வரும் இடம் பெயர்ந்தோர் "நலன்புரி நிலையங்களில்' வரவேற்கப்பட்டார்கள் எனவும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ இனர் "மீட்பு' செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் "புனர் வாழ்வு' பற்றிக் கவனம் செலுத்தப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

175.
கிடைக்கக் கூடிய சகல தகவல்களையும் கடுமையாக மீளாய்வு செய்து மதிப்பீடு செய்த பின்னர், நிகழ்வுகள் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கூற்றை குழு ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

ஐ. முடிவுகள்

176.
எனவே, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய குழுவின் விளக்கம் இலங்கை அரசாங்கம் புரிந்துள்ள ஐந்து அடிப்படை வகுதிகளைச் சேர்ந்த பாரிய நிலைத்தகவுள்ள மீறல்களை வெளிப்படுத்துகிறது:

(அ) பரவலான செல்வீச்சினால் பொதுமக்கள் இறப்பு இலங்கை இராணுவம் வன்னியில் அதன் இராணுவ நவடிக்கையை, அதிக அளவில் பொதுமக்களுக்குச் சேதம் ஏற்படும் விதத்தில், சில சமயங்களில் பல்குழல் ரொக்கட் ஏவும் கருவிகளை மற்றும் பீரங்கிகளைக் கொண்ட பாரிய மற்றும் பரவலான செல்தாக்குதலைப் பிரயோகித்து முன்னெடுத்தது. பொதுமக்கள் ஒன்று திரள்வதற்காக அவர்களை ஊக்குவித்து மற்றும் கன ரக ஆயுதங்கள் பாவிக்கப்பட மாட்டாது என அது அறிவித்த பின் மூன்று தொடர்ச்சியான யுத்த சூன்ய வலயங்கள் மீது ஷெல் தாக்குதலை அது மேற்கொண்டது. ஆளில்லாத விமானங்களை உள்ளிட்ட இராணுவத்தினர் உளவு அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. அத்துடன் ஐசிஆர்சி போன்ற புற பாத்திரங் களின் அறிவிப்புக்கள் மூலம் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றி அறிந்திருந்த போதிலும், ஷெல் தாக்குதலை அது மேற்கொண்டது.

பொதுமக்களிடையான அதிக உயிர்ச்சேதம் காயம் அரசாங்கத்தின் ஷெல் வீச்சு காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நேர்ந்தன. யுத்த வலயத்தில் இருந்து சர்வதேச அமைப்புக்களை ஒதுக்கி வைப்பது மூலம் புற அழுத்தத்தையும் மற்றும் அவதானிப்பினையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முனைந்தது.

(61)
(ஆ)ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏனைய மனிதாபிமான நிலைகள் மீதான செல் தாக்குதல்:

போர் முனைகளில் அரசாங்கம் திட்டமிட்ட விதத்தில் ஆஸ்பத்திரிகளை, சிலவற்றை மீண்டும் மீண்டும், செல்லடித்துக் தாக்கியது. ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த காயமடைந்த சில பொதுமக்கள் செல் வீச்சுக் காரணமாக மீண்டும் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

வன்னியில் இருந்த அனைத்து ஆஸ்பத்திரிகளும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு அவற்றில் இருந்து அகல வேண்டியிருந்தது. அவற்றின் அமைவிடயங்களை அரசாங்கம் நன்க றிந்திருந்த நிலையிலும் இவ்வாறு நேர்ந்தது.

(இ) மனிதாபிமான உதவியை மறுத்தல்.

உணவு மற்றும் அடிப்படை மருந்து வகைகள், குறிப்பாக காயங்களுக்கான மருந்து வகைகள் போன்ற மனிதாபிமான உதவியை யுத்த வலயத்தில் இருந்தவர்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டவாறு கிடைக்கச் செய்வதைத் தடுத்தது. இதற்காக, யுத்த வலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது.

குறிப்பாக சத்திர சிகிச்சைக்கான பொருட்களை வழங்காமை பொதுமக்களின் கஷ்டங்களை அதிகரித்ததோடு, மரணிப்பவர்களின் எண்ணிக்கையையும் அது அதிகரித்தது.

(ஈ) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தில் உயிர் தப்பியவர்களின் மீதான மனித உரிமைகள் மீறல்.

அதன் செயற்பாடுகளை "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' எனக் குறிப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டோரும் யுத்தத்தில் உயிர் பிழைத்தவர்களும் யுத்த வலயத்தை விட்டகன்றபின், அரசாங்கம் அவர்களை மேலும் கஷ்டங்களுக்குள்ளாக்கியது.

பாரிய நெரிசல் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்ததோடு, அது தடுத்து வைக்கப்பட்டவர்களின் அடிப்படை சக மற்றும் பொருளாதார உமைகளில் பிளவினை ஏற்படுத்தி தேவையின்றி உயிர்கள் பலியாவதற்கு வழிகோலியது.

சகல இடம்பெயர்ந்தவர்கள் புறத் தொடர்பற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதோடு, மனிதாபிமான அமைப்புக்களுடன் தனியாகக் கதைப்பதற்கு அவர்கள் அனுமதி க்கப்படவில்லை. முகாம்களில் மற்றும் தடுப்புக் காவலில் பெண்கள் மேலும் இம்சைக்குட்படுத்தப்பட்டார்கள்.

எல்.ரி.ரி.ஈ இனைப் பிரித்தெடுப்பது எந்தவித வெளிப்படையோ புறக் கண்காணிப்போ இன்றி நடைபெற்றது. சந்தேகிக்கப்பட்ட சில எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதோடு ஏனையோர் மாயமானார்கள்.

நிர்வாணமான பெண் உறுப்பினர் புகைப் படங்கள் மற்றும் படச்சுருள்கள் அவர்கள் கற்பழிக்கப்பட்டதை அல்லது பாலியல்ரீதியில் தாக்கப்பட்டதைக் குறிப்பதாகவுள்ளன.

விசாரணையின் போதான சித்திரவதை தொடர்ந்தது. எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் வெவ்வேறு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்கள், ஐசிஆர்சி, இலங்கை மனித உமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய முகவர்களின் கண்காணிப்பின்றி, வருடக்கணக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

(உ) வெள்ளை வேன்களை உள்ளிட்ட கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற பல்வகையான அச்சுறுத் தல்கள் மூலம் ஊடகங்களையும் ஏனைய விமர்சகர்களையும் பயறுத்தி மௌனம் சாதிக்க வைக்க அரசாங்கம் முனைந்தது. .

177.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய குழுவின் விளக்கம் எல்.ரி.ரி.ஈ புரிந்துள்ள ஆறு அடிப்படை வகுதிகளைச் சேர்ந்த பாரிய நிலைத்தகவுள்ள மீறல்களை வெளிப்படுத்துகிறது:

(62)
(அ) தாக்குதலைத் தடுப்பதற்காக பொதுமக்களைப் பொறியாகப் பாவித்தல்.

யுத்த களத்தில் நிலவிய பாய ஆபத்துக்கள் மற்றும் பயங்கரமான நிலைமைகளைக் கவ னியாது, எல்.ரி.ரி.ஈ பொதுமக்களை வெளியேற அனுமதிக்காது, அவர்களைப் பணயக் கைதிகளாகவும் சில சமயங்களில் அவர்களுக்கும் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான தாக்குதலைத் தடுப்பதற்கான பொறியாகவும் பிரயோகித்தது.

எல்.ரி.ரி.ஈ அதன் தலைமைத்துவத்தைப் பாதுகாக்க போரிட்டபோது அது பொதுமக்களைத் தேவையற்றவர்கள் என தொடர்ச்சியாக பலிகொடுத்தது. பொதுமக்களை வெளியேற விடாது எல்.ரி.ரி.ஈ தடுத்த காரணத்தினால் யுத்தத்தில் மொத்தம் மடிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

(ஆ)எல்ஈ கட்டுப்பாட்டில் இருந்து தப்ப முனைந்த பொதுமக்களை கொலை செய்தல்.

2009 பெப்ரவரி முதல், யுத்த வலயத்தில் இருந்து தப்ப முயற்சிக்கும் பொதுமக்களைச் சுடும் கொள்கையினை எல்.ரி.ரி.ஈ கடைப்பிடித்தது. இதனால் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகத்தது. பொதுமக்கள் தப்பிச் செல்லும் இடங்கள் மீது அது உறுப்பினர்களை நிறுத்தி நீரில் தடுமாறி அல்லது கண்ணி வெடிகள் நிறைந்த இடங்களைத் தாண்டி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கிச் செல்லத் தடுமாறிக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. அப்போது சிலர் நீரில் மூழ்கி மரணித்தனர்.

(இ) பொதுமக்களிடையே இருந்து இராணுவ உபகரணங்களைப் பாவித்தல்.

இடம் பெயர்ந்த மக்களுக்கிடையே யுத்த சூன்ய வலயத்தில் இருந்து எல்.ரி.ரி.ஈ எறிகுண்டுகளைச் செலுத்தியதோடு, இடம் பெயர்ந்தோர் இருக்கும் இடங்களில் இருந்து அல்லது ஆஸ்பத்திரிகள் போன்ற பொது இடங்களில் இருந்து துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் அல்லது இராணுவ உபகரணங்களைக் களஞ்சியப்படுத்தி வைத்தனர்.

இலங்கை இராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதையும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் அறிந்திருந்தும் அவர்கள் அவ்வாறு செய்தனர். சில சமயங்களில் பொதுமக்களிடையே இருந்து சுட்டுவிட்டு பொதுமக்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து விரைவாக அகன்று விடுவார்கள்.

(ஈ)சிறுவர்களைக் கட்டாயமாக அணிதிரட்டல்.

யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதிலும் கட்டாயமாக ஆட்சேர்க்கும் கொள்கையினை எல்.ரி.ரி.ஈ கடைப்பிடித்த போதிலும், இறுதிக் கட்டங்களின் போது 14 வயதுச் சிறுவர்கள் உள்ளிட்ட சகல வயதுக்குட்பட்டவர்களையும் ஆட்சேர்ப்பதில் அது தீவிரமாக ஈடுபட்டது.

ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பிள்ளைக்கு மேல் அது ஆட்சேர்த்ததோடு, சாவதற்கென்ற தம்பிள்ளைகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க முனைந்த உறவுகளைத் அவர்கள் தாக்கி னர். இக் கொள்கை மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் எல்.ரி.ரி.ஈ எதிர்நோக்கி நம்பிக்கை அற்ற நிலைமையிலும் செயற்படுத்தப்பட்டது.

யுத்த வலயத்துக்கு வெளியேயும் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள்: ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 10

(63)
(உ) வலுக்கட்டாய உழைப்பு.

தனது சொந்தப் பாதுகாப்புக்காக அகழிகளைத் தோண்டுதல் மற்றும் அரண்களை அமைப்பது மூலம் தம் பாதுகாப்பு அணிகளை உறுதிப்படுத்துவதற்காக எல்.ரி.ரி.ஈ பொதுமக்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதோடு, அப்படிச் செய்வதன் மூலம் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே உள்ள வேறுபாட்டினை தெளிவற்றதாக்கினர். இதனால் பொதுமக்களை ஷெல் தாக்குதலுக்கான மேலதிக ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.

(ஊ) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொலை செய்தல்.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, யுத்த வலயத்துக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் அதன் கொள்கையை எல்ஈ தொடர்ந்தும் கடைப்பிடித்தது. யுத்தத்தின் முந்திய கட்டங்களுடன் ஒப்பீட்டளவில், அத்தகைய தாக்குதல்களை நடத்து வதற்கான அதன் திறன் குறைந்திருந்த போதிலும், 2009 பெப்ரவ 09 ஆம் திகதி முல்லைத்தீவு பிரிக்கும் மத்திய நிலையத்தில் 30 பேர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதல், 2009 மார்ச் 10ஆம் திகதி சுமார் 15 பேர்களைக் கொன்ற அமைச்சர் மஹிந்த விஜேசேகர மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஆகியவற்றை உள்ளிட்ட பல தாக்குதல்களை அது யுத்த வலயத்துக்கு வெளியே மேற்கொண்டது.

ஐங. குற்றச்சாட்டுக்களை சட்டதியாக சீர்தூக்கிப் பார்த்தல்

178.
அத்தியாயம் ஐஐஐ இல் விளக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நம்பகமானவை என்ற குழுவின் தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்களின் சட்ட ரீதியிலான தகைமைகளை அது இப்போது ஆராயும்.

இந்த மதிப்பீட்டை அதன் ஆணை தேவைப்படுத்துகிறது. மேலே குற்றம் சாட்டப்பட்ட நிகழ்வுகள் சட்டத்தை மீறும் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களா மற்றும், அவை நிகழ்ந்தன என பின்னர் நிரூபிக்கப்பட்டால், மீறல்களா என்ற கேள்விக்கு இப்படியாக இக்குழு கவனம் செலுத்துகிறது.

மேலும், தற்போதைய மதிப்பீடு குற்றச் சாட்டுக்களைச் சட்டப்படியாக வகைப் படுத்தலுக்கு மட்டுப்படுகிறது. ஏதுமொரு குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தை மீறுவதாக இல்லை என்ற குழுவின் கருத்து அதன் பின்னணியில் உள்ள நடவடிக்கையை அது அனுமதிக்கிறது என்பதாகாது. அத்தியாயம் ஐஐஐ இன் இறுதியில் இனங்காணப்பட்ட குற்றச்சாட்டுக்களின் வகுதிகளை குழு சீர்தூக்கிப் பார்க்கிறது.

அ. பொருத்தமான சட்டம்

179.
சர்வதேச மனிதாபினமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உமைகள் சட்டம் ஆகிய இரண்டினதும் குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்களை ஆராய்வதை குழுவின் ஆணை தேவைப்படுத்துகிறது.

இலங்கையில் போன்ற நீண்ட காலயுத்தம் ஒன்றின்போது சர்வதேச மனிதாபிமான சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏற்புடைத்தாகும் என்ற அடிப்படை மற்றும் தர்க்க ரீதியில் நெடுங்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேசச் சட்டம் ஆகியவற்றின் அடிப் படையில் குழு ஆய்வுகளை மேற்கொள்கிறது.

180.
குழுவின் தேவைகளுக்காக, சர்வ தேச மனிதாபிமான மற்றும் மனித உமை கள் சட்டம் ஆகியவற்றை ழுமையாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றின் முக்கிய விதிறைகளை கலந்தாராய்தல் போதுமானதாகும்.

மேலும், சம்பந்தப்படுத்தப்பட்ட மனிதா பிமான மற்றும் மனித உமைகள் சட்டத் தின் விதிறைகள் நாடுகள், சர்வதேச அமைப்பக்கள், நீதிமன்றங்கள், நீதித்துறை போன்ற கண்காணிப்பு அமைப்புக்கள் அத்துடன் ஏனைய நிறுவனங்களால் கணி சமான அளவு விளக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

(64)

1. சர்வதேச மனிதாபிமான சட்டம் 181. இப்போர் நிலைவரம் தெளிவாக உள்நாட்டு ஆயுதந் தாங்கிய மோதலொன்றின் நிலையை அடைந்திருந்ததால், அதாவது, அரசாங்கத்துக்கும் அமைப்பு உருவிலான ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நீண்டகால வன்றை சம்பந்தப்பட்டது, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஏற்புடைத் தாகிறது "நாடுகளுக்கு இடையே அல்லது அரசாங்கம் மற்றும் அமைப்பிலான ஆயுதக் குழுக்களிடையே அல்லது நாட்டுக்குள் அத்தகைய குழுக்களுக்கிடையே நீண்ட கால ஆயுதந்தாங்கிய வன்முறை தீர்வுக்கான வழிமுறையாக நாடப்பட்டால்' ஆயுதந்தாங்கிய யுத்தம் ஒன்று உண்டு, என்பது முன்னாள் யூகொஸ்லாவியாவுக் கான சர்வதேச குற்றவியல் குழுவின் கூற்றாகும்.

குழு ஆராய்ந்த காலப்பகுதியில் இலங் கையில் உள்நாட்டு ஆயுத மோதல் ஒன்று அதற்கான தீவிரத்தன்மையுடன் மேற் கொள்ளப்பட்டது என்பதில் சந்தேக மில்லை அதன் விளைவாக, அரசாங்கம் எல்ஈ யும் இம்மோதலை நடத்திய விதத்தை நிர்ணயிக்கும் சட்டம் சர்வதேச மனிதாபிமான சட்டமாகும்.

182.
1949 ஆம் ஆண்டின் நான்கு ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு இலங்கை ஒரு தரப்பாகும்; சர்வதேசம் சாராத யுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் (உடன்படிக்கை நிபந்தனை ஐஐ) ஜெனீவா உடன்படிக்கைகளுக்கான 1977 ஆம் ஆண்டின் மேலதிக நிபந்தனை களுக்கு அது தரப்பினரல்ல.

எனவே, மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடப்பாடுகள் நான்கு ஜெனீவா உடன்படிக்கைகளின் பொதுவான உறுப்புரை 3 இல் வழங்கப்பட்டுள்ளனவாகும்.

பொதுவான உறுப்புரை 3 இன் முக்கிய ஏற்பாடுகளை மேற்கோள் காட்டுவது பொருத்தமாகும்.

(1) ஆயுதங்களைக் களைந்த அல்லது நோயினால் காயங்களினால், தடுத்து வைக்கப்படுவதினால் அல்லது வேறு கார ணங்களுக்காக தொடர்ந்தும் பங்கேற்க முடியாத படை வீரர்களை உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள், சாதி, நிற, சமய, ஆண் பெண் பாகுபாடு, பிறப்பு அல்லது செல்வம் அல்லது வேறு ஏதே னும் அது போன்ற காரணங்களுக்காக எந்தவொரு வேற்றுமையும் காட்டப்படாது, சகல சந்தர்ப்பங்களிலும் கருணையுடன் நடாத்தப்பட வேண்டும்.

இதற்காக, மேற்சொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் எந்தவொரு நேரத்திலும் மற்றும் எந்த வொரு இடத்திலும் தடைசெய்யப்பட் டுள்ளதோடு தொடர்ந்தும் அப்படியே இருக்கும்.

(அ) குறிப்பாக சகல விதமான கொலைகள், உறுப்பழிவு, கொடூரமாக நடாத்தப் படுதல் மற்றும் சித்திரவதை போன்ற உயிருக்கும் ஆளுக்கும் எதிரான வன்முறை (ஆ) பணயக் கைதிகளாகப் பிடித்தல் (இ) குறிப்பாக அவமானப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் விதத்தில் நடத் துவதைக் கொண்ட சொந்த கௌரவத் துக்குப் பங்கம் விளைவித்தல். . .

(2) காயமடைந்தோரும் நோயாளிகளும் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

(65)

183.
சர்வதேச சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் சம்பிரதாயம் பற்றிய கருத்தை நிர்ணயிப்பதற்காக, அரச செயற் பாடு மற்றும் மனப்பான்மை ஆகியவற்றை ழுமையாக பகுப்பாய்வு செய்யும் ஐசிஆர்சி இன் ஆய்வான, கஸ்டம இன்டர்நெஷனல் ஹூமனிடேயன் லோ (2005) அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய சட்டத்துறை தீர்மானங்கள் மற்றும் சர்வதேச குற்றவியல் குழுக்களின் சட்டம் மற்றும் சட்ட ஆய்வுத்துறை ஆகியவற்றை உள்ளிட்ட பல்வேறு மூலவளங்களில் குழு தங்கியிருந்தது.

2. சர்வதேச மனித உமைகள் சட்டம் 184. அநேகமான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளபடியும் ஆக்கிரமிப்புச் செய் யப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் மதில் ஒன்றை கட்டுவது தொடர்பான சட்ட பின் விளைவுகள் என்ற 2004 ஆம் ஆண்டின் சர்வதேச நீதி மன்றத்தின் ஆலோசனைக் கருத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவாறும் ஆயுதமேந்திய மோதல் நிலைமைகளில் மனித உமைகள் சட்டம் ஏற்புடைத் தாகிறது.

கொங்கோ நிலப்பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆயுதந் தாங்கிய நடவடிக் கைகள் பற்றி 2005 ஆம் ஆண்டில் வழங் கப்பட்ட தீர்ப்பில் இதே நியாயத்தைப் பிரயோகித்து ஆயுதந்தாங்கிய மோதலின் போது சிவில் மற்றும் அரசியல் உமைகள் பற்றிய சர்வதேச நடைறை மரபினை உகண்டா மீறியுள்ளது எனக் கண்டது.

185.
ஆயுதமேந்திய மோதலுடன் சம் பந்தப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான சட் டத்தின் விதிகள் மீது குழு அதன் கவன த்தை ஈடுபடுத்தி, அவற்றுள் பல மனித உரிமைகள் மீறல்களுக்குச் சமமாகிறது என்பதை இனங்காண்கிறது. 2009 மே 19 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மனித உரிமைகள் சட்டம் தோ தான ஒரே சட்டத்தொகுப்பாக ஆகியுள் ளது.

இவ்வாறாக, யுத்தத்தை நடாத்துவதற் குப் புறம்பான மனித உரிமைகள் மீறல்கள் பற்றி மாத்திரமே குழு நடவடிக்கை எடுக்கிறது.

186.
சிவில், கலாசார, பொருளாதார, அரசியல் மற்றும் சக உரிமைகள் விவ காரங்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக் கைகள் மற்றும் சித்திரவதையைத் தடை செய்யும் அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன் படிக்கைகள் ஆகியவற்றுக்கு இலங்கை ஒரு தரப்பாக உள்ளது.

ஐசிசிபிஆர் உடன்படிக்கையின் 4 ஆம் உறுப்புரையின் கீழான சில ஏற்பாடுகளைத் தள்ளுபடி செய்வதாக இலங்கை 2000 மே 20 ஆம் திகதி செயலாளர் நாயகத்துக்கு அறிவித்ததோடு, 2010 யூன் 4ஆம் திகதி, கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் அத்துடன் வழக்கைத் துரிதப்படுத்தல் ஆகிய உய செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட உறுப்புரை 9(3) இனைத் தவிர்ந்த உடன் படிக்கையின் எல்லா ஏற்பாடுகளில் இருந்து நீங்கிக் கொள்வதாக செயலாளர் நாயகத்துக்கு இலங்கை அறிவித்தது.

187.
தள்ளுபடி செய்வது சட்டப்படி செல்லுடியாகுமா என்பது பற்றி நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு குழு ஐசிசிபிஆர் இன் பொருத்த மான சகல ஏற்பாடுகளையும் பின்வருமாறு ஆராய்கிறது.

(66)

188.
எல்ஈ யினை பொறுத்தவரை யில், நாடல்லாத பாத்திரங்கள் விதிமுறைக்கேற்ப மனித உரிமைகள் உடன்படிக்கையொன்றுக்கான தரப்பினராக முடியாதபோதிலும், நாடொன்றின் இடப்பரப்பினுள் நடைமுறையிலான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் நாடல்லாத குழுக்கள் அப்பிரதேசத்தில் மனிதர்களின் அடிப்படை மனித உமைகளை மதிக்க வேண் டும் என்பது இப்போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதொன்றாகும்.

பாதுகாப்புச் சபையை உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புக்கள் அத்தகைய பாத்திரங்கள் மனித உரிமைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளன. சர்வதேச பாத்திரங்களுக்கிடையே இவ்விடயம் பற்றிய கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதை குழு இனங்கண்ட போதிலும், குறைந்த பட்சம், உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதிகப் பாதுகாப்பு மக்களின் முழுமையான தன்மை அத்துடன் சித்திரவதை மற்றும் கொடூரத் தன்மை, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவாக நடத்துதல் மற்றும் அத்தகைய தண்டனை ஆகியவற்றிலிருந்து விடு தலை ஆகியவற்றை உள்ளிட்ட அநேக மான மனித உரிமைகளை அதன் அதிகாரத்துக்குள் இருக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்த எல்ஈ கடமைப்பட்டுள்ளது என்ற கருத்தை குழு கொண்டுள்ளது.

ஆ, பொருத்தமற்ற போர் நடவடிக்கை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் 189. இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் பகிரங்கமாக வெளியிட்ட குறிக்கோள்களோ (அரசாங் கத்தைப் பொறுத்தவரை பயங்கரவாதத்துக்கு எதிராகச் போர்தொடுத்தல் மற்றும் எல்ஈ இனைப் பொறுத்த வரை தனி நாட்டுக்காகப் போர் புரிதல்) இரு தரப் பினரும் கடைப்பிடித்த நடைறைகளின் பொருத்தமற்ற தன்மையோ தரப்பினருக்கு சர்வதேச மனிதாபிமான சட்டம் ஏற்றுடைத்தாகுவதில் தாக்கத்தை ஏற்படுத் தாது. தனது தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காகவும் பயங்கரவாதத்தில் ஈடுபடக்கூடிய கிளர்ச்சியாளர்களை உள்ளிட்ட, ஆயுதந்தாங்கிய தாக்குதல்களில் இருந்து அதனைப் பாதுகாத்துக் கொள்ளவும் சர்வதேச சட்டத்தின் கீழ் நாடொன் றுக்கு உரிமை உண்டு.

அந்த நோக்கங்களை அடைவதற்கு எந்த முறையையாவது பயன்படுத்துவதை அந்நோக்கங்கள் நியாயப்படுத்தாது அத் தகைய சட்டபூர்வமான தேவைகளுக்கான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத் தின் தேவைப்படுத்தல்களுக்கு இயைவாக இருத்தல் வேண்டும்.

190.
இவ்வாறாக, சர்வதேச மனிதாபி மான சட்டம் எல்ஈ இனைப் போன்றதொரு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நாடு களின் நியாயபூர்வமான கவலைகளை மதிக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக, சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு, அதுவும் சர்வதேச சட்டத்துக்கு அந்த யுத்தம் அப்பாற்பட்டது என கடந்த பல வருடங்களாக இலங்கையில் சிவில் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் விடுத்த அறிக்கைகள் பிழையானதாகும். மேலும், ஒரு தரப்பினன் மீறல்கள், பொதுவான நியதியின்படி, மற்றத் தரப்பினர் சட்டத்தின் கீழான அதன் கடப்பாடுகளை இடைநிறுத்துவதற்கு அனுமதியளிக்காது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத் தின் அடிப்படையான நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் வாத மூலக் கூற்று மாகும்.

(67)

இ. சட்ட ரீதியிலான பொறுப்பு வகைகள் 191. குற்றச்சாட்டுக்களின் சட்டபூர்வ மான சுபாவத்தை ஆராய்வதில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் கடப்பாடுகளை விதிக்கும் பல்வேறு குழுக்களையும் அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களுக்கு பொறுப்பு யார் என்பதையும் குழு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

மூன்று வகையான பொறுப்புக்களை குழு கவனத்திற் கொள்கிறது. அரசின் பொறுப்பைப் பொறுத்தவரை, குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்கள் உண்மையெனக் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பா என்ப தாகும். சர்வதேசச் சட்டத்தின் கீழ், இல ங்கை அரசின் செயல்களுக்கு மாத்திரம் அரசின் பொறுப்பு தோதானதாகும்.

அரசின் அறிவுறுத்தல்களுக்கேற்ப அல்லது அதனால் பணிக்கப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டு நாடு சாராத பாத்திரங்களின், அதாவது துணைப் படைக் குழுக்கள் அல்லது தனிப் பிரஜைகளின் நடவடிக்கைகளுக்கு அரசு பொறுப்பாகும்.

சர்வதேச மனிதாபிமான சட்டம் இவ் விடயத்தில் எல்ஈ இனை உள்ளிட்ட நாடல்லாத ஆயுதக் குழுக்கள் மீது கடப் பாடுகள் விதிக்கிறது என்பதை இனங் காணும் மனவுருவாக அமைப்பிலான பொறுப்பு உள்ளது.

ஈ. இலங்கை அரசாங்கத்தின் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் 192. இலங்கை அரசாங்கத்தின் நட வடிக்கை தொடர்பாக ஐந்து வகையான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை அத்தி யாயம் ஐஐஐ இனங்காண்கிறது. சட்டப்படி யான மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டின் ஒவ்வொரு வகுதி பற்றிய குழுவின் மதிப் பீட்டினை இவ்வத்தியாயம் வழங்குகிறது.

1. பரவலான செல் தாக்குதல் லம் பொதுமக்களை கொலை செய்தல் (அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொதுவான உறுப்புரை 3.

193.
பொது உறுப்புரை 3 இன் பந்தி (1) உட்பந்தி (அ) வின் படி, இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தன மான ஷெல் வீச்சு காரணமாக பொது மக்கள் கொல்லப்பட்டதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள்.

மூன்று யுத்த சூன்ய வலயங்கள் மீதான தாக்குதல்களை இது உள்ளடக்குகிறது.

கண்மூடித்தனமாகச் ஷெல் வீச்சு கொலை க்கு நிகராகுமா என்பது தொடர்பாக, "பீரங்கித் தாக்குதல் போன்ற தாக்குல் ஒன்றுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு.

அதன் விளைவாக பொது மக்கள் மரணித்தால், அத்தகைய தாக்குதல்களை நடாத்துபவர்கள் அத்தகைய தாக்குதல்கள் மரணத்தை விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்திருந்தால், அத்தகைய மரணங் களை கொலை என வகைப்படுத்தப் படலாம்' என்பதாகச் சர்வதேச சட்ட ஆய்வுத்துறை ஏற்றுக்கொள்கிறது.

(ஆ) போராளிகள் மற்றும் பொது மக்கள் ஆகியவர்களுக்கிடையிலான வேறுபாட்டுக்கான தேவை 194. சர்வதேச மனிதாபிமான சட்டத் தின் படி, "மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சகல சந்தர்ப்பங்களிலும் பொது மக்கள் மற்றும் போராளிகள் ஆகியவர்களை வெவ்வேறாக பிரித்தறிய வேண்டும். போராளிகளை நோக்கி மாத்திரமே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என் பதோடு பொதுமக்களை நோக்கி மேற்கொள்ளப்படலாகாது' (விதி 1, ஐசிஆர்சி ஆய்வு).

(68)

195.
பிரித்தறிவதின் அடிப்படைக் கோட்பாட்டை இலங்கை அரசாங்கம் மதிக்கவில்லை என்பதை நம்பத்தகுந்த குற்றாசட்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட அதன் இராணுவ நடவடிக்கைகள் பூஜ்ய பொதுமக்கள் தாக்கத்தைக் கொண்டிருந்தன என அரசாங்கம் கூறிய போதிலும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் காயமடைந்தும் மரணித்தும் உள் ளார்கள் என்பதை நம்பகமான மதிப்பீடுகள் காட்டுகின்றன். யுத்த வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் எண்ணிக்கை பற்றிய மிகக் குறைவான மதிப் பீட்டையும் அது வழங்கியதை இவற்றுடன் சேர்த்து பார்க்கும் போது, யுத்த வலயத்தில் இருந்த பலரை அல்லது அநேகமானவர்களை எல்ஈ உடன் சம்பந்தப்படுத்தி இந்த மூலக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள அது தவறியுள்ளது என்பதை இவை குறிக்கின்றன.

(இ) பொதுமக்கள் அல்லது பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது மீதான தடை 196. பொதுமக்கள் அல்லது பொது மக்கள் இலக்குகளைத் தாக்குவதை சர் வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

இராணுவ இலக்குகள் மற்றும் போராளி களுக்கு எதிராக மாத்திரம் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் (விதி 7, ஐசிஆர்சி ஆய்வு). "மரபு ரீதியிலான சர்வதேச சட்டத்தில், பொதுமக்களை இலக்குப் பார்ப்பது நிபந்தனையற்ற மற்றும் சந்தேகமற்ற விதத்தில' தடைசெய்யப்பட்டுள் ளது. மேலும், பகை நடவடிக்கைகள் காரணமாக காயமடைந்த, நோயுற்ற மற்றும் பொதுமக்கள் தங்குவததற்காக அமைக்கப் பட்ட வலயம் ஒன்றின் மீது தரப்பினர் தாக் குதலை மேற்கொள்ளக் கூடாது (விதி 35, ஐசிஆர்சி ஆய்வு).

யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்களுக்கு அண்மித்து எல்ஈ இருந்தது தொடர்பாக, ஐசிவை இனை உள்ளிட்ட சர்வதேச நீதி மன்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மீதான தடை சனத்தொகையைப் பாது காக்கும் விதத்தில் "அதிகமான பொதுமக்களைக் கொண்டது' என விளக்கமளித் துள்ளன, 197. இலங்கையைப் பொறுத்த வரை, தனியார் பொறுப்புச் சட்டத்தின் சூழ் நிலைப் பொருத்தத்தின் அடிப்படையில் இத்தடையின் மனோதத்துவ அடிப்படைக் கூறினை கவனத்துக்கெடுத்துக் கொள்வது அசியமாகும்.


ஐ.சி.ஆர்.சி.க்கு கடுமையான தடைகள் ஏற்படுத்தப்பட்டன: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 11

(69)

198.
வேண்டுமென்றே அல்லது கண்மூடித்தனமாக, பொதுமக்களைத் தாக்கு வதற்கான அத்தகைய நோக்கத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, "பொதுமக்களை இலக்குப் பார்ப்பதற்கான நோக்கத்தை நிரூபிக்க முடியும். நேரடி அல்லது மறைகமான சாட்சியங்களைக் கொண்டு குறிப்பிட்டதொரு தாக்கமடைவோர்களைத் தாக்குவதற்கான நோக்கத்துக்கான தேவை இல்லை என்பதோடு, மாறாக பொதுமக்கள் சனத்தொகையை அத்துடன் குறிப்பிட்ட பொதுமக்களை தாக்குதலின் நோக்காகக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது' என ஐ.சி..வை குறிப்பிட்டுள்ளது. தாக்குத லுக்காக மேற்கொள்ளப்பட்ட முறைகள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்துள்ள தூரம் மற்றும் வெடியின் மூலம் அத்துடன் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தோற்றம் ஆகியவற்றை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்ட விடயம் சார்ந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு எதிராகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஊகித்தறியலாம்.

199.
இலங்கை இராணுவம் பொதுமக்களைத் தாக்குதலுக்கான தன் இலக்காகப் பாவிக்கவில்லை என்றும் எல்...ஈ.க்கு எதிராகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட் டது என்ற ஏதும் வாதம் தொடர்பாக, சட்ட ப்படியான இராணுவ இலக்கை நோக்கி அதே நேரத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பொதுமக்களையும் இலக்காகக்கொண்டிருந்தால், அத்தகையதொரு தாக்குதல் சட்டவிரோதமானதாகும்.

சட்டப்படி இலக்கினைத் தாக்குவதற்காக இலங்கை இராணுவத்திடம் குறிப்பாக ஆளில்லாத வேவு விமானம் போன்ற ஆயுதங்கள் இருந்ததோடு இலங்கை இராணுவம் பொது இலக்குகளை தாக்கும் போது வன்னிக் கட்டளைத் தளபதி மற்றும் ஏனைய அரசாங்க அதிகாகள் அதுபற்றிப் பலறை அறிவிக்கப்பட்டனர்.

மேலும், ஆஸ்பத்திகளைப் பொறுத்தவரை, சில ஆஸ்பத்திகளில் காயமடைந்த எல்...ஈ. யினர் இருந்திருக்கக் கூடுமென்றிருந்தாலும் அவ்வாஸ்பத்திகள் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக மாறாது என்பது தொடர்பில் சட்டம் தெளிவாகவேயுள்ளது.

அவை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்ட சிவிலியன் இடங்களாகவே இருக்கும்.

200.
இவ்வாறாக, இலங்கை இராணு வம், வேண்டுமென்றே அல்லது கண்மூடி த்தனமாக யுத்த சூன்ய வலயத்தில் பொது மக்களையும் உணவு விநியோக வசைகள் உள்ளிட்ட ஆஸ்பத்திகள் மற்றும் ஏனைய மனிதாபிமான இலக்குகளையும் கொண்ட பொதுமக்கள் இடங்களைத் தாக்குவது தொடர்பான தடையை மீறியுள்ளதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பது குழுவுக்குத் தெளிவாகிறது மேலும், அரசாங்கத்தின் உந்துதல் மீது பொதுமக்கள் சென்ற யுத்த சூன்ய வலயங்களுக்குக் குறுக்கே குறிப்பாக, செல்வீச்சுக்கள் மேற் கொள்ளப்பட்டதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள், அத்தகைய தாக்குதல்களைத் தடை செய்யும் பொதுவான விதியை மீறி யதையும் குறிப்பதோடு, அதன் பிரதான நோக்கம் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதாகும். (விதி 2, ஐ.சி.ஆர்.சி ஆய்வு)

--தொடர்ச்சி அடுத்த பதிவுகளில் வரும்..

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.